.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 13 September 2013

ஆப்பிள் 5சி & ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்!( Apple 5C and Apple 5S )



சின்ன வயசுல வாத்தியார் கிட்ட ஏதாவது ஒன்னு சொல்லனும்னா – வேறுபாடு – கோடுபோடுன்னு சொல்லுவாப்பல – அது போல ஆப்பிள் அறிமுகபடுத்திய 5 சி / 5எஸ் பற்றி சின்ன கம்பாரிஸன்
ஆப்பிள் 5 சி – சீப்புனு நினைச்சா அது தப்பு ஏன்னா ஆரம்ப விலையே 35,000 – ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு கான்டராக்ட் விலையில் இது 99 டாலருக்கு கிடைக்கும்.

ஆப்பிள் 5எஸ் – விலை அதிகம்னு நினைச்சா தப்பு – ஆரம்ப விலையே 41,000 தான் – ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு இரண்டு வருட கான்டரக்டில் 199 டாலருக்கு கிடைக்கும்.


sep 13 - raviApple-iphone-5c-vs-5S

 


ஆப்பிள் 5 சி – ஏ6 சிப் – ஓ எஸ் 7 இருக்கு பழைய போனோடு கம்பேர் செய்தால் அதிக வேகம் – ஆனா பிளாஸ்டிக் பாடி
ஆப்பிள் 5 எஸ் – ஏ7 சிப் – ஓ எஸ் 7 இருக்கு பழைய போனோடு கம்பேர் செய்தால் மிக அதிக வேகம் – சூப்பர் மெட்டாலிக் பாடி, ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் மற்றும் இரண்டு எல் ஈடி மாதிரி நிறைய எக்ஸஸ்
இரண்டு ஃபோனும் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகள் பத்து மணி நேரத்திற்க்கு மேல் டாக் டைம் அதனால் பாஸ் பாஸ்
ஓஸ் 7 மிக அற்புதமான ஒரு ஓவர்ஹால் சாஃப்ட்வேர் – சும்மா நச்சுனு இருக்கு – மொத்தமா புது ஃபோன் போல இருக்கும் இந்த சாஃப்ட்வேர் பழைய போன்ல போட்டாலே – டெவலர்ப்புக்கு கொடுத்து நாளாச்சு எனக்கு மிகவும் பிடித்த மாதிரி உள்ளது சில நாட்களில் விரிவாக எழுதுகிறேன் இதன் ரெவ்யுவை – ஒகே யார் யார் எனக்கு ஆப்பிள் 5 எஸ் வாங்கி தரீங்க – லைன்ல வரனும் அடிச்சுக்க கூடாது………..


Apple 5C and Apple 5S -



***************************************



Apple’s big news today was the unveiling of two new iPhone models, the 5C and5S. What’s the difference between the two? You’re in luck. Here’s a side-by-side breakdown for the 5C and 5S.
Price, With Contract

5C: $99 for 16GB, $199 for 32GB with a cellular-service contract. Cases are $29 each.
5S: $199 for 16GB, $299 for 32GB, $399 for 64GB on contract. Cases are $39 each.


Price, Unsubsidized


5C: $549 for 16GB, $649 for 32GB
5S: $649 for 16GB, $749 for 32GB, $849 for 64GB


Color and Material 


5C: Plastic body comes in five bright colors: fluorescent white, green, blue, pink and yellow. The 5C’s body is comprised of a single part with no seams or joints. Apple’s cases for the 5C are made of silicon rubber.

5S: A metallic body that comes in silver, gold, and space gray. The model is constructed of high grade aluminum with chamfered edges. Apple 5S cases are leather.


Camera


5C: 8 megapixel rear iSight camera and a new front-facing FaceTime HD camera.

5S: The 8 megapixel camera features an f/2.2 aperture and a larger light sensor than the iPhone 5. A new camera app takes multiple photos with every shutter press and chooses the best picture in terms of light levels, sharpness, and stabilization. A two-LED flash adjusts color and intensity, offering what Apple claims are more than 1,000 combinations.


Technical Specifications 


5C: Apple-designed A6 processor/graphics chip, 4-inch “retina” display

5S: 64-bit A7 processor/graphics chip, M7 “motion coprocessor” chip for analyzing accelerometer and other motion data, home-button fingerprint sensor, 4-inch “retina” display


OS 7 is the best of the best

மருந்தாகும் உணவுப் பட்டியல் – 1


* கேரட்டில் உள்ள ரெடின் ஏ இளமையில் வயோதிகத்தை தடுத்து, சருமத்தின் வெளி படிவத்தை பராமரிக்க உதவுகிறது.

• முகம் பொழிவுடன் இருப்பதற்கு, உணவுடன் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சீஸை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஸ்விஸ், செட்டர் அல்லது கௌடா போன்ற சீஸ் வகைகளை விரும்பி சாப்பிட்டால், அவை வாயில் பாக்டீரியாவை அழித்து, பல் சொத்தையாவதை தடுக்கும்.

