.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 17 September 2013

முள்ளங்கி தயிர் பச்சடி!


முள்ளங்கி தயிர் பச்சடி


தேவையானவை:

முள்ளங்கி - 3
தயிர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது),
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


 

• முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

• தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு).

• பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் .

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

• இந்த முள்ளங்கி தயில் பச்சடி சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உடல் குளிர்ச்சிக்கு இந்த பச்சடி சிறந்தது. 


முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் பெறுவதற்கு!



இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை.


 ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. 


Screen grab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும்,


 IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், 


Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. 



கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

Click Here

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்!


முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்


* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும். 


*  கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். 



*  நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். 



* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. 



* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும். 



* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். 



* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

தமிழைத் தாங்கி வந்த போன்கள்!



புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரு மொபைல் போன்களிலும் முதல் முறையாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டில், இது தமிழுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பாகும். இதுவரை நமக்குக் கிடைத்த ஸ்மார்ட் போன்களில், ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில் தான், கீ போர்டுடன் கூடிய தமிழ் தளம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சேர்த்து கிடைத்துள்ளது. இதன் மூலம் நாம் தமிழ் கீ போர்டினை நேரடியாகப் பயன்படுத்த முடியும். இதுவரை செல்லினம் என்னும் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து இயக்கி, அதன் வழி தமிழைப் பயன்படுத்தினோம். 


மொபைல் சாதனங்களில், தமிழில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான கம்ப்யூட்டர் கட்டமைப்பினைத் தருவதில், முத்து நெடுமாறன் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். முதன் முதலில் இதனை வடிவமைத்தவரும் இவரே. ஐ.ஓ.எஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களும் அவர் வடிவமைத்தவையே. இப்போது ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், அந்த எழுத்துக்களில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான உள்ளீடு அமைப்பினையும் அவரே வழங்கியுள்ளார். 


இந்த இரு போன்களிலும், தமிழ் 99 மற்றும் அஞ்சல் கீ போர்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து, நாம் தமிழ் டெக்ஸ்ட்டை உள்ளீடு செய்திடலாம். இனி, இந்த முறையில், ஐபோன்கள் மட்டுமின்றி, ஐபேட், ஐபாட் ஆகிய சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்தலாம். இதற்கு முன்னர், தமிழுக்கென உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்து, பதித்து, பின்னர் அவற்றை இயக்கி நாம் தமிழை உள்ளீடு செய்திட முடியும்.



 தற்போது போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இவை தரப்பட்டுள்ளன. எனவே, நேரடியாகவே தமிழைப் பயன்படுத்தலாம். இந்த சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர் போன்ற சமூக இணைய தளங்களில், நேரடியாகவே தமிழை உள்ளிடலாம். இந்த சாதனங்கள் மூலம், தேடல் வேலையில் ஈடுபடுகையில், தமிழிலேயே டெக்ஸ்ட் அமைத்துத் தேடலாம்.


Click Here

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்!



இந்தியமொபைல் போன் தயாரிப்பாளரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் தன் தயாரிப்புகளிலேயே, மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேன்வாஸ் டூடில் 2 (Canvas Doodle 2 ) என அழைக்கப்படும் இந்த போன் தான், இந்நிறுவனத்திலிருந்து அதிக விலையிடப்பட்டு வந்திருக்கும் போன் ஆகும். இதில் 5.7 அங்குல திரை தரப்பட்டுள்ளது. சாம்சங் காலக்ஸி நோட் 3 போனிலும் இதே அளவில் திரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Snapdeal வர்த்தக இணைய தளத்தில், தற்போதைக்கு இந்த போன் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.19,900. இதற்கான விளம்பரத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பேஸ்புக் தளத்தில், உங்கள் கற்பனை இதைக் காட்டிலும் பெரியதாக இருக்குமா? என்று கேட்டிருந்தது.


இதன் திரை டிஸ்பிளே ரெசல்யூசன் 1280 x 720 என உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராச்சர், இந்த போனில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜிபி ஆகவும்,ஸ்டோரேஜ் மெமரி 12 ஜிபிஆகவும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதனை இயக்குகிறது. 12 எம்.பி. திறன் கொண்ட, டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா செயல்படுகிறது. 2ஜி, 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்கின்றன. இதன் 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 8 மணி நேரம் பேச மின்சக்தியினை அளிக்கிறது. 



இந்த ஆண்டில், 30 ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. இதன் கேன்வாஸ் எச்.டி.மற்றும் கேன்வாஸ் 4 ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.


Click Here

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top