|
Sunday, 27 October 2013
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!
10:39
ram
No comments
' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)
10:14
ram
No comments
வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.
அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.
அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.
அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.
அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.
வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.
' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை பொறுக்குகிறாயே' என்றான் குட்டிக்கண்ணன்.
அதற்கு அம்மா ' கண்ணா ...இந்த அரிசியை கடவுள் பூமியில் நம்மை போன்றவர்கள் உயிர் வாழ படைத்திருக்கிறார்.
அதனால் அதை சிறிதளவும் வீணாக்கக்கூடாது....கீழே விழுந்த அரிசி நமக்கு வேண்டாமென்றால் அதை எடுத்து பறவைகளுக்கும்,எறும்புகளுக்கும் போடலாமே.
அவை அதை உண்ணும்.நாமும் எப்பொழுதும் எங்கும் உணவை வீணாக்ககூடாது என்றாள்.
குட்டிக்கண்ணனும் அது முதல் ஒழுங்காக வீணாக்காமல் உணவை உண்ணத்தொடங்கினான்.
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-06
09:41
ram
No comments
குருஷேத்ர போரில் பாண்டவர்களின் படை தளபதிகளுள் ஒருவரான திருஷ்டகேது சேதி நாட்டை சேர்ந்தவன். மேலும் இவன் சிசுபாலனின் மகன் ஆவான்.
வத்ஷம்:
இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் கோசம் என்ற சிறிய நகரமே அன்றைய வத்ச நாடு ஆகும். குசம்பி இதன் தலைநகரம்.
மகாபாரதத்தில் பல இடங்களில் வத்ச பூமி என்று வத்ச நாடு பற்றி பல குறிப்புகள் வருகின்றன. மகாபாரதம் (I:188) திருச்டதும்ணன் பாஞ்சாலியை பார்த்து அவளை மணக்க காத்திருக்கும் மன்னர்களின் பெயரை வாசிக்கும் பொழுது ஸ்ருடயு, உலுக, கிட்டவ, சிற்றங்கட மற்றும் சுவங்கட , வத்சராஜா(King of Vatsa Kingdom) என்று குறிப்பிடுகிறான்.
குரு:
குரு நாடு இன்றைய ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்திரபிரதேஷ பகுதிகளை கொண்டது. ரிக்வேதத்தில் உள்ள குறிப்புகளின் படி சப்த சிந்து (ஏழு நதிகளின் பகுதி) பகுதியில் முதன் முதலில் ஆரியர்கள் குடியேறினர். ஆரியர்கள் முதலில் குடியேறியது குரு நாடு.
குரு நாட்டின் தலைநகரம் ஹஸ்தினாபுரம். ஒரு சமயம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஹஸ்தினாபுரம் அழிந்ததால் அதன் தலைநகரம் கௌஷம்பிக்கு மாற்றப்பட்டது. இதன் காலம் கி.மு 1200–கி.மு800 என வரையருக்கபடுகிறது .
பாஞ்சாலம்:
மத்ச நாடு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரம் ஆகும். இதன் தலைநகரம் விரடநகர (இன்றைய பிராத்). மிக சிறந்த தேசமாக விளங்கிய மத்ஸ்ய ராஜ்ஜியம் புத்தரின் மறைவுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாட்டு மன்னர்களால் கைப்பற்றப்பட்டது
சூரசேனம்:
கி.மு 6 ஆம் நூற்றாண்டில் மகாஜன்பதங்களில் ஒன்று. இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் பராஜ் பகுதியை கொண்டது. மெதோர இதன் தலைநகரம்.
அஷ்மகம்:
கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த ராஜ்ஜியம். கோதாவரி, மஞ்சிற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை கொண்டது. 16 மகாஜனபதன்களுள் இது ஒன்றே தென்இந்திய பகுதியை கொண்டது. விந்திய மலை பகுதியில் இது அமைந்துள்ளது. இன்றைய நிசாமாபாத், அடிலாபாத் பகுதிகள். வானவியல் அறிஞரான ஆரியபட்டா அஷ்மகம் பகுதியில் பிறந்தவர் என கூறப்படுகிறது.
அவந்தி:
அவந்தி இன்றைய மல்வ பகுதியை சேர்ந்தது. மகாபாரத, விஷ்ணு புராணம், பிரமபுராணம் போன்ற பல நூல்களில் அவந்தி பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாபாரதத்தில் அவந்தி சேர்ந்த மக்கள் மிகவும் பலசாலிகள்(மகாவாலா) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்தாரம்:
இன்றைய வடக்கு பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் காந்தாரம் அமைந்திருந்தது. மிகவும் பழமையான நகரமான இதன் காலம் 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) இதன் முக்கிய நகரமாகும்.
