.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 1 October 2013

ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!! அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!


வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21 நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கிடு , கிடுவென உயரும். இதனையடுத்து பொருளாதாரம் பல கட்டங்களாக பாதிக்கப்படும் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது.



உலகின் வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் ஒபாமா அரசு 2 வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு பார்லி.,யில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதிச்செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார திட்டத்திற்கு நிதி செலவினம் அதிகம் ஒபாமா அரசு ஒதுக்கியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 



இதனால் ஒபாமா நிர்வாகம் அரசு நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் வேலை இழப்பர். இந்த மாதச்சம்பளம் மட்டும் தந்து விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவையாக சுகாதாரம், ராணுவம், பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியில் இருப்பர். இந்த மூடல் நடவடிக்கையால் வாரத்திற்கு 100 கோடி இழப்பு ஏற்படும் வன்று தெரிகிறது.



US begins government shutdown as budget deadline passes. 


**************************************



The US government has begun a partial shutdown after the Republican-led House of Representatives refused to approve a budget for next year.A midnight deadline passed without agreement despite a last-gasp appeal by President Barack Obama.More than 700,000 US government workers face unpaid leave with no guarantee of back pay once the deadlock is over.


தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.


1 - T N satate
 



மேலும் இன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பட்டியலை வாக்காளர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும்,


 elections.tn.gov.in/searchid.htm 


என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெற செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 



வெளிநாட்டில் வசிப்போர் வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், பிற விபரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்கள் ஜெராக்ஸ் நகலும் அளிக்கப்பட வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டு சரிபார்த்து அப்போதே திரும்ப கொடுத்துவிடுவார். படிவம் 6 ஏ தபாலில் அனுப்பும்போது பாஸ்போர்ட் நகல்கள் சுய சான்றொப்பமிடப்பட்டு இணைக்கப்பட வேண்டும் என்று .தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

Monday, 30 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா


பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




sep 30 jayalalitha
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக, மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இயக்ககம் ஒன்றை 1993 ஆம் ஆண்டு துவக்கியதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையையும் வெளியிடச் செய்தேன்.


2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இதனைத் தொடர்ந்து, மன வளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக உடல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது;



ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டது; பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கான உதவித் தொகை 100 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு சலுகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.



அண்மையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் சலுகையை மாற்றுத் திறனாளிகளின் துணைவியாருக்கு விரிவுபடுத்துதல்; மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கான 14.5 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியினை முற்றிலும் நீக்குதல்; 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகளை வழங்குதல்; பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியினை புதுப்பித்தல்; எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடியை வழங்குதல்; 6 வயதுக்குட்பட்ட பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆரம்ப பயிற்சி நிலையங்கள் அமைத்தல்; பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கென மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து வழங்கப்படும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்துதல் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளேன்.



பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆணையிட்டிருந்தேன். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்கள்.


இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.



இதன்படி, பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.



இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.


தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?


காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றன.



இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..




sep 30 health eyes
 

கண் எரிச்சலைப் போக்க


கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.


தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.


புத்துணர்ச்சி பெற


வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.


வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


கருவளையம் போக்க


வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.


கண்கள் குளிர்ச்சி பெற



உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.


சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.


வசீகர கண்கள்


கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.


ப்ளீச் வேண்டாமே


முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.


உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

பிள்ளையார் சுழி! காரணம்!





எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம்.  எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது  Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே  அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும்,  நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப்  பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு  நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight   forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள்  இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம  ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.

த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம்  என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன  அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.  ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற  ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே  பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம்  விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும்  ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.

விஷ்ணு தன் விரலையே நேராக  நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப்  பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி)  விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line  ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.

வட்டமாகச் சுற்றுகிற  ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும்  போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார்  சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு,  அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று  என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம  பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி  சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில்  கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப்  பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’

காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’   



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top