.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 27 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-06


 குருஷேத்ர போரில் பாண்டவர்களின் படை தளபதிகளுள்  ஒருவரான திருஷ்டகேது சேதி நாட்டை சேர்ந்தவன். மேலும் இவன் சிசுபாலனின் மகன் ஆவான்.



வத்ஷம்:

         இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் கோசம் என்ற சிறிய  நகரமே அன்றைய வத்ச நாடு ஆகும். குசம்பி இதன் தலைநகரம்.

        மகாபாரதத்தில் பல இடங்களில் வத்ச பூமி என்று வத்ச நாடு  பற்றி பல குறிப்புகள் வருகின்றன. மகாபாரதம் (I:188) திருச்டதும்ணன் பாஞ்சாலியை பார்த்து அவளை மணக்க காத்திருக்கும் மன்னர்களின் பெயரை வாசிக்கும் பொழுது  ஸ்ருடயு, உலுக, கிட்டவ, சிற்றங்கட மற்றும் சுவங்கட , வத்சராஜா(King of Vatsa Kingdom) என்று குறிப்பிடுகிறான்.


குரு:

      குரு நாடு இன்றைய ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்திரபிரதேஷ பகுதிகளை கொண்டது. ரிக்வேதத்தில் உள்ள குறிப்புகளின் படி சப்த சிந்து (ஏழு நதிகளின் பகுதி) பகுதியில்  முதன் முதலில் ஆரியர்கள் குடியேறினர். ஆரியர்கள் முதலில் குடியேறியது குரு நாடு.

        குரு நாட்டின் தலைநகரம் ஹஸ்தினாபுரம். ஒரு சமயம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஹஸ்தினாபுரம் அழிந்ததால் அதன் தலைநகரம் கௌஷம்பிக்கு மாற்றப்பட்டது. இதன் காலம் கி.மு 1200–கி.மு800 என வரையருக்கபடுகிறது .

பாஞ்சாலம்:



            பாஞ்சால நாடு இன்றைய  உத்தர்கந்த், உத்திரபிரதேஷ சில பகுதிகளை கொண்டது. இதன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு. பாஞ்சால நாடு வேதகாலத்தில் ஒரு சிறப்பான நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடாகும். கி.மு 4 ஆம் நூற்றாண்டு அளவில் அது மகத நாட்டுடன் இணைக்கப்பட்டது.


மத்சம்:

       மத்ச நாடு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரம் ஆகும். இதன் தலைநகரம் விரடநகர (இன்றைய பிராத்). மிக சிறந்த தேசமாக விளங்கிய மத்ஸ்ய ராஜ்ஜியம் புத்தரின் மறைவுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாட்டு மன்னர்களால் கைப்பற்றப்பட்டது

சூரசேனம்:


       கி.மு 6 ஆம் நூற்றாண்டில் மகாஜன்பதங்களில் ஒன்று. இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் பராஜ் பகுதியை  கொண்டது. மெதோர இதன் தலைநகரம்.


அஷ்மகம்:


 கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த ராஜ்ஜியம். கோதாவரி, மஞ்சிற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை கொண்டது. 16 மகாஜனபதன்களுள் இது ஒன்றே தென்இந்திய பகுதியை  கொண்டது. விந்திய மலை பகுதியில் இது அமைந்துள்ளது. இன்றைய நிசாமாபாத், அடிலாபாத் பகுதிகள். வானவியல் அறிஞரான ஆரியபட்டா அஷ்மகம் பகுதியில் பிறந்தவர் என கூறப்படுகிறது.




 


அவந்தி:


         அவந்தி இன்றைய மல்வ பகுதியை சேர்ந்தது. மகாபாரத, விஷ்ணு புராணம், பிரமபுராணம் போன்ற பல நூல்களில் அவந்தி  பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாபாரதத்தில் அவந்தி சேர்ந்த மக்கள் மிகவும் பலசாலிகள்(மகாவாலா) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


காந்தாரம்:

         இன்றைய வடக்கு பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான்  பகுதியில் காந்தாரம் அமைந்திருந்தது. மிகவும் பழமையான நகரமான இதன் காலம் 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) இதன் முக்கிய நகரமாகும்.

         மகாபாரதத்தில் காந்தாரம் பல இடங்களில் வருகிறது கந்தரி ஹஸ்தினபுரத்தின் அரசரான திருதிராச்டிறரை மணக்கிறாள், மேலும் காந்தரத்தை சேர்ந்த சகுனி பாண்டவர்கள் மீது கொண்ட கோபத்தால் கௌரவர்கள் பக்கம் இருந்து பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது நாம் அறிந்ததே.


 


காம்போஜம்:


             காம்போஜம் 16 மகாஜனபதங்களில் ஒன்று. கிழக்கு காந்தரத்தை ஒட்டி உள்ள பகுதி இது. மகாபாரதத்தின் பல இடங்களில் காம்போஜம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இங்கு இந்தோ ஈரானிய கலாச்சாரம் வளர்ந்த இடம் ஆகும். தற்போது அங்கு ஈரானிய கலாச்சாரமே பெரும்பாலும் உள்ளது.


