படிக்காத
ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல
புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ
கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து பணப்பையினை பிடுங்கிக் கொண்டார்கள்.படித்தவனைப் பார்த்து..'உன்னிடம் இருப்பதையும் கொடு' என்றனர்....படித்தவன்
தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறியதோடு திருடர் தலவனைப் புகழ்ந்து
புத்திசாலித்தனமாக ஒரு...
Tuesday, 10 September 2013
'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை
18:10
ram
No comments
ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.
ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...
ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.
'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.
புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.
'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...
அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.
'நீ
சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ...
பள்ளி மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் போட்டி!
18:05
ram
No comments
கூகுள் நிறுவனம் நடத்தும் படைப்பாக்கத் திறன் போட்டியில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும், இப்போட்டியில் பங்கேற்பது எளிது. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.
மாணவர்கள் ஏதேனும் ஒரு கதை, விளையாட்டு, இசைப் போட்டி, கார்ட்டூன் அல்லது ஏதேனும் ஒரு வித்தியாசமான படைப்பை பற்றி சிந்தித்து, MIT Media Lab உருவாக்கியுள்ள ஸ்கிராட்ச் (Scratch) புரோகிராமிங் லேங்க்வேஜை உபயோகித்து புதிதாக ஏதேனும் ஒன்றை உருவாக்கவேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் Scratch அல்லது C+ + அல்லது Java மொழியைப் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கலாம்.
ஆன்லைன்...
அட!
17:48
ram
No comments
இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.
இத்தளத்திற்குச் சென்றால் நீலம் மற்றும் சிவப்பு அம்புக்குறிகள் நிறைந்த இந்திய வரைபடம் தோன்றும். நீல நிற அம்புக்குறிகள் சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும், சிவப்பு நிற அம்புக்குறிகள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும் குறிக்கும். நீல நிற அம்புக்குறிகளில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், ரயிலின் பெயர் மற்றும் எண், ரயில் கிளம்பிய நாள், கடைசியாக கடந்த ரயில் நிலையம். அடுத்துள்ள ரயில் நிலையம், அவற்றிற்கிடையே உள்ள...
இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷக் கருவிக் கண்டுபிடிப்பு!
17:39
ram
No comments
பார்வையற்றோர் காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves) பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே படம் பிடித்தாற்போல் உணர்ந்து கொள்கிறது.
இது குறித்து ஜெருசலேமிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அமிர் அமேதி கூறுகையில்;
இந்த நவீனக் கருவியில் ஒருவித கேமரா பொருத்தப்பட்டுள்ளது....