• சருமத்தில் கொலாஜன் இருந்தால், சருமம் இளமையுடன் காணப்படும். ஆனால் கொலாஜனை நேரடியாக சருமத்தில் சேர்க்க முடியாத காரணத்தால், கொலாஜன் அடங்கிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

sep 13 - FOOD for HEALTH

 

• பூண்டு சரும சுருக்கத்தை போக்கி, திசுக்களை புதுப்பிக்க உதவுகிறது. ஆகவே முடிந்த வரையில் இதனை அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

• பற்கள் சொத்தையாகாமல் பாதுகாக்க தயிர் மிகவும் உகந்தது. தயிரில் கால்சியம் அதிகமாக இருப்பதால், பற்களை வெள்ளையாக வைத்திருக்கும்.

• தக்காளியில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் அதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சருமம் மென்மையாக இருக்கும்.

• தினமும் காய்கறிகளை 3-5 முறை சாப்பிட வேண்டும். இதில் தினமும் ஒருவேளை பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை சாப்பிட வேண்டும்.. மேலும் ஒவ்வொரு முறையும் 1/2 கப் நறுக்கிய பழங்களை சாப்பிட வேண்டும். இது சருமத்தை பொலிவுடன், இளமையாக வைத்திருக்கும்.

• தினமும் குறைந்தது இரண்டு முறையாவது பால் அல்லது தயிரை குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 8 அவுன்ஸ் பால் அல்லது தயிரை பருக வேண்டும்.

• வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

• நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

• கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த 
அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

• தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

• நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

• கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

• தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

• வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

• கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

இளநரையும் அதைத் தவிர்க்க சில ஈசியான வழிகளும்!


பெரும்பாலும் வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!!

அதற்கு முன்னதாக இந்த இளநரை தோன்றுவதற்கான சில காரணங்களை தெரிந்து கொள்வோமா?


sep 13 - lady ilaanarai

 

தவறான உணவுப்பழக்கங்கள் 

அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம். ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.


வைட்டமின் பி12 குறைபாடு 


குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமை
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்சனை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பிகளில் பிரச்சனை 

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம். இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு 

சுற்றுப்புறச் சூழல் மாசு அடைதலால் சருமம் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அதே சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் 

தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இப்பொருள்களை அதிகமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்துதல் கேடு. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை நினைவில் கொண்டு, தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.

மன அழுத்தம் 

எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் விதமாக, தேவையான மருத்துவத்தை மேற்கொண்டு, ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயல வேண்டும்.


டூத் பேஸ்ட் 


பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. எனவே இதுமாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பதற்கு இவை காரணமாக அமையுமா என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.


பரம்பரை 

இறுதியாக, இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர்.

ஆக இப்போதெல்லாம் இளம் வயது உள்ளவர்களுக்கும நரை முடி என்பது பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு கலரிங் பண்ணுவது நமக்கு நல்லது அல்ல. எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிறத்திற்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..

* நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.

* தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

* முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

* முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது.

இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து விடும்.

‘மத்தாப்பூ’ ஜாலியான காகித பூ ! – திரை விமர்சனம்



சினிமாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கும்போது அதில் பயணப்படும் சிலர் வழியில் கிடைக்கும் சின்ன சின்ன ஆசையான ‘காட்டாற்று வெள்ளத்தில்’ அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகிறவர்கள் பட்டியலில் சிக்கி எப்படியோ மீண்டு ‘மத்தாப்பூ’ ஆக வந்திருப்பவர் இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜ்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸ் இயக்குனர் நாகராஜூக்கு கை கொடுக்குமா….
‘மத்தாப்பூ’ படத்தின் பெயரில் ஒரு புன்னகையை வைத்திருக்கிற இயக்குனர் பட கிளைமாக்ஸ்வரை ஹீரோயின் முகத்தில் சிரிப்பையே காட்டாமல் வைத்திருக்கிறார்… அந்த ‘உம்’ முகத்திற்கு ரொம்ப பொருந்துகிறார் காயத்திரி.
புதுமுகம் ஜெயன்… புதுமுகம் என சொல்ல முடியாதபடி நக்கல் நையாண்டியிலும், அதிரடி ஆக்ஷனிலும், காதல் தோல்வி சோகத்திலும் விதவிதமான வித்தியாச முகபாவனைகளை ரொம்ப அனாயசமாக காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்கிறார்…
ஹீரோவின் அம்மா ரேணுகா, சித்தி சித்தாரா, சித்தப்பா இளவரசு, ஹீரோயின் அம்மா கீதா என மூத்த கலைஞர்கள் ஜாலியாக வந்து போகிறார்கள்…
எல்லாம் சரி… ‘மத்தாப்பூ’ கதை என்னப்பா… என்கிறீர்களா…

sep 13 - mathapoo_ cinema

 


ஹீரோயின் காயத்திரி அறந்த வாலு டைப்… கல்லூரியில் கலாட்டா பேர்வழி… ஒரு பையனுடன் நட்பு ஏற்படுகிறது… அந்த நட்பை நம்பி ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போகும்போது அங்கே வேறு விதமான சிக்கலில் மாட்டி போலீஸ் நிலையம் செல்லும் நிலைக்கு ஆளாகிறார்… வீட்டிற்கு வரும் காயத்திரியை ‘ஆம்பள வேணும்னு சொல்லியிருந்தா நாங்களே கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமேன்னு’ அம்மா கீதா சொல்ல.,..

