.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 8 October 2013

தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு!




தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[5]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.


தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.


    * தூத்துக்குடி முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு.123ல் தாலாமி என்ற கிரேக்க பயணி எழுதிய நூலில் சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.


    * கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


    * ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.


    * தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ('Tuticorin') என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.


முத்துநகர் என்னும் பெருமையை பெற்ற தூத்துக்குடியில் முத்து எடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது. தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்றும் ஓரு பெயர் உண்டு.உலகத்தரம் வாய்ந்த துறைமுகம் ஓன்றும் இங்கு அமைந்துள்ளது.உப்பு உற்பத்தி,மீன்பிடி தொழில்,இரசாயனம்,அனல்மின் உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலை பெற்று திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டம்.


துறைமுகம்

மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.


1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்குமதி வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?


Feasibility have a normal delivery?

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ,  பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்  காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல பெண்களே சுகப்பிரசவத்தை விரும்பி, அதற்காக மெனக்கெட்டு, முயற்சியில்  வெற்றியும் பெறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சாமானியப் பெண்களுக்கும் அது சாத்தியம்தானே? மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதமிடம்  பேசினோம்...

பிரசவம் என்பதே செத்துப் பிழைக்கிற சம்பவம்தான். அப்படியிருக்கையில் அதென்ன சுகப்பிரசவம்?

தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை  வெளியில் வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். இதில் மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியே தேவையிருக்காது. இந்த சுகப்பிரசவத்திலேயே  இன்னொரு வகை உண்டு, ‘அசிஸ்டெட் நார்மல் டெலிவரி’ எனப்படுகிற அதில், மருத்துவரின் உதவியோடு, கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் நிகழும்.  ‘ஃபோர்செப்ஸ்’ முறையிலும், ‘வாக்குவம்’ முறையிலும் நிகழ்கிற சுகப்பிரசவங்கள் இந்த ரகம்,

ஃபோர்செப்ஸ் என்பது, குழந்தையின் தலையின் இரண்டு பக்கங்களிலும் ராடு போன்ற ஒரு கருவியை வைத்து, குழந்தையை வெளியே இழுக்கும்  முறை, இது குழந்தை, தாய் என இருவரையும் அதிகம் பாதிப்பதால், இப்போதெல்லாம் அவ்வளவாக செய்யப்படுவதில்லை, குழந்தையின் இதயத்  துடிப்பு குறைந்தாலோ, தாயின் உடல் பலவீனமாக இருந்தாலோ ‘வாக்குவம்’ முறையில் பிரசவம் பார்க்கப்படும், குழாய் போன்ற ஒரு பகுதியைக்  குழந்தையின் தலையில் பொருத்தி, ஒருவித அழுத்தம் உண்டாக்கி, குழந்தையை வெளியே எடுப்பது. ‘நண்பன்’ படத்தில், இலியானாவின் அக்காவுக்கு  விஜய் பிரசவம் பார்த்த காட்சி நினைவிருக்கிறதா? இது கிட்டத்தட்ட அப்படியானதுதான்!

யாருக்கெல்லாம் சுகப்பிரசவம் நிகழும்?


பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் சுகப்பிரசவம் நிகழும். ரொம்பவும் குள்ளமாக - அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக - உள்ள பெண்களுக்கு மட்டும்  சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள்,  முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,  சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும்.

அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம்  அனுமதிக்கப்படுவதில்லை.அளவுக்கதிக குண்டாக இருந்தாலும்  - அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் - சுகப்பிரசவம்  நிகழும் வாய்ப்புகள் குறைவு.

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்னதான் காரணம்?


சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள்.  கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து  விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை  பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை.

கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய்  மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது... நடந்தால் ஆகாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி  இருக்கிறது,உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய  ஆரம்பிக்கும்.

பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன்  சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும். சிலருக்கு பிரசவ தேதி  நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய்  விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.

இதெல்லாமும் முக்கியம்...


கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம்1கிலோ எடை கூட வேண்டும். இன்றைய பெண்களுக்கோ சர்வசாதாரணமாக  2 முதல் 3 கிலோ எடை எகிறுகிறது. மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். 15 - 20 எனத்  தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை,  காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம் . உடம்புக்கு அசைவே கொடுக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் இன்றைய பெண்கள். ‘குனியலாமா டாக்டர்? அதனால்  ஒன்றும் ஆகாதே’ எனக் கேட்கிறவர்களும் உண்டு. இடுப்பெலும்பு விரிய, உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டியது மிக முக்கியம். மருத்துவரின்  ஆலோசனையின் பேரில் அதற்கான பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு, தினம் அரை மணி நேரம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிச் செய்ததன்  பலனாக, 4.5 கிலோ உள்ள குழந்தையைக் கூட, சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார் ஒரு பெண்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலி, கால் வலியெல்லாம் வரும். அதில் எது நார்மல், எது பிரச்னைக்குரியது என்பதை மருத்துவரிடம் கேட்கலாம்.  வேலைக்குச் செல்கிற பெண்கள், எப்படி உட்கார்வது சரி எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இருக்கையில், முதுகுக்குப் பின்னால் தலையணை  வைத்துக் கொள்ளலாம்.

