.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 11 October 2013

இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இதைப் படிங்க!


வங்கிகள்  தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன்  முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி பல வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன
இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை தருவோரிடம் தங்கள் உறவினர் பெயரில் டிபாசிட் செய்ய சொல்கின்றனர். 


பின்னர் சி.பி.ஐ.,அல்லது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது பணம் செலுத்திய நபரின் விவரங்களை வங்கிகளிடம் கேட்கின்றனர். எனவே தான் வங்கி வாடிக்கையாளராக இல்லாதோர் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்தும் போது அடையாள ஆவணங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் முறைகேடான பண பரிமாற்றம் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) அதன் வாடிக்கையாளராக இல்லாதவர்கள் வெளியூரில் உள்ள அதன் வாடிக்கையாளருக்கு பணம் செலுத்தும் போது அந்த நபரின் விவரங்களை அறியும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்துவோர் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும், ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வங்கியில் வழங்கப்படும்,


11 - money rupee

 



அந்த கிரீன் ரெமிட் கார்டு’ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பின் வங்கியில் இருந்து ‘கிரீன் ரெமிட் கார்டு’ என்ற கார்டு வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கார்டு மூலம் ஒருவர் கணக்கில் மட்டுமே பணம் செலுத்த முடியும். அதிலும் ஒரு மாதத்திற்கு ஒருவர் கணக்கில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இதற்காக எஸ்.பி.ஐ. கிளைகளில் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வரவேற்பு காணப்பட்டாலும், பணம் செலுத்த வழங்கப்படும் ‘கிரீன் ரெமிட் கார்டு’க்கு கட்டணம் வாங்காமல் இலவசமாக வழங்குவதுடன் பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Know about Green Channel Counter of SBI


*************************


State Bank of India has started ‘Green Channel Counter’ on 1st July, 2010, at 57 Pilot branches across the country, as an innovative step towards paperless ‘Green Banking’ for deposit, withdrawal and remittance transactions. Based on the Customers favourable response, this initiative has now been rolled out to more number of branches.


சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்!


“வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவிகள் செல்போனில் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.”என்று நம்பிக்கை தெரிவிக்கின்ற்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள்.


11 - TEC FISH MOBIL

 


இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சர்வதேச கடல் எல்லையில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், பின்னர் தமிழகத்தில் இருந்து அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு அவர்களை விடுவிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.


இந்தப் பிரச்சினைக்கு அறிவியல்பூர்வமான முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆய்வுகளை, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள் எஸ்.வேல்விழி, ஸ்ரீநாத், டி.சுவிதா ஆகியோர் கொண்ட குழு மேற்கொண்டது. தற்போது செல்போன் மூலம் தகவல் பறிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.


இதுகுறித்து கேட்டபோது வேல்விழி, ஸ்ரீநாத், சுவிதா ஆகியோர்,”மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்கு தேவையான தகவல் செல்லும் கிராம அறிவு மையம் என்ற திட்டம் 1998-ம் ஆண்டில் புதுச்சேரியில் தொடங்கினோம்.


மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “இன்கோர்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து, கடல் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்போம். மீன் அதிகம் கிடைக்கும் பகுதி, காற்றின் வேகம், அலையின் உயரம், வானிலை ஆகியவை உட்பட்ட தகவல்கள் அதில் இருக்கும்.


தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், அந்தந்த மீன்பிடி பகுதிகளில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற தகவல்களை கொடுத்து வந்தோம். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் உலக இடம் நிர்ணயக் கருவி (ஜி.பி.எஸ்.) பொருத்தப்பட்ட படகுகளுக்கு, தகவல்களை தமிழில் மொழி பெயர்த்து அனுப்பினோம்.


இந்த தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து மீனவர்களிடம் பரவலாக கருத்துகளைக் கேட்டு பெற்றோம். அவர்கள் கூறிய அம்சங்களையும் தொழில்நுட்பம் மூலமாக தகவல் பரிமாற்றத்தில் புகுத்தினோம்.
இதற்காக டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பப்படி, மீனவ நண்பன் கைபேசி- முதல் பாகம் என்ற திட்டத்தைத் தொடங்கினோம். இதில், டாடா போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் எழுத்துத் தகவல்கள், குரல் தகவல்கள் கிடைக்கும் நிலை இருந்தது.


எனவே அனைத்து மீனவர்களும் பயன்பெறும் வகையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின்படி, அதன் இரண்டாம் பாகம் என்ற திட்டத்தைத் டாடா கன்சல்டன்சி, குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து தயார் செய்து வருகிறோம்.


இதன்படி, ஆண்ட்ராய்ட் 4.0 என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 3ஜி இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட செல்போன்களில், நாங்கள் கொடுக்கும் அனைத்துத் தகவல்களையும் மீனவர்கள் பெற வகை செய்யப்பட்டுள்ளது.


அந்த செல்போன்களில் மீனவர்களுக்கான தனி “ஐ.கான்” கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் அதிக மீன் பிடிக்க வாய்ப்புள்ள பகுதி, ஜி.பி.எஸ்., கடல்நிலை முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான அரசுத் திட்டங்கள், மீன் சந்தை விலைத் தகவல்கள், உள்ளூர் செய்திகள், முக்கிய தொடர்பு எண்கள் ஆகியவை இருக்கும்.
அதில் தேவையானதை கிளிக் செய்து தகவல் பெறலாம். யார் யார் எந்தெந்த பகுதிகளில் மீன் பிடிக்கிறார்களோ, அந்தந்த கடலில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். கடல் வழியாக வேறு மாவட்டத்துக்கு சென்றுவிட்டால்கூட, அந்தப் பகுதியின் விவரங்களையும் அறிய முடியும்.


