Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. 141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது. மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, 3 October 2013
Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!
08:07
ram
No comments
ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!
08:04
ram
No comments
அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது.
யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு இரண்டுமே பரஸ்பரம் பிடிவாதமாக தங்கள் நிலையில் இருப்பது மட்டுமின்றி, இனி சமரசத்துக்கு இடமே இல்லை என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக இருப்பதால், 1995ல் இருந்தது போன்று இல்லாமல், ஒரு வாரத்துக்கும் மேலாக கதவடைப்பு நீடிக்கும் என்று தெரிகிறது.
அண்மையில் அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் ஒபாமா தனி சுகாதார காப் பீட்டு திட்டத்தை கொண்டு வர உள்ளார். ஜனவரி மாதம் 1ம் தேதி அமலாகிறது. மிதவாத எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள், ‘இப்படி அரசு பணத்தை வீணடிக்கக் கூடாது; அவரவர் வேண்டிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கட்டும்’ என்று கூறி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த திங்கள் அன்று அமெரிக்காவில் நிதி ஆண்டின் கடைசி நாள். அன்று அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. பட்ஜெட்டில் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கும் ஒப்புதல் தர வலியுறுத்தியது. திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரி அதை ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறி 228 ,221 என்ற ஓட்டு கணக்கில் குடியரசு கட்சி வெற்றிபெறச் செய்தது.
அதே திருத்தங்களை செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி 54 ,46 கணக்கில் தோற்கடித்தது. இந்த இழுபறி காரணமாக மீண்டும் பிரதிநிதிகள் சபையில் நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது. ஆனால், எந்த சமரசமும் ஏற்படவில்லை. செனட் சபையின் ஜனநாயக கட்சியும் பிடிவாதமாக இருந்தது.இதையடுத்து நள்ளிரவில் பேசிய ஒபாமா, நாளை அமெரிக்காவுக்கு பெரும் அவமானம் ஏற்படப்போகிறது. அரசு கஜானா முடங்கும். அந்த செயலை செய்த உங்களை மக்கள் மன்னிக்க மாட்டர்’ என்று கோபத்துடன் பேசினார்.
நள்ளிரவை தாண்டிய நிலையில், அவசர நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிதி தொடர்பாக அவசர முடிவுகளை ஒபாமா எடுத்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், திட்டப்பணிகள், தேசிய இடங்கள் பராமரிப்பு, வெப்சைட்கள் பராமரிப்பு போன்றவற்றை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் நாள் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதுபோல, வாஷிங்டன், நியூயார்க் உட்பட பல மாநிலங்களில் உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் காலவரையற்ற விடுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியத்துக்கு மேல் பலரும் தங்கள் லேப்டாப்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினர். முதியோர் காப்பகங்களும் மூடப்பட்டன. அவர்களுக்கு மாநில அரசு நிதி மட்டும் கிடைத்தது. மருத்துவ வசதிகளும் குறைக்கபப்ட்டன. பல இடங்களில் குப்பை அள்ளுவதும் பாதிக்கப் பட்டது.
எல்லை பாதுகாப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உணவு துறை போன்ற பணிகளில் பாதிப்பில்லை. அந்த பணிகளில் உள்ள ஊழியர்கள் வேலை க்கு வந்தனர். பாஸ்போர்ட், விசா பணிகளும் கூட பெரிய அளவில் பாதிக்கவில்லை. மத்திய அரசின் ஊழியர்கள் எண்ணிக்கை 24 லட்சம். அதில் மூன்றில் ஒரு பங்கான 8 லட்சம் பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைக்கு வரவில்லை. எனினும், ஒபாமாவின் சுகாதார காப்பீடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வாங்கும் பணிகள் 1 ம் தேதியில் இருந்து திட்டமிட்டபடி தொடங்கின.
200 கோடி ரூபாய் இழப்பு: கடந்த 2 நாளில் மட்டும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் முடக்கம், தேசிய பொது இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்காததால் மட்டும் 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கதவடை ப்பை முடிவுக்கு கொண்டு வர எந்த தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரஸ்பரம் இரு கட்சிகளும் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளன. ‘நாங்கள் கதவடைப்பை விரும்பவில்லை. திட்டமிட்டு அரசு தான் செய்துள்ளது’ என்று குடியரசு கட்சி சொன்னது. ‘மக்களை பாதிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறுத்திய செயலுக்கு குடியரசு கட்சி பதில் சொல்லியாக வேண்டும்’ என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது.