ஒருக்களித்துதான் படுக்க வேண்டும்.
அப்படிப் படுக்கும்போதும், முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம்.

தினம் அரை மணி நேரம் மெதுவாக நடக்கலாம்.

முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா?


இந்தச் சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக்  கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க  வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.

தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி,  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன்  செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் தொடர்புண்டா?

வெண்ணெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நிகழுமா, பப்பாளி சாப்பிடலாமா? மாம்பழம் சாப்பிடலாமா என்கிற மாதிரியான கேள்விகள் பலருக்கும் உண்டு.  உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த உணவையுமே அளவோடு எடுத்துக் கொள்கிறவரை பிரச்னையும் இல்லை!

பூனையை கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்லே!


நீங்கள் நாய்ப் பிரியரா… பூனை என்றால் உங்களுக்கு உயிரா?


 முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் இருக்கிறது. 


ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கைகள் இப்போது வெளியே வந்து விட்டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத்தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்களுக்கு தொற்றுகிறது; அப்படி தொற்றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக கட்டுப்படுத்தி, ஏகப்பட்ட மூளை கோளாறுகளுக்கு காரணமாகிறது என்ற உண்மையை விஞ்ஞானிகள் இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளனர்.


8 - health ocd

 



சரி, இனி கொஞ்சம் ஆழ்ந்து போய்ப்பார்ப்போம்… பூனையிடம் அவ்வளவு சுலபமாக, பொறி வைக்காமலேயே சிக்கிக்கொள்கிறதே எலி…எப்படி? அதில் தான் இந்த ஒட்டுண்ணி பிறப்பு ஆரம்பிக்கிறது. எலி பிறக்கும் மூன்று மாதத்துக்கு உள்ளேயே ஒரு பாரசைட்…ஆம், ஒட்டுண்ணி அதன் மூளையில் உருவாகி விடுகிறது. இந்த ஒட்டுண்ணி, மூளையை அப்போதில் இருந்தே ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த ஒட்டுண்ணி பெயர் டெக்சோபிளாஸ்மா கோண்டீ.


எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது, எங்கே போகலாம், போகக்கூடாது என்பது முதல் பைத்தியமான காரியங்களை செய்வது வரை அவ்வளவையும் இந்த ஒட்டுண்ணி தான் கமாண்ட் செய்கிறது. எலிக்கு அதென்னவோ பூனை, பூனையின் சிறுநீர் என்றால் பிடிக்கும். அப்படி என்ன டேஸ்ட்டோ என்று எண்ண வேண்டாம். உண்மையில் இந்த ஒட்டுண்ணி வேலைதான் அது. எலிக்கு பிடிக்காமலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தியது ஒட்டுண்ணி. 


அதனால் தான் தெரிந்தே, பூனையிடம் மாட்டி இரையாகிறது எலி. சரி, எலியை கடித்து சாப்பிட்ட பூனை, ஏப்…என்று ஒரு ஏப்பம் விட்டு விட்டு படுத்து விடும்.
இந்த பூனை வீட்டுப்பூனையாக இருக்கலாம். திரியும் பூனையாக இருக்கலாம். எலியை பிடிப்பதில் பாகுபாடு இல்லை. எலியை சாப்பிடுவதிலும் வேறுபாடு இல்லை. அப்படியே தூங்கி எழுந்த பின் டூ பாத்ரூம் போவதிலும் அவ்வளவு ஒற்றுமை. 


அங்கு தான் பிரச்னையே. ஏற்கனவே, எலியை தின்றதால் அதன் மூளையில் உள்ள ஒட்டுண்ணி, பூனை மூளைக்கு போய் விடுகிறது. அது போகும் டூ பாத்ரூம் மூலம் ஒட்டுண்ணி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். வீட்டுப்பூனையாக இருந்தாலும், வெளிப்பூனையாக இருந்தாலும், இப்படி டூ பாத்ரூம் மூலம் மற்ற பூனைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பரவி விடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நிபுணர் வெண்டி இங்க்ராம் தலைமையிலான குழு இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை செய்து பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்துள்ளது. 