மகாபாரதத்தில் காந்தாரம் பல இடங்களில் வருகிறது கந்தரி ஹஸ்தினபுரத்தின் அரசரான திருதிராச்டிறரை மணக்கிறாள், மேலும் காந்தரத்தை சேர்ந்த சகுனி பாண்டவர்கள் மீது கொண்ட கோபத்தால் கௌரவர்கள் பக்கம் இருந்து பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது நாம் அறிந்ததே.
காம்போஜம்:
காம்போஜம் 16 மகாஜனபதங்களில் ஒன்று. கிழக்கு காந்தரத்தை ஒட்டி உள்ள பகுதி இது. மகாபாரதத்தின் பல இடங்களில் காம்போஜம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இங்கு இந்தோ ஈரானிய கலாச்சாரம் வளர்ந்த இடம் ஆகும். தற்போது அங்கு ஈரானிய கலாச்சாரமே பெரும்பாலும் உள்ளது.
மகாஜனபதங்களை தொடர்ந்து ஹிந்து மதத்தின் வேறாக கருதப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...
படு பிஸியாகி விட்டார் 1000 டன் தங்க சாமியார்!
09:14
ram
No comments
பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
65 வயதான இந்த சாமியாரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில் உள்ள மற்றொரு ஆசிரமத்திற்கு மாறியுள்ளார். புலித்தோல் வடிவம் கொண்ட துணியால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மிக அமைதியாக பேசும் இவரது அறையில் மின்சார விளக்குகள் கூட கிடையாது.
ஏனென்றால், கிராமத்தில் மின்சாரம் கிடையாது. இவரது சீடர்களில் முக்கியமானவர் சுவாமி ஓம். தனது குரு சோபன் சர்க்கார் கூறியவை குறித்து கூறுகையில், ‘‘எனக்கு விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை. என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று யாரையும் அழைப்பதில்லை. எனக்கென்று வங்கி கணக்கோ, சொத்தோ இல்லை. ஆனால், என் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செய்யும் ஆற்றல் என்னிடம் உள்ளது’’ என்றார்.
இவர் சொல்வதைப்போலவே அக்கம், பக்கம் கிராம மக்களுக்கு இவர் மூலம் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை கிடைத்துள்ளது.இந்த சாமியார் அவ்வப்போது 2 சோள ரொட்டி மட்டும்தான் சாப்பிடுகிறார். அதுவும் உடல் பலத்துக்கு தேவை என்பதால், இதை சாப்பிடுகிறாராம். ஆனால் ஆசிரமத்தில் இவரைப் பார்க்க வருபவர்கள் தரும் பரிசு பொருள்கள் உணவுப்பொருள்களை ஏற்றுக் கொள்கிறார். 5 மாநில முதல்வர்கள் இவரின் சீடர்கள். முலாயம் சிங் யாதவ், உமா பாரதி, ராஜநாத் சிங், முதலிய பலர் இவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றுள்ளனர்.
பட்டமளிப்பு விழாக்களில் கவுன் அணியும் வழக்கத்திற்கு ஜனாதிபதி முடிவு !
08:38
ram
No comments
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா ஐ.ஐ.டி.யின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றுது.
இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநில கவர்னர் டி.ஒய். பாட்டீல், முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் பட்டமளிப்பு விழா மரபுகளின் படி கவுன் (அங்கி) மற்றும் தொப்பிகளை அணிந்திருந்தனர்.
அப்போது விழா மேடையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நோக்கியவாறு, 'இந்தியாவின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்ற பிறகு தேவையற்ற பல சம்பிரதாய செயல்களுக்கு முடிவு கட்டியுள்ளீர்கள்.
இதைப் போன்ற பட்டமளிப்பு விழாக்களில் கவுன்களை மாட்டிக் கொண்டு பட்டம் வழங்குவதும் பட்டம் பெறுவதுமான இந்த மரபுகளுக்கும் நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கவுனுக்கு பதிலாக வெறும் தொப்பியை மட்டுமே அணிந்து வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் அவர்களுக்கும் வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு தோன்றும்' என்று வேடிக்கையாக கூறினார்.
சிகப்பு நிற அங்கி அணிந்து மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதிஷ் குமாரின் பேச்சை கேட்டு ரசித்து சிரித்தார்.