.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 24 October 2013

ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா - சுற்றுலாத்தலங்கள்!


 
    ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா

ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா
 
 ந்தியாவின் புகழ் பெற்ற குடைவரைக் கோவில்களில் எலிபண்டா குகைகள் முக்கியமானவை. கூடவே... இவற்றில் புதைத்-திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை. 
 மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான தீவு எலிபண்டா. காராப்புரி தீவு என்றும் அழைக்கின்றனர். 17ம் நூற்றாண்டில் போர்ச்சு-கீசியர்களால் கண்டறியப்பட்டது. எலிபண்டா குகைகளில் பலவிதமான புடைப்புச் சிற்பங்களும், சிலைகளும் காணப்படுகின்றன. இவற்றில் திரிமூர்த்தி என்றழைக்கப்படும் சிவன் சிலை அபூர்வமானது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்களின் முகங்களை இவை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. ராஷ்டிரகூடர்களின் அரசுச் சின்னமும் இதுதான் என்பது இன்னொரு ஆச்சரியம். இவை தவிர நடராசர், சதாசிவன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் காணப்படுகின்றன. இவையும் ராஷ்டிரகூடர்களின் காலத்தை சேர்ந்தவையே.

 தீவைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களை, தீவின் முகப்பில் காட்சியளித்துக் கொண்டிருந்த ஒற்றைக்கல்லில் ஆன யானை சிலை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை எடுத்துச்செல்ல முயன்றுள்-ளனர். அது முடியாமல் போகவே அப்படியே விட்டுச் சென்று விட்டனராம். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் அந்த யானைச்சிலையை, மும்பை விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு (தற்போதைய டாக்டர் பாவ் தஜி லாட் மியூசியம்) கொண்டு சென்று வைத்துள்ளனர்.

 யானைச்சிலை ஞாபக-மாகத்தான் எலிபண்டா தீவு என போர்ச்சுகீசியர்கள் அழைத்து வந்துள்ளனர். மேலும்  இதை துப்பாக்கி சுடும் களமாகப் பயன்படுத்திய போர்ச்சு-கீசியர்கள், சுடுவதற்கு இலக்காக சிலைகளை(?) பயன்படுத்தியதாகவும் கூறப்-படுகிறது. அதனால்தான் பல சிலைகள் இங்கு சிதைந்து காணப்படுகின்றன.

வரலாற்று சிறப்புகொண்ட எலிபண்டா தீவு பல பேரரசுகளின் பகுதியாகவும் விளங்கி வந்துள்ளது. கொங்கன்-மவுரியர்கள், திரிகூடர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், அகமதாபாத்தின் முஸ்லிம் மன்னர்கள், மராட்டியர்கள் என பலதரப்பினரின் கட்டுப்பாட்டில் இது இருந்து வந்துள்ளது. ஷென்ட்பந்தர், மோராபந்தர், ராஜ்பந்தர் என மூன்று கிராமங்கள் இங்குள்ளன. ஷென்ட்பந்தரில்தான் குகைகள் அமைந்திருக்கின்றன. மோராபந்தர் அடர்ந்த காட்டுப்பகுதியாகும்.

 ஆச்சரியங்களைக்கொண்ட, அழகான எலிபண்டா தீவுக்கு படகில்தான் செல்ல முடியும். மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் உள்ள அப்போலோ பந்தரில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் படகில் சென்று விடலாம். காலை 9மணி முதல் மாலை 5மணி வரைதான் குகைகளைக் காண அனுமதி. கட்டணம் உண்டு. யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச்சின்னங்கள் பட்டியலில் எலிபண்டா குகைகள் 1987ம் ஆண்டில் இடம் பிடித்தன

500 திரையரங்குகளில் வெளியாகும் ஆரம்பம்!

கடந்தாண்டை போலவே இந்த தீபாவளிக்கும் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.

காரணம், மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. அதன்படி, அக்டோபர் 31ம் தேதி அஜீத் நடித்த 'ஆரம்பம்' படமும், நவம்பர் 1ம் தேதி விஷால் நடித்த 'பாண்டிய நாடு' படமும், 2ம் தேதி கார்த்தி நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படமும் ரிலீசாகின்றன.


இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் ஏற்கெனவே புக் ஆகிவிட்டது. எதிர்பார்த்தது போல் ஆரம்பம் படம் அதிக திரையரங்குகளை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான 750 திரையரங்குகளில் 500 திரையரங்குகளை இப்படம் பிடித்துவிட்டது.

இதே திரையரங்குகளில் உள்ள காம்ப்ளக்ஸ்களில் விஷால் நடித்துள்ள 'பாண்டிய நாடு', கார்த்தி நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்கள் வெளியாகின்றன.


அந்த 2 படங்களும் முறையே தலா 300 திரையரங்குகள் வரை புக் செய்துவிட்டன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி படங்கள் மட்டுமே ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

" கெடுவான் கேடு நினைப்பான்" (நீதிக்கதை)



ஒரு காட்டில் அரசன் ஒருவன் இருந்தான்.
அவன் நாட்டு மக்களிடம் கொடுமையாக நடந்து வந்தான்.
ஒரு நாள் அவன் வேட்டைக்கு காட்டிற்குப் போனான்.
அங்கு ஒரு நாய் நரி ஒன்றை துரத்தி ஒடியது.நரி அதனுடைய பொந்திற்குள் செல்வதற்குள் அதன் காலை நாய் கடித்து நரியை நொண்டியாக்கியது.

அதே நாய் ஊரில் ஒரு மனிதனைப் பார்த்து குரைக்க மனிதன் கல் எடுத்து அதன் மேல் எறிந்தான்,கல் நாயின் காலை தாக்கி அதை நொண்டியாக்கியது.
பின் அந்த மனிதன் ஒரு குதிரையில் ஏறி ஊருக்குச் சென்றான்.ஒரு பள்ளத்தில் குதிரை ஏறி இறங்கியபோது அந்த மனிதன் கீழே விழுந்து ...காலில் அடிபட்டு நொண்டியானான்.

இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு ...ஒருவருக்கு தீமை புரிந்தால் ..அவர்களுக்கு வேறொருவர் தீமை செய்வர் என்று புரிந்தது.

நாட்டிற்கு வந்த அவன் திருந்தி ....குடி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாமும் ஒருவருக்கு கேடு இழைத்தால்...நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்..என்பதை உணரவேண்டும்.

Touch செய்ய முடியாத screen களை Touch Screen களாக மாற்ற E-touch Pen..






பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு நான் எதோ உங்களை ஏமாத்துவது போல இருக்கும், ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன்.

Jeswill HiTech Solutions Pvt. Ltd. என்ற நிறுவனம் E-touch pen என்ற கருவியை உருவாக்கியுள்ளது.. Microsoft நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக்கும் Windows 8 ஐ பல பேர் பாவனை செய்கிறார்கள். 

ஆனால் அதன் உண்மையான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் தொடுதிரையான monitor அல்லது laptop வாங்குவது என்பது மினக்கெட்ட வேலை. காசு நிச்சயமாக இந்திய ரூபாய் 1௦௦௦௦ க்கு கிட்டத்தட்ட வரும். 

ஆனால் இந்தக் கருவி குறைந்த விலை அதாவது கிட்டத்தட்டஇந்திய ரூபாய்  நான்காயிரம் அப்படித் தான் வரும். இந்தக் கருவி பற்றித்தான் நாம் சற்று இங்கு பாப்போம்...

இது ஒரு பேனைப் போன்ற வடிவம் கொண்டது. இதில் ULTRA SOUND , infrared தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. இது விண்டோஸ் 8 க்கு என வடிவமைக்கப்பட்டது. 


இந்தப் பேனை விசேடமாக refill , battery என்பனவற்றுடன் வரும் 


நீங்க தொடுதிரயாக மாற்ற மூன்று சாதனங்கள் இதையும் சேர்த்து வரும்...

base unit ஒன்று வரும்...


USB Cable..


இந்த வீடியோவைப் பாத்தீங்கன்ன உங்களுக்கு விளங்கும்....

தூக்கம் பற்றிய சில விழிப்புணர்வு தகவல்கள்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.


24 - Health -Sleeping-Positions

ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள்(inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது. பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு.

மேலும் மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்றும இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
அத்துடன் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக்#கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல்  குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top