பல வனவிலங்கு பூங்காவில் குவிந்த பெண்கள், குழந்தைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோல, அவசர தேவையற்ற நிர்வாக பணிகள் கவனிக்கும் பல அலுவலகங்கள், அரசு ஏஜன்சிகள் ஆகியவையும் சம்பளம், பராமரிப்பு நிதி ஒதுக்காததால் மூட அறிவுறுத்தப்பட்டன. இது போன்ற அரசு பணிகள் முடங்கின. ஊழியர்கள் எல்லாரும் பிரச்னை தீரும் வரை ஆபீஸ் வர வேண்டாம் என்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகை: பெடரல் அரசு என்பது தான் மத்திய அரசு. அந்த அரசு பணிகள் தான் முடங்கின. வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபீஸ் பணிகளும் கூட முடங்கின. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வெறும் 1,200 பேர் மட்டும் முக்கிய பணிகளை கவனித்தனர். பாஸ்போர்ட், விசா பணிகள், தூதகர பணிகள் போன்றவை பாதிக்கவில்லை. மேலும், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றில் கட்டண வருவாய் இருப்பதால் அந்த பணிகளை கவனிக்கும் பணியாட்கள் வழக்கம் போல பணிக்கு வந்தனர் என்று என்பிசி செய்தி கூறியுள்ளது.
In first day of U.S. shutdown, no sign how it will end
********************************
President Barack Obama and congressional Republicans came no closer to ending a standoff on Tuesday that has forced the first government shutdown in 17 years and thrown hundreds of thousands of federal employees out of work.
Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட வேண்டுமா?
07:51
ram
No comments
Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.
ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.
Wednesday, 2 October 2013
மன அழுத்தம் -சமாளிப்பது எப்படி?
22:29
ram
No comments
ஸ்ட்ரெஸ் எனும் சீரியஸ் பிரச்னை!
வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கும் எல்லாப் பெண்களுமே அஷ்டாவதானிகள்தான். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த அவர்களுக்கு, தம்மையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் ஏனோ மறந்து விடுகிறது. ‘முடியலியே...’ எனப் புலம்பிக் கொண்டாவது முடியாத காரியங்களையும் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிற அவர்களுக்குத் தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. அதை அப்படியே விட்டால் அடுத்தடுத்து தொடரப் போகிற அவதிகளையும் அறியாத அவர்களை எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?
‘ஐயோ.... என்னால சமாளிக்க முடியலையே...’ என்கிற நினைப்புதான் ஆரம்பம். ‘என் குழந்தைங்களுக்கு என்னால சரியான அம் மாவா இருக்க முடியலை. வேலையிடத்துலயும் என்னால சரியான நேரத்துக்கு வேலைகளை முடிக்க முடியலை... நான் என்ன பண் ணப் போறேன்...’ என்கிற புலம்பல்கள் அடிக்கடி வந்தால், சந்தேகமே இல்லை. உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வந்து விட்டது. படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள்.
யாருக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் வரும்?
வேலையையும் வீட்டையும் கவனிக்கிற ஒவ்வொரு பெண்ணுமே அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங் களிலும் 100 சதவிகிதம் பர்ஃபெக்ஷனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் ஸ்ட்ரெஸ் வருகிறது. வேலைக்கும் போய்க் கொண்டு, வீட்டையும் பார்ப்பது என்றால், கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருக்கும். ஏதோ சமாளித்தால் போதும் என நினைக்கிற பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் வருவதில்லை.
எப்படிச் சமாளிப்பது?
வேலையிடத்தில்...
வீடு, வேலை என இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்கப் பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை உங்கள் திறமைக்கான ஒரு வடிகாலாகப் பாருங்கள். படித்திருந்தும், ஒரு ஹவுஸ்ஒயிஃபாக நேரம் போக்கா மலிருக்க, வேலை உங்களுக்கு ஒரு ஆறுதல். எனவே வேலை, வேலை என எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க வேண்டும், பிள்ளைகளை மிகச் சிறந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண் டும் என்கிற அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளைத் தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக வேண்டும்.
வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு அதிக பட்ச கால ஒழுக்கம் அவசியம். வீட்டில் இருப்பவர்கள் என்றால் நேரத்தை தன் வசமாக் கிக் கொள்ளலாம். வேலைக்குச் செல்கிற வர்களுக்கு நேர நிர்வாகம் மிக முக்கியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ, டி.வியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கிப் புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உல கத்தை மறக்கும் அளவுக்கு அதிலேயே மூழ்கக்கூடாது.
