..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உலக அழகி ஒலிவியா கல்போ. 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று உலக அழகி ஒலிவியாவை வைத்து தாஜ்மகாலில் படப்பிடிப்பு நடத்தியது. ஒலிவியா விதவிதமான மாடல்களில் செருப்புகளை அணிந்து இருந்தார்.
மேலும் தாஜ்மகாலில் உள்ள ‘டயானசீட்’ என்ற இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார். இது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா நினைவாக சலவைக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.1992–ல் டயானா ஆக்ரா வந்து தாஜ்மகாலை பார்வையிட்டதன் நினைவாக ‘டயானா சீட்’ உருவாக்கப்பட்டது. இங்குதான் டயானா அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதற்கிடையில் தாஜ்மகாலின் உள்ளே எந்த படப்பிடிப்பும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தடையை மீறி உலக அழகியை வைத்து படப்பிடிப்பு நடத்தியது பற்றி தாஜ்மகால் நினைவுச்சின்ன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உலக அழகி ஒலிவியா கல்போ மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் என்.கே.பதக் தெரிவித்தார்.
Miss Universe in police case over Taj Mahal photos
Indian police said Thursday they had filed a case against Miss Universe for conducting an unauthorised footwear fashion shoot at the Taj Mahal which was slammed as an “insult” by the monument’s caretaker.
சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாக கருதுகிறேன்.
இயக்குநர் கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.
சிங்கம் 2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ‘ஒரு டெஸ்ட் ஷுட்’ செய்து ‘கெட்டப்’ மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.
முன்பே கெளதம் அவர்கள் ‘சென்னையில் ஒரு மழைகாலம்’ படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.
ஆறுமாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.
ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம் அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.
இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும்.
சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.
ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.
கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.
சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.
ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.
எல்லோரும் தொழில் செய்வது லாபம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்தே என்ற போதிலும், லாபத்தைத் தாண்டி தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.
“மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும் நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதையாகின்றன. குறிப்பாக உணவு உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க வேண்டிய - உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, இர வுப்பணி, ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற்பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தா மல் இருப்பது, ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு போன்றவை பிரச்னைகளின் காரணிகள்.
சில சாதாரண விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினாலே பல நோய்களை தவிர்க்க முடியும். இக்கவனம் இல்லாமல் போனதால் எதிர்ப்பு சக்தியை இழந்து, பல நோய்களை நாமே வரவழைக்கிறோம். சில நோய்களை எளிமையாக மூலிகைகள் கொண்டு குணப்ப டுத்த முடியும்... தவிர்க்கவும் முடியும்” என்கிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். இதோ... வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க சில அபூர்வ மூலிகைகள்!பி.கு: தீவிர நிலை நோயாளிகளுக்கு இவை பலன் தராது. மருத்துவர் ஆலோசனையைப் புறக்கணிக்க வேண்டாம்.
நீரிழிவு
இன்சுலின் செடி: இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.
கள்ளிமுடையான்: கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற் றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.
சர்க்கரைக்கொல்லி: கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை. இலையை உலர வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.
சிறியாநங்கை: கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி: தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து பொடியாக்கி, டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது. அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது. இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.
அஜீரணம்
அருவதா: இதனை ‘பிள்ளை வளர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள். இளம் குழந்தைகளின் அஜீரண கோளாறுகளுக்கு நல்லது.
புற்றுநோய்
கோதுமைப்புல் சாறு: கோதுமைப்புல் சாறு சிறந்த நிவாரணி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை ‘பச்சை ரத்தம்’ என அழைக்கிறார்கள். வீட்டிலேயே எளி தாக வளர்த்து தயாரிக்க முடியும். 10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க, பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும். இதனை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண் டும். அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும். இப்போது பெருநகர அங்காடிகளில் பாக்கெட்டுகளில் கோதுமைப்புல் கிடைக்கிறது.
