.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 12 September 2013

'தன் கையே தனக்கு உதவி'..........குட்டிக்கதை



வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...

ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.

'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.

'அப்படியா..நமக்காக நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார் 'என்றான் விக்னேஷ்.

அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.

தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.

(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)

ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை



ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!



தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Click Here

ரஜினி பட தலைப்பில் கார்த்தி!! ரஞ்சித் இயக்குகிறார்!


 சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்கு பிறகு கார்த்தி ரொம்ப நிதானமாகவும், படத்தின் கதையை நன்றாக கேட்டும் அடுத்த படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தற்போது வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்திலும், ராஜேஷின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்தபடியாக ஒரு படத்தில் கார்த்தி நடிக்கிறார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தான் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார். வழக்கம் போல் கார்த்தி, சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் அறிமுகமாகிறார். ரஜினி நடித்த படங்களின் தலைப்பு ஒன்று தான் இப்படத்தின் தலைப்பாக இருக்கிறது. ஆனால் அது என்ன தலைப்பு என்பதை வெளியிடவில்லை.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் ரஞ்சித் கூறுகையில், படத்திற்கு ரஜினி பட பெயரைத் தான் தேர்வு செய்துள்ளோம். ஆனால் அது என்னவென்று இப்போது கூற முடியாது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும், படத்‌தின் தலைப்பையும் அறிவிக்கிறோம் என்று கூறினார்.

ஏற்கனவே மூன்று முகம் படத்தில், ரஜினி கேரக்டரின் ஒரு பெயரான அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரில் தான் கார்த்தி நடித்த கடைசி படமான அலெக்ஸ் பாண்டியன் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம் வரும்!



"பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,'' என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட படி நடந்து வந்தனர்.

இதுகுறித்து ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி முதன்மை செயலாளர் அஜீத்குமார் லால்மோகன் கூறியதாவது: சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் மட்டுமில்லை; சாப்பிட கூடாத உணவைச் சாப்பிடுவதாலும் பல்வேறு நோய்கள் உண்டாகி வருகின்றன. மக்களுக்கு தங்கள் சாப்பிடும் உணவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. கடைகளில் புதிய பெயரில் எந்த உணவை விற்றாலும், அதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. அதனால், உடலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இன்றைக்கு பெரும்பாலான உணவு வகைகள், மைதா மாவில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்களில் மைதா மாவில் தயாரிக்கப்படும் "பரோட்டா'தான் அதிகளவில் விற்பனையாகிறது. மைதா மாவு, ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது; மைதா இயல்பாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்; அதை வெண்மையாக மாற்ற, "பென்சாயில் பெராக்ஸைடு' மற்றும் "அலாக்ஸான்' என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது; இதனால், மைதா வெள்ளை நிறமாகவும், மிருதுவான தன்மையுடனும் மாறுகிறது.இந்த "பென்சாயில் பெராக்ஸைடு' என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். "அலாக்ஸான்' என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் "அலாக்ஸான்' கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது.

இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது. மைதா "பரோட்டா' சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நடத்திய ஆய்வில், "பரோட்டாவில் "கார்போஹைடிரேட்' அதிகம் இருப்பதும், நார் சத்து இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விலை குறைவு என்பதால் "பரோட்டா' உள்ளிட்ட மைதாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்; இதனால், பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த பல நோய்கள், ஏழைகளுக்கும் வர வாய்ப்புள்ளது; எனவே, "பரோட்டா' சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அஜித்குமார் லால்மோகன் கூறினார்.

இது விலங்குகளுக்கான உணவு...!



மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' குறித்த வேறு சில தகவல்கள்:
* மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.
* மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.
* இன்றைக்கு மைதாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக அளவில் தயாரிக்கப்படுவது புரோட்டா மட்டுமே.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top