.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 11 October 2013

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!

இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.   தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின்...

சேலம் மாவட்டத்தின் வரலாறு"!

தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.  மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும்...

சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!

      சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....   சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'   சகலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு...

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-1- வரலாறு!

உலகில் முதன் முதலாக வரையப்பட்ட வரைபடத்திலிருந்து நவீன காலம் வரை உள்ள வரைபடங்களை ஒரு பதிவாக இடலாம் என்று இந்த பதிவை ஆரம்பித்துள்ளேன்.      உலக வரைபடங்கள் பண்டைய காலங்களில் வரையப்பட்டதில் பல்வேறு நிலைபாடுகள் காணப்பட்டன. மனித நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் ஆப்ரிகா, பாரசீகம், பாபிலோனியா சுற்றிய பகுதி தான் உலகம் என நினைத்துக்கொண்டிருந்தனர் உலகின் முதல் வரைபடமும் அப்படி தான் வரையப்பட்டுள்ளது   பின்பு உலகம் தட்டையானது என்ற நினைத்தனர். பின்பு உலகம் உருண்டை என பின்னால் வந்த அறிவியலாளர்கள் கூறினார். இருப்பினும் ஆதி காலத்திலேயே பூமி உருண்டையானது போன்ற வரைபடம் துல்லியமாக வரையப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும்...

வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)

  ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது. அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச் சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ வெயிலில் விளையாடலாமே' என்றது. அதற்கு எறும்பு...மழைக்காலத்தில் வெளியே எவரும் செல்லமுடியாது...அதனால் அந்நேரம் தேவையான உணவை இப்போதே நான் என் புற்றில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்' என்றது. 'மழைக்காலம் வர இன்னும் நாள் இருக்கிறது'என்று கூறிக்கொண்டே...வெட்டுக்கிளி நடனமாட ஆரம்பித்தது. மழைக்காலமும் வந்தது. 'தான் சேகரித்த உணவை உண்டு ..தன் புற்றுக்குள்ளேயே இருந்தது எறும்பு.... அப்போது...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top