மகாஜனபதங்களை தொடர்ந்து ஹிந்து மதத்தின் வேறாக கருதப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

படு பிஸியாகி விட்டார் 1000 டன் தங்க சாமியார்!


 பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


65 வயதான இந்த சாமியாரிடம்  ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில் உள்ள மற்றொரு ஆசிரமத்திற்கு மாறியுள்ளார். புலித்தோல் வடிவம் கொண்ட துணியால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மிக அமைதியாக பேசும் இவரது அறையில் மின்சார விளக்குகள் கூட கிடையாது.


 ஏனென்றால், கிராமத்தில் மின்சாரம் கிடையாது. இவரது சீடர்களில் முக்கியமானவர் சுவாமி ஓம். தனது குரு சோபன் சர்க்கார் கூறியவை குறித்து கூறுகையில், ‘‘எனக்கு விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை. என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று யாரையும் அழைப்பதில்லை. எனக்கென்று வங்கி கணக்கோ, சொத்தோ இல்லை. ஆனால், என் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செய்யும் ஆற்றல் என்னிடம் உள்ளது’’ என்றார்.


இவர் சொல்வதைப்போலவே அக்கம், பக்கம் கிராம மக்களுக்கு இவர் மூலம் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை கிடைத்துள்ளது.இந்த சாமியார் அவ்வப்போது 2 சோள ரொட்டி மட்டும்தான் சாப்பிடுகிறார். அதுவும் உடல் பலத்துக்கு தேவை என்பதால், இதை சாப்பிடுகிறாராம். ஆனால் ஆசிரமத்தில் இவரைப் பார்க்க வருபவர்கள் தரும் பரிசு பொருள்கள் உணவுப்பொருள்களை ஏற்றுக் கொள்கிறார். 5 மாநில முதல்வர்கள் இவரின் சீடர்கள். முலாயம் சிங் யாதவ், உமா பாரதி, ராஜநாத் சிங், முதலிய பலர் இவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றுள்ளனர்.

பட்டமளிப்பு விழாக்களில் கவுன் அணியும் வழக்கத்திற்கு ஜனாதிபதி முடிவு !



பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா ஐ.ஐ.டி.யின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றுது.

இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநில கவர்னர் டி.ஒய். பாட்டீல், முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் பட்டமளிப்பு விழா மரபுகளின் படி கவுன் (அங்கி) மற்றும் தொப்பிகளை அணிந்திருந்தனர்.

அப்போது விழா மேடையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நோக்கியவாறு, 'இந்தியாவின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்ற பிறகு தேவையற்ற பல சம்பிரதாய செயல்களுக்கு முடிவு கட்டியுள்ளீர்கள்.

இதைப் போன்ற பட்டமளிப்பு விழாக்களில் கவுன்களை மாட்டிக் கொண்டு பட்டம் வழங்குவதும் பட்டம் பெறுவதுமான இந்த மரபுகளுக்கும் நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கவுனுக்கு பதிலாக வெறும் தொப்பியை மட்டுமே அணிந்து வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் அவர்களுக்கும் வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு தோன்றும்' என்று வேடிக்கையாக கூறினார்.

சிகப்பு நிற அங்கி அணிந்து மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதிஷ் குமாரின் பேச்சை கேட்டு ரசித்து சிரித்தார்.

மிஸ் நியூஜெர்சி பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இந்திய பெண் !

சமீபத்தில் அமெரிக்க அழகிப்பட்டத்துக்கு நீனா தவ்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும் இந்நிலையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரன எமிலி ஷா மிஸ் நியூஜெர்சியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனால் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியி லும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் இவர் கலந்து கொள்ள முடியும் என்பதையடுத்து இவர் மீதும் பழிச சொற்கள் பாய ஆரம்பித்துள்ளதாம்.


26 - lady Emily-Shah-crowned-Miss-New.


அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி அழகிப் போட்டி நடைபெற்றது. அதில் 130 இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அதில் இந்திய வம்சாவளியான 18 வயது எமிலி ஷா அழகிப்பட்டததை வென்றார். இவர் சினிமா துறையில் ஈடுபாடுள்ளவர். ஆலிவுட் மற்றும் இந்திப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில இந்திப்படங்களில் நடித்து வருகிறார். ஆலிவுட் படங்களின் சண்டைக்குழுவில் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல இவருடைய தந்தை பிரஷாந்த் ஷா இந்தி சினிமாப்பட தயாரிப்பாளர் ஆவார்.எமிலி, தற்போது ரன் ஆல்நைட் எனும் ஆங்கில படத்தில் ஸ்டன்ட் அசிஸ்டன்ட் ஆக பணியாற்றுகிறார் என்பது அடிசினல் தகவல்.


Indian-American Emily Shah crowned Miss New Jersey USA.

************************************************


 18-year-old Indian-American Emily Shah has won Miss New Jersey USA 2014 title, following in the footsteps of Nina Davuluri, who was crowned Miss America recently.
Emily would now compete for the Miss America and Miss Universe titles.

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.jsp)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்

26 - tec SweetHome3D

இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.

கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.

மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.

லிங்க் ::http://www.sweethome3d.com/index.jsp

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top