ஆராய்ச்சி முடிவுகளின் படி தெரியவந்த தகவல்கள்:


* டெக்சோபிளாஸ்மா கோண்டீ என்ற பாரசைட் தான் மனித மற்றும் 
உயிரினங்களின் மூளையை எல்லாவகையிலும் கட்டுப்படுத்துகிறது.


* இது ஒரு வகை ஒட்டுண்ணி. பிறக்கும் போதோ, மனிதன் மற்றும் சில உயிரினங்களுக்கு தொற்றுவதன் மூலமோ மூளையை அடைகிறது.


* பூனை, எலி போன்ற உயிரினங்களுக்கு அதன் பழக்க வழக்கங்கள், அணுகுமுறை போன்றவற்றில் மாற்றங்களை இந்த ஒட்டுண்ணி செய்கிறது.


* எந்த சமயத்தில் இந்த ஒட்டுண்ணி செயல்படும் என்று கூறுவது இயலாத காரியம். மூளையை கட்டுப்படுத்துவதில் வல்லமை படைத்தது.


* மனிதர்களை பொறுத்தவரை, மூளையை சீர்படுத்துவதை தவிர, மற்ற அபாய மாற்றங்களை செய்வது இந்த ஒட்டுண்ணி தான்.


* சிஸ்ரோபெர்னியா, பைபோலார் கோளாறு, அப்சசிவ் கம்பல்சிவ் சிண்ட்ரோம் போன்ற மூளைகோளாறுக்கு காரணமே இந்த ஒட்டுண்ணி தான்.


* பார்ப்பதற்கு சாதாரண மனிதராக தான் வளர்வர்; ஆனால் போகப்போக பழக்க வழக்கம் மாறும். அதற்கு இந்த ஒட்டுண்ணியே காரணம்.


* இந்த பழக்க வழக்கம் மாறுவது முதல் பல வகை மன, மூளை கோளாறு வருவது வரை இந்த ஒட்டுண்ணி வேலை தான்.


* பூனை மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணி, மீன், பறவைகளுக்கும் கூட பரவும் ஆபத்து உண்டு.


* கொக்கு வாயில் தெரிந்தே சிக்கும் மீன். அப்படி மீன் நடந்து கொள்ள முதன் மூளையை ஆட்டிப்படைப்பதும் இந்த ஒட்டுண்ணியே.


* மனிதர்களை பொறுத்தவரை குழந்தை பருவத்தில் தொற்றவே வாய்ப்பு அதிகம். எப்போது வேண்டுமானாலும் அது செயல்பட ஆரம்பிக்கும்.


* பெண்களுக்கு அதிக அளவில் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஒட்டுண்ணி தொற்ற வாய்ப்பு அதிகம்.


*பூனை முதல் மனிதன் வரை மூளையில் தொற்றும் ஒட்டுண்ணி, முதலில் செய்வது மூளையை பலமிழக்க வைப்பதுதான்.


* அடுத்து, தன் வசப்படுத்தி, மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான். இவ்வாறு ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூட்டை தொங்கும் பழக்கம்… சிரிப்பே இல்லாத உர்ர்…


* ஓ.சி.டி: மூளை கோளாறுகளில் ஒன்று தான் அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர். இது 99 சதவீதம் பேருக்கு பல வகையில் இருக்கும். ஆபத்தான பழக்க வழக்கங்கள் அதிமாகும் போது தான் சிகிச்சை எண்ணமே வருகிறது.


* வீட்டை பூட்டி விட்டோமா என்று பூட்டை பல முறை தொங்கிப்பார்ப்பது, 108 முறை பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு விட்டோமா என்று சந்தேகப்படுவது, சிறிய சத்தம் கேட்டாலும் கண்டபடி குழப்பம் அடைவது, ஏதாவது வாசம் வந்தால் சிலிண்டர் கேஸ் தானா என்று சந்தேகிப்பது இந்த வகை தான்.


* அவர் சிரிக்கவில்லை… நாம் ஏன் சிரிக்க வேண்டும் என்று உர்ர்ர் என இருப்பது, இவன் ஏன் சிரித்தான் என்று குழம்புவது, இவன் நமக்கு குழி தோண்டுகிறான் என்று நண்பனை சந்தேகிப்பதும் இந்த ஒட்டுண்ணி வேலை தான்.


* சிரிப்பு, அழுகை, பதற்றம், குழப்பம் எல்லாமே நார்மல் அளவை தாண்டிவிட்டால் உஷாராக இருக்க வேண்டும்.


