.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 31 August 2013

கறிவேப்பிலை மகிமைகள்!

சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. “கறி” எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.”கறிவேப்பிலை” எனும் சொல் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது

31 - curryleaf

 


உணவு வகைகளில் போடப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை, உண்ணும் போது சிலர் எடுத்து வெளியில் போட்டுவிட்டே உண்பர். அநேகமானோர் இதனை சமைக்கும் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே கருதி விடுகின்றனர். ஆனால் கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டுமன்றி, சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியுமாகும்.கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்துநீங்கும்.

இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்.

இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.

இளநரை மாற;

கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கை,கால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

கறிவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும். கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

கறிவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!


விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.


31 - blood_cells

 


ஜப்பானில் உள்ள தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில் செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த கசிவு உடனடியாக தடுக்கப்படும்.
தற்போது விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதித்து உள்ளனர். அதில் மருந்து வெற்றிகரமாக வேலை செய்தது. இந்த புதிய மருந்து மூலம் உலகில் பெரிய அளவில் விபத்து மரணங்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஆபரேசன் செய்யும் போதும் இந்த மருந்தை பயன்படுத்தினால் அதிக ரத்தபோக்கை தடுக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு!




மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 7ம், பிட்டர் பிரிவில் 17ம், மில் ரைட் பிரிவில் 3ம், மெஷினிஸ்ட் பிரிவில் 13ம், வெல்டரில் 9ம், டர்னரில் 4ம், ஏ.சி., மெக்கானிக்கில் 24ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 7ம், எலக்ட்ரிகலில் 61ம், எலக்ட்ரானிக்ஸில் 9ம், மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேனில் 10ம், சி.என்.சி., ஆபரேட்டரில் 1ம் காலி இடங்கள் உள்ளன.

31 - vazhikatti bhabha


தகுதிகள்: பார்க் நிறுவனத்தின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி மாறுபடும் என்ற போதும் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ப்ளஸ்டூ படிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய துறையில் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற தகுதி தேவைப்படும். எனவே சரியான தேவைகளை இணையதத்திலிருந்து அறியவும். 

இதர அம்சங்கள்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இந்தப் பதவிக்கு மாதம் ரு.6 ஆயிரத்து 200 ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பிணைய அடிப்படையில் பணி புரிய வேண்டியிருக்கும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைன் முறையிலேயே தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். 

விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.09.2013 

இணையதள முகவரி : http://www.barc.gov.in/

டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!

Hike in petroleum products


டீசல்,மண்ணெண்னை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயரப்போகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


பெட்ரோலிய துறை அமைச்சர் இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்..அந்த சந்திப்பின் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் இந்த வருடம் மட்டும் 180000 கோடி இழப்பு ஏற்படும் அதை ஈடுகட்ட விலை உயர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

விலையை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டீசல் விலை ஐந்து ரூபாய் வரையிலும்,மண்ணெண்னை விலை இரண்டு ரூபாயும்,எரிவாயு விலை ஐம்பது ரூபாயும் அதிகரிக்கும் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Diesel price may be hiked by Rs 3-5 a litre, LPG by Rs 50

ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய iWatch!


apple_iwatch_001 



ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுவருவது அறிந்த விடயமே.

தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் அப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் இதனை செல்பேசிக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே அப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top