.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 September 2013

அழகை தரும் இயற்கை பொடிகள்!

அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை  வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர்  பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி  கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன  பொருட்களை.  எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம் கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்உலர்ந்த மகிழம் பூ-200கிராம்கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்கோரைக்கிழங்கு...

இதுவரை விலங்கினங்கள் மீது 3,20,000 வைரஸ்கள் கண்டறியப்பட்டது!

விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று சுறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடிய வௌவால் இனத்தை அமெரிக்க மற்றும் வங்கதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மற்ற விலங்கினங்களிலும் 3,25,000 வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் கண்டுக்கொண்டு சரி செய்தால் எதிர்காலத்தில் தொற்று நோய்கள்...

உன்னோடு ஒருநாள் - திரை விமர்சனம்!

தனியார் எப்.எம். ஒன்றில் அர்ஜுனும், ஜிப்ரானும் நண்பர்களாக பணிபுரிகின்றனர். அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் நாயகி நீலம். ஜிப்ரான் பெண்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இருப்பினும் நாயகி மீது தனி பிரியம் கொள்கிறார். அதேவேளையில், அர்ஜுனுடனும், ஜிப்ரானுடனும் நாயகி நெருங்கி பழகுகிறார். ஜிப்ரான் ஒரு கட்டத்தில் நாயகியிடம் தன் காதலை சொல்ல, அவள் மறுக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். ஒருநாள் ஜிப்ரான் எதார்த்தமாக ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை தவறாக புரிந்துகொண்ட நாயகி, அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன், நாயகியிடம் தன் காதலை கூறுகிறான். காதலில் தோல்வியடைந்த நாயகிக்கு, அர்ஜுனின் ஆறுதல் வார்த்தைகள் பிடித்துப் போய்விட,...

முதல் உதவி – ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை முறைகள்!

பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் ஆலோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை. விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத்...

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்: கமல் பேச்சு

நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது:- இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். அதுபோல், நான் வரமுடியாத நிகழ்ச்சிகளுக்கு என் சார்பாக அவர் கலந்து கொள்வார். இப்படித்தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’ என்ற பாடல் சத்யா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பு இடைவேளையின்போது ஸ்டுடியோவின் வெளியே வந்து ரஜினியிடம், நாம் ஒரு சம்பளத்தை இருவரும் பங்கிட்டு வாங்கிக் கொள்கிறோம். நீ ஒரு திரை நட்சத்திரம்,...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top