* சிஸ்ரோபெர்னியா: சம்பந்தமே இல்லாமல் பேசுவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தெரியாத விஷயங்களில் பயப்படுவது போன்றவை தான் இந்த கோளாறு.


* பைபோலார் டிசார்டர்: இந்த கோளாறு பெரும்பாலும் பெரிய திறமைசாலிகளுக்கு வர வாய்ப்பு அதிகம். சிறிய வயதில் பெரும் சாதனைகளை செய்திருப்பர்; குறிப்பிட்ட துறையில் சாதித்திருப்பவராக இருக்கலாம். ஆனால், எதிர்காலம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ சிந்தனையே இருக்காது. 


* பெரிய முடிவுகளை சுலபமாக எடுத்து விட்டதாக நினைத்து, பிரச்னை குழியில் விழுந்து விடுவர். நம்பி மோசம் போவதும் இந்த ரகம் தான். இப்படி பிரச்னைகளில் தவிப்போருக்கு மூளை பாதிப்பு தான் இந்த கோளாறு.
கர்ப்பிணியா, விலகி நில்லுங்க...


கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், பூனையிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர். இதற்கு காரணம், இந்த ஒட்டுண்ணியே. காரணம், இந்த ஒட்டுண்ணி, பிறக்கும் குழந்தை கருவிலேயே பாதிக்க வாயப்பு அதிகம்.


பொதுவாக, மனித உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் போது இந்த ஒட்டுண்ணி வேலையை ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி விட்டு கோளாறுகளை ஆரம்பிப்பதும் இதன் வேலை.


Obsessive Compulsive Disorder in Dogs and Cats

******************************


Obsessive compulsive behaviors occur in many types of animals, including horses, dogs, cats, exotic birds, pigs and many zoo inhabitants.Two of the most common behaviors in dogs are obsessive licking which results in acral lick dermatitis (ALD), also known as a lick granuloma, and tail chasing.In cats, common obsessive behaviors include wool-sucking (pica, or the eating of non-food substances) and psychogenic alopecia, which is hair loss and baldness from excessive grooming of the hair and skin.

தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது ‘ சூப்பர் புயல்’!


கடந்த ஆண்டு ‘நீலம்’ புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்த போது.தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டதை இன்னமும் முழுமையாக சரி செய்ய வில்லை.இந்நிலையில் தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


8 weather report

 



இந்திய மெட்ரோலாஜிக்கல் வெப்சைட்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ள விவரத்தில் “ஆந்திராவை ஒட்டி இந்த தீவுப்பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், இது இன்னும் 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் , இதற்கு சூப்பர் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



புயல் நேரத்தில் இந்த கடல் சீற்றம் கடுமையாக இருக்கும். ராட்சத அலைகள் இருக்கும். இந்த புயல் கடந்த ஆண்டு அக்டோபரில் தாக்கிய நீலம் புயலை விட கொடியதாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. வலுவடைவதை பொறுத்து, கடுமையாகவும், மிகக்கடுமையாகவும், புயல் இருக்கும். இந்த புயலால் சென்னையை யொட்டிய பகுதிகள் மற்றும் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. 



இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வலுவிழக்கும். இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா, தமிழகம் பகுதியில் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். ஆந்திராவில் இதன் தாக்கம் காரணமாக 4 நாட்கள் பெரிய மழை இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையில் வரும் 15 ம் தேதிக்கு மேல் வடமேற்கு பருவ மழை துவங்க வேண்டிய காலத்தில் இருப்பதால் தற்போதைய புயல் காரணமாக வழக்கமான மழைக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வருகிறது. 


இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்!




சோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 



முதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்டுள்ளது.



 தற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். சிம் இயக்கத்தினைத் தவிர மற்ற அனைத்தும் ஒரே மாதிரியான அம்சங்களையே இந்த இரண்டு போன்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



இவற்றின் திரை 4 அங்குல அகலம் கொண்டு, 800 x 480 பிக்ஸெல்கள் கொண்ட காட்சித் தோற்றத்தினைத் தருகிறது. இந்த திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திறன் கொண்டது. இவற்றில், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் எம்.எஸ்.எம். 8227 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றை இயக்குகிறது.



பின்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த, வீடியோ பதியும் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமராவும், முன்புறமாக, வீடியோ அழைப்புகளுக்கென, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. 



இவற்றின் தடிமன் 9.3 மிமீ. எடை 115 கிராம். எப்.எம். ரேடியோ கீஈகு தொழில் நுட்பத்துடன் இயங்குகிறது. 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது.
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, DLNA, A2DP இணைந்த புளுடூத் 4, 1ஜிபி ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1750 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன.


Click Here

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top