எலுமிச்சம் புல்: எலுமிச்சம் புல் சாறிலுள்ள ‘சிட்ரால்’ வேதிப்பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (கிஜீஷீஜீtஷீsவீs) செய்து கொள்வதாக கூறியுள்ளனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். அதே வேளையில் நல்ல செல்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றும் கண்டறிந்தனர். 2006ல் நடைபெற்ற ஆய்வு இது.
முள்ளு சீதா: ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படுவது முள்ளு சீதா. இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம். அங்குள்ள பழங்குடியினர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த இப்பழத்தை உபயோகிக்கின்றனர். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்றும் அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. தமிழகத்தில் நன்கு வளர்கிறது.
வெண்தேமல்: காலையில் வெறும் வயிற்றில், கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கைப்பிடி சேர்த்து மிக மெதுவாக மென்று விழுங்க வேண்டும். பத்தியம் உண்டு. வெள்ளை சர்க்கரையை ( கீலீவீtமீ ஷிuரீணீக்ஷீ) கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் கோளாறுகள்
சிறுபீளை : சிறுநீரைப் பெருக்கி, சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது.
வாழைத்தண்டு: பொரியல் செய்து உட்கொண்டால் சிறுநீர் கோளாறுகள் குறையும்
மூலநோய்: மெக்சிகோ நாட்டுத் தாவரமான ‘ஐயப்பனா’ (Ayapana triplinervis) அறுவை சிகிச்சை நிலையில் இருக்கும் மூல நோயாளியைக்கூட மிக எளிதாக குணப்படுத்தும் என்கிறார்கள். காலையில் பல் சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சுமார் 5 இலைகளை உட்கொண்டு சிறிது சுடுநீர் அருந்த வேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையைப் பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகக் கூடும்.
சளி, இருமல்
துளசி: துளசிமாடம் இன்றைய வாழ்வியல் முறையில் மறைந்து வருவது வருந்தத்தக்கதே. துளசியில் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப் பிடலாம். இருமல், சளி, ஜலதோஷம், தொற்று நீக்கும். சிறந்த கிருமிநாசினியும் கூட.
தூதுவளை: இதன் இலை கோழையை அகற்றும். தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். சுவாசக் கோளாறுகளுக்கும் நல்லது.
ஆடாதொடை: மிளகுடன் இலையை உண்ண கபத்தை அகற்றும்.
கற்பூரவல்லி: குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஏற்பட்டால் கொடுக்கலாம்.
அழகு
மஞ்சள் கரிசலாங்கண்ணி: உடல் வனப்பு பெறவும், கூந்தல் கருமையாக இருக்கவும் இதனை உபயோகிக்கின்றனர். வள்ளலார் விரும்பிய மூலிகை இது.
ரோஸ்மேரி: மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து இறக்குமதியானது. தேநீருடன் சேர்த்து அருந்த புத்துணர்ச்சி ஏற்படும். அசைவ உணவுக்கு மணமூட்டி சுவையையும் அதிகரிக்கிறது. கூந்தல் பராமரிப்பிலும் அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுகிறது.
நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட கோட்டிங் பாழாகிவிடும்.
நான்ஸடிக் பொருட்களை துடைக்கும் போது மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தால் போதுமானது. உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் போது சோப்புத்தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக்கூடாது.
கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை நான்ஸ்டிக் பாத்திரத்தில் பயன்படுத்தக்கூடாது. மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது. நான்ஸ்டிக் பாத்திரங்களை மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல் அதற்கென்று உள்ள ஆணியிலோ அல்லது தகுந்த இடங்களிலோ மாட்டி பயன்படுத்த வேண்டும்.
பலமுறை உபயோகித்த பின்னர் சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம் பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் ப்ளீச்சிங்பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும் பிறகு மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதிவரும் நிலையில் மரக்கரண்டி கொண்டு கறை போக அழுத்தமில்லாமல் தேய்த்தால் சுத்தமாகிவிடும். பின் சோப்பு நீரில் கழுவி சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.