வேலையிடத்தில் கூடியவரையில் வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள் உங்கள் ஸ்ட்ரெஸ்சை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். சக ஊழியர்களின் அந்தரங்க விஷயங் களில் பட்டும், படாமலும் இருப்பதுதான் நல்லது. வேலையிடத்தில் நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு மணித்துளியும் ஆக்கப்பூர்வமாக இருந்துவிட்டால், வேலை நேரம் முடிந்தும் அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற அனாவசிய டென்ஷன் இருக்காது.
வீட்டில்...
வேலைக்குச் செல்கிற பெரும்பாலான பெண்களை, அவர்களது கணவர்களும், கணவர் வீட்டாரும் விரோதியாகவே பார்ப்பது சகஜம். ‘வேலைக்குப் போற திமிரு’, ‘சம்பாதிக்கிற கொழுப்பு’ என்கிற விமர்சனங்கள் சர்வசாதாரணமாக வரும். அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம். கணவர், அவரது பெற்றோர், கணவரது உடன்பிறப்புகள் என உங்களுக்கு நெருங்கிய வட்டத்துடன் நல்ல நட்பை வளர்த் துக் கொள்வதுதான் முதல் தீர்வு. வேலைக்குச் செல்கிற எல்லா பெண்களுக்கும், குழந்தைகளை யார் பொறுப்பில் விடுவது என்கிற கவலை பெரிதாக இருக்கும். பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், பெற்றோருக்கு அடுத்து, உடனடியாக தாத்தா- பாட்டி களின் மனசுதான் பதறும். எனவே அம்மா - அப்பா அல்லது மாமனார் - மாமியாரின் தயவைத் தக்க வைத்துக் கொள்ளும் டெக்னிக்கை கற்று வைத்திருப்பது நலம். சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அவர்களிடம் கொடுத்து, தேவையானதை வாங்கிக் கொள்ளச் சொல்லலாம். இன்னும் ஒருபடி மேலே போய், மொத்த சம்பளத்தையும்கூட அவர்களிடமே கொடுத்துவிட்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது பணம் வாங்கிக் கொள்ளலாம். அன்பாலும், பொறுப்பாலும் கட்டிப்போடுகிற இந்த டெக்னிக், உங்களு டைய பலவிதமான மன அழுத்தங்களை காணாமல் போகச் செய்யும்.
வேலை முடிந்து களைப்பாக வருவீர்கள்... அதுவரை குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட களைப்பில், சலிப்பில், விட்டால் போதும் என உங்களிடம் பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு, வெளியே போவார்கள் பெரியவர்கள். காபி போட்டுக் கொடுக்கக்கூட ஆளிருக் காது. ‘என்ன சம்பாதிச்சு என்ன சுகத்தைக் கண்டோம்.... என்ன வாழ்க்கை’ என அலுப்பு வருவது இயற்கைதான். அதை கோபமாக வார்த்தைகளிலோ, செயல்களிலோ யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். அம்மான்னாலே இப்படித்தான்.... எரிஞ்சு விழுவாங்க’ என்கிற எண்ணம் உங்கள் பிள்ளைகளுக்குப் பதிந்து விடும். நீங்கள் வேலைக்குப் போகத்தானே உங்கள் பிள்ளைகளை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்... அவர்கள் உதவியின்றி அது உங்களுக்கு சாத்தியமாகுமா என மாற்றி யோசித்துப் பாருங்கள். கோபத்தை ஓரங்கட்டி விட்டு, அவர்களுக்கும் ஒரு கப் காபி கொடுத்து விட்டு, நீங்களும் காலை நீட்டிக் கொண்டு காபி குடியுங்கள். அரக்க, பரக்க அடுத்த வேலைகளைப் பார்க்க ஓடாமல், 10 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.