அந்த தினத்தில் இருந்து அம்மா என அழைப்பதை தவிர்கிறார் காயத்திரி… ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவும், பொண்ணும் பேசிக் கொள்வதில்லை… அதேநேரம்… ஹீரோயின் காயத்திரி தனது பழைய வால் தனங்களை மூட்டை கட்டி பரணில் தூக்கிப்போட்டு விட்டு சிரிப்பை தொலைத்து விட்டு முகத்தை உர்ரென வைத்துக் கொள்கிறார்…

ஆண்களை கண்டாலே பிடிக்காமல்போகிறது…

நம்ம ஹீரோ அநியாயத்துக்கு எங்க தப்புன்னாலும் வந்து தட்டிக்கேட்கிறார்… திருச்சியில் அப்படி ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கப்போக போலீஸ் பஞ்சாயத்தாகி சென்னையில் இருக்கும் சித்தி சித்தாரா வீட்டுக்கு வந்து சேருகிறார்…

வந்த இடத்தில் ஒரு காபி ஷாப்பில் பர்சை தொலைத்துவிட்டு நிற்கும் ஹீரோவைத்தேடி காணாமல் போன பர்சை எடுத்துக் கொண்டு வருகிறார் ஹீரோயின் காயத்திரி…

முதல் சந்திப்பிலேயே ஹீரோயின் மீது ஹீரோவுக்கு ஒரு ‘இது’ பிறக்கிறது…
ஆனால்… அதை சொல்வதற்குள் ஹீரோயின் மறைந்து போகிறார்….
அவர் எங்கே போனார்… யார்… பேரென்ன என்பது தெரியாமல் ஹீரோ குழப்பத்தில் இருக்க… ஒரு நாள் வீட்டு காலில் பெல் அடிக்கிறது. கதவை ஹீரோ திறக்க… வாசலில் அந்த பர்ஸ் கொடுத்த ஹீரோயின்…

ஹீரோயினை மடக்க பல ஐடியாக்களை போடும் ஹீரோவுக்கு எதுவும் பலன் அளிக்கவில்லை… ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஏன் எப்போதுமே ‘உர்ர்ர்’ ஆக இருக்கிறார் என்பதை சித்தி சித்தாரா மூலம் ஹீரோ தெரிந்து கொள்கிறார்…
ஹீரோயினை சிரிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்தும்… அதிரடி ஆக்ஷனில் சண்டை போட்டும்… நேரடியாக காதலை சொல்லியும் ஹீரோயின் மசிவதாக இல்லை… காதலையும் மறுத்து விடுகிறார்…

கடைசியில் ஹீரோ ஜெயன்… ஹீரோயின் காயத்திரி சேர்ந்தார்களா… என்பதுதான் கிளைமாக்ஸ்….

இப்போது வரும் வழக்கமான கதையில் இருந்துகொஞ்சம் வருஷங்கள் பின்னால் போய் பார்த்தால் இந்த கதை புதுசாக தெரியும்… ஹீரோவை தேடி ஹீரோயின் அவர் வீட்டுக்கு வரும்போதே கதையை முடித்திருந்தால் சபாஷ் போட்டிருப்பார்கள்… அதன்பிறகு கதையை இழுழுழுழுழுத்து முடித்திருக்க வேண்டியதில்லை…

பாடல்களில் 10 வருஷத்து பழைய சாயல்… பின்னணி இசையில் சபேஷ்முரளியின் அதிரடிகள் பல இடங்களில் சபாஷ் முரளி போட வைக்கிறது…

இப்போது வரும் படங்களை பார்க்கும்போது ‘தினந்தோறும்’ நாகராஜ் சொல்லியிருக்கிற ‘மத்தாப்பூ’ கதையின் பின்பாதியில் கொஞ்சம் கத்திரியை மட்டும் போட்டால் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்…

ஸ்ரீசாந்த்-அங்கீத் சவானுக்கு வாழ்நாள் தடை: பி.சி.சி.ஐ. நடவடிக்கை



ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது என்று பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEP 13 - CRIKST Sreesanth_and_Ajit_Chandila

 



ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் மூவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.


இந்த அறிக்கையை பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர்களான அருண் ஜெட்லி, நிரஞ்சன்ஷா ஆகியோர் கொண்ட இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 4 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது. 


சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா மற்றும் அமித் சிங் ஆகியோர் உள்ளிட்ட வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை மற்றும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு, 4 வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது.இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.

BCCI bans Sreesanth, Chavan for life

****************************************


 Cracking the whip on corrupt players, the BCCI on Friday slapped life bans on Indian Test pacer S Sreesanth and spinner Ankeet Chavan for being involved in the IPL spot-fixing scam while handing out lesser punishments to some others in the scandal which rocked the Twenty20 league this year.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top