.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 22 October 2013

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்..

  டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற...

ஓட ஓட.. ஓட ஓட தூரம் குறையலையா?

இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது. ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். குறிப்பாக நட்பு, உறவு வட்டாரங்களைப் பெருமளவில் இழந்துள்ளோம். வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களில் எத்தனை பேர் நண்பர்கள் என்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. காரணம், அத்தனை சுலபத்தில் காலம் ஓடிவிடுவதும், தொடர்புகள் துண்டித்திருப்பதும்தான். சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தோமேயானால் நம்மோடு பழகியவர்கள், சந்தித்தவர்கள் என பெரிய பட்டியலே இருக்கும்....

“சூர்யா எல்லாம் எனக்கு அண்ணனா?” – கார்த்தி ஸ்பெஷல் பேட்டி!

இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளியாம்.காரணம்- இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான். எனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி.   இனி கார்த்தியின் நேர்காணல்… இந்த தீபாவளி உங்களுக்கு ஸ்பெஷல் தானே? “நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன்.இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக ஸ்பெஷல்தான். இப்போதுதான் இந்த ஆண்டு தான் எனக்கு தீபாவளி ரிலீஸ் படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன். ‘ இத்தனை ஆண்டுகளில் எட்டே படங்கள் போதுமா? “ஒரு ஹீரோவாக பார்க்கும்...

1000 டன் தங்கவேட்டை தொல்பொருள் துறைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

   உத்தர பிரதேசத்தில் 19ம் நூற்றாண்டு மன்னரின் கோட்டையில் 1000 டன் தங்கம் உள்ளதா என்று தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் துறைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உ.பி. மாநிலம் உன்னவோ மாவட்டம் தான்டியா கேரா கிராமத்தில் 19ம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஷ் வாழ்ந்த அரண்மனை உள்ளது. இக்கோட்டைக்குள் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத் திருப்பதாகவும், அதை தோண்டி எடுக்கும்படி தனது கனவில் வந்து ராஜா ராம் ராவ் பக்ஷ் கூறியதாகவும் சோபன் சர்கார் என்னும் சாமியார் கூறினார். இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கடந்த 18ம் தேதி முதல் கோட்டையில் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,...

தலைவலியா... காய்ச்சலா...? இலவச மருத்துவ ஆலோசனைக்கு ‘104’க்கு போன் செய்யுங்க!

 பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலிமெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.குறிப்பிட்ட நோய் குறித்த தகவல்களை, முதலுதவி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை நோயாளியோ, உறவினரோ இந்த 104ல் தொடர்பு கொண்டு அறியலாம்....
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top