கணவருக்கும், உங்களுக்குமான தாம்பத்ய உறவை சுமுகமாக வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். சின்னச் சின்ன ஸ்பரிசமும், அரவ ணைப்பும் முத்தமும் ஸ்ட்ரெஸ்சை பெரியளவில் விரட்டியடிக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஸ்ட்ரெஸ்சை விரட்டுவதில் உங்கள் பாடி லேங்வேஜுக்கும் இடமுண்டு. முடிந்த போதெல்லாம் உங்கள் குழந்தைகளைக் கட்டியணைத்து, முத்தமிடுங்கள். கணவன் உள்பட யாரிடமும், உதட்டுச் சுழிப்பிலோ, கண் அசைவிலோ கோபத்தையோ, வெறுப்பையோ வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் எத் தனை பெரிய பொறுப்பில், பதவியில் இருந்தாலும், வீட்டுக்குள் அன்பான மனைவி யாக, எளிமையான அம்மாவாக உங்கள் ரோலை முழுமையாக அனுபவியுங்கள்.
உங்களையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்...
முடியாத வேலைகளுக்கு ‘நோ’ சொல்லத் தயங்காதீர்கள். டென்ஷன் எல்லை மீறும் போது, ஓய்வெடுக்கத் தயங்காதீர்கள். வேலையிடத்தில் உங்களுக்கு அனுமதிக்கப்படுகிற விடுப்புகளை அவ் வப்போது எடுத்து விடுங்கள். லீவே எடுக்காமல் போய், கிரீடம் சுமப்பதில் மட்டுமே சுகம் காணாதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் லீவு ஒரே ஒரு நாளாக இல்லாமல், 36 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இருந்தால்தான் உங்களை ரீசார்ஜ் செய்யும்.
ஓய்வு நேரத்தில் உங்களுக்குப் பிடித்தவற்றை மட்டுமே செய்யுங்கள். அது உங்கள் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதா கவோ, உங்களுக்கு மிகப் பிடித்த இசையைக் கேட்பதாகவோ, பார்லர் சென்று அழகுப் படுத்திக் கொள்வதாகவோ, பழைய தோழி களை சந்திப்பதாகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டிலிருக்கும் பெண்கள் 10 சேலையோ, சல்வாரோ வைத்திருக்கிறார்கள் என் றால், உங்களுக்கு 20 செட்டாவது தேவை.
‘சம்பாதிக்கிற காசெல்லாம் இவ டிரெஸ்சுக்கும், மேக்கப்புக்குமே போகுது’ என யாராவது பேசினாலும், காதில் போட்டுக் கொள்ளா தீர்கள். நல்ல உடையும், ஆபரணங்களும்கூட உங்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத் தரும். இவற்றை எல்லாம் கடந்தும், உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருந்தால், மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் கவுன்சலிங் போகலாம். மூன்றாவது நபரிடம் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டும் போது பெரிய ஆறுதல் கிடைக்கும்.
அதற்கும் அடங்காத ஸ்ட்ரெஸ் என்றால் மனநல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற மருந்துகள், ஸ்ட்ரெஸ் அதிகரிக்கிற போது மட்டும் எடுத்துக்கொள்கிற மருந்துகள் என எத்தனையோ உண்டு. மருந்து, மாத்திரையா என அலற வேண்டாம். மழைக்குக் குடை பிடிப்பது மாதிரி, இதுவும் ஒருவகையான பாதுகாப்புதான்.
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!
22:19
ram
No comments
எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.
சந்தேகத்துக்கான விதை:
அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய்த் தடுப்புக்கு பல்வேறு வகைகளை சுட்டிக்காட்டினாலும் குழந்தை பருவத்திலிருந்து தடுப்பூசிகள் போடுவது அடிப்படையானது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப இதன் தன்மை மாறுபடும். எழுநூறு கோடிக்கும் மேல் இன்று உலக மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசி சந்தையின் மதிப்பு 275 மில்லியன் டாலர். சந்தேகம் இங்கேதான் எழுகிறது.
இந்திய மருத்துவத்துறை - 1990க்கு முன்:
மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துகள் உற்பத்தியில் உலகிலேயே இன்று இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார் 200 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவின் மருந்துகளை நம்பித்தான் இருக்கின்றன. (இன்னொரு பக்கம் இதே இந்தியாவில்தான் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் எந்தவிதமான மருந்துகளையும் வாங்க முடியாதவர்களாக ஏழ்மையில் இருக்கின்றனர். எவ்வளவு பெரிய முரண்!) இதற்கு காரணங்கள் மூன்று. 1. இந்திய காப்புரிமை சட்டம், 1970. 2. பொதுத்துறை நிறுவனங்கள். 3. 1978ல் உருவாக்கப்பட்ட மருத்துவ கொள்கை. ஆங்கிலேயர் ஆட்சியில்1911ல் உருவாக்கப்பட்ட தயாரிப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதிக்கப்பட்டன.