அதுமட்டுமல்லாமல், மீன்களைப் பிடித்து வெளியே கொண்டு வரும்போது, அந்தந்த வகை மீன்களின் விலையை கடலுக்குள் இருக்கும்போதே அறிந்து கொள்ளலாம்.


இதுதவிர இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையில் உள்ள அச்சரேகை, தீர்க்கரேகை ஆகியவற்றின் இருப்பிடத்தையும் பதிவு செய்து வைத்துள்ளோம். எனவே இந்த செல்போனை கொண்டு சென்றால், கடல் எல்லைக்கு 5 கி.மீ. தூரத்தில் வரும்போதே, செல்போன் அலறத் தொடங்கிவிடும். இதன் மூலம் கடல் எல்லையை காட்டித் தரப்பட்டுவிடும். அதற்கேற்ற தொழில்நுட்பத்தை அதில் புகுத்தி இருக்கிறோம்.


எனவே எல்லை குறித்த எச்சரிப்பை மீனவர்கள் அறிந்து அதற்கேற்றபடி செயல்படலாம். தற்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள 100 மீனவர்களுக்கு, 100 செல்போன்களை பரீட்சார்த்த முறையில் கொடுத்துள்ளோம். அவர்கள் அந்த செல்போன்களை பயன்படுத்திப் பார்த்து, மேலும் தகவல்களை சேர்க்கும்படி கேட்டுக்கொண்டால், அதையும் சேர்த்து தொழில்நுட்பத்தை முழுமையாக்குவோம்.


இந்தப் பணிகள் முடிவதற்கு 6 மாதங்கள் ஆகும். எனவே முழுமை அடைந்த பிறகு அந்த ஐ.கானை கூகுள் போன்ற இணையதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்காக போட்டுவிடுவோம். எனவே நவீன வகை செல்போன் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களும் இந்த ஐ.கானை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.


கடல் எல்லையை மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், இதுபோன்ற கருவிகள் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.கடல் எல்லை என்பது, கண்ணினால் தெரியும் அளவுக்கு ஏற்படுத்தவில்லை. தெரியாமல் எல்லையைக் கடந்து செல்லும் மீனவர்களுக்கு உயிர்காக்கும் தோழனாக இந்த செல்போன் இயங்கும்.” என்று தெரிவித்தார்கள்.


Mobile phones distributed to fishermen

******************************* 


Small mechanised boat fishermen of a couple of coastal villages in the district will enjoy a few extended benefits of safe fishing — by getting forecast information about the rough sea, bad weather; they can access information about their exact location in the waters thereby avoiding any trespassing in to the international marine boundary line. Further, they will get to know the information about marketing techniques.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!


இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.



11 - international baby child day

 


தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. 


அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளை செய்வதில் நேரத்தை செலவிடாமல், பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.குழந்தைகள் பள்ளிக்கும், டியூஷனுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தைகளை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும்.


பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா விஷயங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

சேலம் மாவட்டத்தின் வரலாறு"!





தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம்

மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம்

நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.  மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா

என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில்

நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் 'சாலிய

சேரமண்டலம்' எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின்

கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக

கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது
நகரின் மைய பகுதியாக உள்ளது.

சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.



சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!


      சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
 
கலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு கலைநயத்துடன் சாளுக்கியர் எழுப்பிய 10ஆலயங்களை உலக பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ 1987-ல் அறிவித்தது. இவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு வைபவமும் இங்கு நடந்திருப்பது இன்னொரு சிறப்பு.
 
விருபாக்ஷர் ஆலயம்:
 
சாளுக்கிய பேரரசி லோகமகாதேவி அமைத்த ஆலயம் இது. 'லோகேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தன் பல்லவர்களை வென்றதன் நினைவாக இதை கட்டியிருக்கிறார். காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டதாக கூறப்-படுகிறது. லிங்கோத்பவர், நடராஜர், உக்கிர நரமிம்மர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
 
சங்கமேஸ்வரர் ஆலயம்:
 
'விஜயேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சாளுக்கிய மன்னர் விஜயாதித்யா சத்யஸ்ரேயா. இந்த ஆலயத்தில் திராவிட கட்டடக்கலை மிளிர்கிறது. உக்கிர நரசிம்மர், நடராஜர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கோபுரம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
 
மல்லிகார்ஜுனா ஆலயம்:
 
விருபாக்ஷர் ஆலயத்தின் சிறிய வடிவம்தான் மல்லிகார்ஜுனா ஆலயம். விருபாக்ஷர் ஆலயம் கட்டப்பட்ட புதிதிலேயே இதுவும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
 
காட சித்தேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயங்கள்:
 
இவை இரண்டுமே சம காலத்தில் கட்டப்பட்டவை. காட சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் திரிசூலம் ஏந்திய சிவன் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
 
பாபநாதர் ஆலயம்:
 
ராமாயண, மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் பாபநாதர் ஆலயத்தில் நிறைய உள்ளன. இதே போல கல்கநாதா ஆலயம், ஜெயின் ஆலயம், நாகநாதர் ஆலயம், மகா குட்டேஸ்வரர் ஆலயம் ஆகியவையும் பல வரலாறுகளை உணர்த்தி வருகின்றன.
 
எப்படிப் போகலாம்?
 
பெங்களூரில் இருந்து சுமார் 495 கி.மீ தொலைவிலும், படாமியில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் பட்டாடகல் அமைந்துள்ளது. சுமார் 24கி.மீ தொலைவில் படாமியில் ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூரில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.   

பட்டாடகல்லில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாளுக்யா உற்சவம் என்ற பெயரில் மூன்று நாட்கள் நாட்டியவிழா நடத்தப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாவை வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஆலயங்களின் பின்னணியில் பார்த்து ரசிப்பது பரவசம் தரக்கூடியது.
 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top