அதுநாள் வரை இருந்த மருந்துக்கான காப்புரிமை (றிக்ஷீஷீபீuநீt றிணீtமீஸீt) செய்முறைக்கான காப்புரிமையாக (றிக்ஷீஷீநீமீss றிணீtமீஸீt) மாற்றப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது. சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்., எச்.ஏ.எல். ஆகியவை மருந்துகளை உடனுக்குடன் கிடைக்க வழிசெய்தன.
ஸோ... வேறுவழியின்றி பன்னாட்டு மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்தனர். 1978ல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கை இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் சாதகமான பல அம்சங்களை கொண்டு வந்தது. அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த 374 மருந்துகளும் விலைக் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து 25 சதவிகிதத்துக்கு வந்து நின்றது.
இந்திய மருத்துவத்துறை - 1990க்குப் பின்:
இந்திய மருத்துவத்துறையின் அபார வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த மூன்று காரணங்களும் 1990க்குப் பின் மெல்ல மெல்ல தேய்ந்துவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நீர்த்து போய்விட்டது. ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் உற்பத்தி இல்லை. ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி தொடர்ந்தது. 1978ல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கைகளில், 1986, 1994, 2001ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டன. உலக வர்த்தக நிறுவனத்தில் கையெழுத்திட்டு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாலும், 1970ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தில் ஒரு மாற்றத்தை 2005ல் கொண்டு வந்ததாலும் வெளிநாட்டில் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடியாமல் போனது.
இதனால்தான் இன்று மருந்துகள் சராசரி இந்திய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டன. மருந்துகளின் மீதான கட்டுப்பாடு மெல்ல மெல்ல தளர்ந்து வருவதால், அனைவருக்கும் மருந்து என்பது இப்போது சாத்தியமில்லை. தவிர, மனித ஆரோக்கியத்துக்கான பராமரிப்பில் சுமார் 80 சதவிகிதம் மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அடித்தட்டு மக்களே. சுகாதாரம் இல்லாத சுற்றுச்சூழல், மறுக்கப்படும் அடிப்படை வசதிகள், சுத்தமில்லாத குடிநீர் என அன்றாட பிரச்னைகளுடன் மருந்து விலையும் மக்களை அதளபாதாளத்துக்கு தள்ளியிருக்கிறது.
மருந்துத் துறையில் தாராளமயம் புகுந்துவிட்டதால், அத்தியாவசியமான மருந்துகளின் உற்பத்தி குறைந்து விட்டது. பதிலாக தேவையற்ற மருந்துகளின் உற்பத்தி அதிகரித்துவிட்டது. இதனால் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை விண்ணைத் தொட்டிருக்கிறது.சுருக்கமாக சொல்வதெனில் இந்திய மருத்துவத்துறை இப்போது உற்பத்தியிலிருந்து விலகி வர்த்தகத்துக்கு மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக பெரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 50 சதவிகித இந்திய மக்களுக்கு தேவைக்கேற்ப மருந்து கிடைக்கவில்லை.
காணாமல் போகும் இந்திய நிறுவனங்கள்:
பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களை அடுத்தடுத்து இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. சில உதாரணங்கள். மேட்ரிக்ஸ் லாப்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மைலன் வாங்கியிருக்கிறது. போலவே டாபர் பார்மா நிறுவனத்தை சிங்கப்பூரை சேர்ந்த பெரசீனியஸ் கேபியும், ரான்பாக்சியை ஜப்பானை சேர்ந்த டாய்ச்சி சான்க்கியோவும், சாந்தா பையோடெக் நிறுவனத்தை பிரான்சை சேர்ந்த சனோபி அவெண்டிஸ்ஸும், ஆர்க்சிட் கெமிக்கல்சை அமெரிக்காவை சேர்ந்த ஹாஸ்பிராவும், பிரமல் ஹெல்த் கேரை அமெரிக்காவை சேர்ந்த அப்பாட்டும் வாங்கியிருக்கின்றன.
இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி:
சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் மருத்துவத்துறை வளர்ச்சியில் தடுப்பூசி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை இறப்பில் அபாயகரமான நிலையில் இருந்த நம் நாட்டை காப்பாற்றியது சுயேட்சையான, சுயசார்பான மருந்து கொள்கைகள்தான். உதாரணமாக 1967 - 1977ம் ஆண்டுகளில் கடும் முயற்சியால் போலியோ சொட்டு மருந்து குன்னூரில் உள்ள பாஸ்டர் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால், பின்னாட்களில் இந்திய அரசு தயாரிப்பை ஏதேதோ காரணங்கள் சொல்லி முடக்கி வைத்தது. அதற்கு பின்னர் 1987ல் மும்பையில் உள்ள ஹாப்கின்ஸ் நிறுவனம் போலியோ சொட்டு மருந்தை தயாரித்தது. இதையும் ஒரு கட்டத்தில் இந்திய அரசு நிறுத்தச் சொன்னது.
இதன் பின்னர் 1988ல் மத்திய அரசு ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியது. அந்நிறுவனத்தால் முழு உற்பத்தியும் செய்ய முடியவில்லை. தேவைக்கேற்ப கொடுக்க முடியவில்லை. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. என்றாலும் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்த ஆர்டர்கள் குறையவில்லை. பதிலாக அதிகரித்தன. 1989ல் குர்கானில் தொடங்கப்பட்ட மிக்ஷிசிளிலி நிறுவனம் (பிரெஞ்சு தொழில்நுட்ப உதவி) தட்டம்மை தடுப்பூசி தயாரிப்புக்கான வேலையில் இறங்கின. ஆனால், பிரான்ஸ் அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனதால், போடப்பட்ட மூலதனம் மொத்தமும் விரயமாகி, ஒரு கட்டத்தில் இந்த நிறுவனமும் மூடப்பட்டது.
இதனால் நம் நாட்டில் இருந்த தட்டம்மை தடுப்பு மருந்து தேவையை தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்தன. மொத்தத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளபடி உலக தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தாராளமாக கிடைப்பதில்லை. ஒரு தட்டுப்பாடு நிலவியபடியே இருக்கிறது. இது செயற்கையான தட்டுப்பாடு. இதுவும் 1990க்கு பிறகுதான் தொடங்கியது. தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான் என்பதை நினைவில் கொள்க. 1998 - 2001 காலத்துக்குள் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கொடுக்கப்படும் பாரம்பரியமிக்க தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைத்துவிட்டு, அதிக லாபம் தரக்கூடிய தடுப்பூசிகள் சந்தைக்கு வரத் தொடங்கியது. இதற்காகவே 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு இந்தியாவில் மூடப்பட்டன. இந்திய மக்கள் சக்கையாக பிழியப்பட்டார்கள். இது உலக நாடுகளிலும் எதிரொலித்தது.
காரணம், இந்திய உற்பத்தியாளர்களில் பெரும்பான்மையினர் - அதாவது, 9 நிறுவனங்கள் - உலக மக்களின் தேவைகளுக்காக தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தவர்கள்தான். இதில் எட்டு பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் லாபகரமான தடுப்பூசிகள், இந்திய நாட்டு அட்டவணையில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டன. வலுக்கட்டாயமாக மக்களும், குழந்தைகளும் இதை போட்டுக் கொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டன, செய்யப்பட்டும் வருகின்றன.
ஆபத்தான தடுப்பூசிகள்:
உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் கொடூரமான ரசாயன விஷங்கள் கலக்கப்பட்ட தடுப்பூசிகளை யாருக்கும் போடக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், லாபம் சம்பாதிப்பதற்காக அவைகள் இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளில் சர்வசாதாரணமாக புழங்குவதாக சொல்கிறார்கள். எனவே, நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் கீழ்க்கண்ட ரசாயன நச்சுகள் அதில் இருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை சரிபாருங்கள். குடும்ப மருத்துவர்களின் உதவியை நாடுங்கள்.
அமோனியம் சல்பேட் - வயிறு, குடல் கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்று நோய்களை ஏற்படுத்தும்; லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பை உண்டாக்கும்; எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை உண்டாகும்; அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா உண்டாகும்; ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோயை உண்டாக்கும்; டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்;
குளுதரால்டிஹைட் - பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் - ஒவ்வாமை; பாலிமைக்சின் பி பாதரசம் - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் கருதப்படுகிறது. மூளை, நரம்பு களில் பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாக கருவில் வளரும் சிசுவை அடையும்; நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும். மூளை வளர்ச்சி குறைப்பாட்டை உண்டாக்கும்; பினால் (கார்பாலிக் அமிலம் / எதிலின்கிளைகால் / பினோஜைதனால்) - செல்களை பாதிக்கும் விஷம்.