.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 23 August 2013

""சிந்தனை விருந்து"



  •  யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.
  •  மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
  •  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!
  • முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!
  • அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
  • நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
  • மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.
  • தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

இந்திய அரசியலமைப்பு - தகவல்கள்

இந்திய அரசியலமைப்பு - தகவல்கள்

இந்திய அரசியலமைப்பு

இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது.   தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

  இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.

பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.

இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்.

தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்.

  இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.

  இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது.

  மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.

அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.

  நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன.

அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

  இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை).

  நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.

ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்.

  அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது.

பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.

இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்
இங்கிலாந்து:

1. சட்டமியற்றும் முறை:

2. சட்டத்தின் பணி

3. ஒற்றைக் குடியுரிமை

4. பாராளுமன்ற முறை அரசாங்கம்

5. கேபினட் முறை அரசாங்கம்

6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்

7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு

8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்

9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்
அமெரிக்கா:

1. சுதந்திரமான நீதித்துறை

2. நீதிப்புனராய்வு

3. அடிப்படை உரிமைகள்

4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்

5. நீதிபதிகளை நீக்கும் முறை
  குடியரசு முறை அரசாங்கம்

அரசியலமைப்பின் முன்னுரை

துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்

அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்

உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்

அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்

ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)

ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்

பலமான மத்திய அரசாங்கம்

எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது
ஜெர்மனி: நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது

  ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை

ரஷ்யா: அடிப்படைக் கடமை கள்

கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை

 
தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை

அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்
முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும்.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.

அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது.

இந்திய அரசியலமைப்பு முகவுரை
இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது.

அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.

இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசும் அதன் எல்லைகளும்
இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.

புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2

புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3

புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4

*
இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.

1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.

  1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

  2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):

4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):

5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):

6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):

ஐந்து வகையான நீதிப் பேராணைகள்:

1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) :

தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):

ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.

3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition):

நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.

4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):

பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):

நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.
டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

அடிப்படைக் கடமைகள்
அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

42-வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி ஒய லி ஆ (அங்கம் 51 ஆ)லி ல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.

ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து இவை பெறப்பட்டன.

மாநிலங்கள் அவை (Rajya Sabha)
இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது.

மாநிலங்கள் அவை 250-க்கு மிகாத உறுப் பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், மத்திய ஆட்சிப் பகுதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

*உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது.

மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும்.

இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் தன்னு டைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

ஒரு துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்.

மக்கள் அவை (Lok Sabha):
மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது.

525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.

மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும்.

நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.

தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மக்கள் அவை ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும்.

நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):
சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.

சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது.

நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம்.

சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும்.

இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார்.

நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.

கூட்டத் தொடர்கள் பின்வருமாறு:

1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.

2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.

3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர்
இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார்.

இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' , "நடைமுறைத் தலைவர்' , "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார்.

*மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்

ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.

குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம்.

குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும்.

குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

1. நிர்வாக அதிகாரங்கள்

மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது.

மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலை வர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

2. சட்டமன்ற அதிகாரங்கள் :

  பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.

மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம் அவருக்கு உண்டு.

  பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

இவரது அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது.

பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளது.

3. நிதி தொடர்பான அதிகாரங்கள்

நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்ய இயலாது.

இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர்.

இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

4. நீதி தொடர்பான அதிகாரங்கள் :

குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் குடியரசுத் தலைவர்.

  அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெற இயலும்.

5. நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:

போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார்.

ராஜ்யசபாவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வாயிலாகவே ராஜ்யசபாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோ அப் பதவியை ஏற்பவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.

  பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். இதில் இரகசிய வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது.

துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம்.

ஸ் துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும்.

மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.

பிரதமர்
பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர், நிர்வாகத் துறையின் தலைவருமாவார்.

குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

அமைச்சரவை
அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.

அமைச்சர்கள் மூன்று வகையாக பிரிக்கப்படு கிறார்கள். அவை,

1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்

  காபினெட் என்பது சிறிய குழுவாயினும் அது அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க உறுப்பாகும்.

மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள்.

மாநில அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் துணை அமைச்சர்கள் எனப் படுவர்.

மாநிலச் சட்ட மேலவை

மாநிலச் சட்டமன்றம் ஓரவை அல்லது ஈரவை யைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும்.

மாநிலச் சட்டப் பேரவை

சட்டப் பேரவை ஓர் உண்மையான மக்கள் அவையாகும்.

சட்டப் பேரவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது.

சட்டப் பேரவையின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அது முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.

வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களை அது கொண்டுள்ளது.

ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறினால் ஆங்கிலோ இந்தியர் சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகின்றார்.

சட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும்.

இதில் சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை ஒரு விதிவிலக்காகும். அங்கு 30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.

சட்டப் பேரவையின் ஓர் உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயதடைந்தவராயிருத்தல் வேண்டும்.

சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற் காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம்.

சபாநாயகர்

சட்டப் பேரவை தனது உறுப்பினர்களுள் இருவரை முறையே சபாநாயகராகவும், துணைச் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கின்றது.

மாநிலச் சட்டப்பேரவைச் சபாநாயகரின் கடமைகள், அதிகாரங்கள், சலுகைகள் யாவும் மக்களவைச் சபாநாயகர் பெற்றுள்ளவை களுக்குப் பெருவாரியாக ஒத்துள்ளன.

ஆளுநர்

ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.

மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார்.

ஆளுநருக்குரிய தகுதிகள், பதவிக்காலம், தனிச் சலுகைகள் மற்றும் பலவற்றை அரசியலமைப்பு விவரிக்கின்றது.

மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்து கின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் அவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார்.

ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் அவர் நியமனம் செய்கின்றார்.

சட்டமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் பெற்றுள்ள அதே சக்தியை ஆளுநரால் பிறப் பிக்கப்படும் அவசரச் சட்டமும் பெற்றுள்ளது.

ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.

முதலமைச்சர்

அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சராவார்.

மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன.

அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார்.

முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும்.

முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.

அமைச்சகத்திலிருந்து ஆளுநருக்குச் செல்லும் ஒவ்வொரு தகவலும் முதலமைச்சரின் வாயிலாகவே செல்ல வேண்டும்.

முதலமைச்சர் கட்சித் கொறடாக்களையும் நியமனம் செய்கின்றார்.

அமைச்சர்குழு

சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம்

இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.

தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவுபெறும் வரை பதவி வகிப் பார்கள்.

உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு (Jurisdiction of supreme court) அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த உரிமைகள் தொடர்பாக பணிப்புரைகள் (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) ஆணைகள் (ஞழ்க்ங்ழ்ள்) அல்லது நீதிப்பேராணைகள் (ரழ்ண்ற்ள்) பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண் டுள்ளது.

உள்ளாட்சி அல்லது பஞ்சாயத்துராஜ்

பஞ்சாயத்து இராஜ்யம் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்க செய்த முதல் மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசமும் ராஜஸ் தானும் ஆகும்.

  அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள்

73-வது திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன.

12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது.

அவசர நிலைகள்
இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - ஆழ்ற் 352

தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

  6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - ஆழ்ற் 356 முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- ஆழ்ற் 360

நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்
நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

  நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324

தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)

  தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

் தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

  ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

  தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

  முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

 
கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு
திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

 
ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு
தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள
் தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.

1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்
இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

சிறப்பான சிந்தனைகள் பத்து!

சிறப்பான சிந்தனைகள் பத்து!

  1. படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
  2. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
  3. உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
  4. வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
  5. பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
  6. ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
  7. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
  8. மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
  9. கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
  10. அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

பழமொழிகள் சில...

பழமொழிகள் சில...

அகல உழுகிறதை விட ஆழ உழு. 
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 
போதுமென்ற மனமே பொன் செய் மருந்து.  
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. 
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.  
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பசியுள்ளவன் ருசி அறியான். 
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
பதறாத காரியம் சிதறாது. 
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். 
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.  
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.  
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு


 பூக்கள்.
அரளிச் செடியிலும்.


இருண்ட பௌர்ணமி.
அட...
சந்திர கிரகணம்.


வறுத்த மீன்.
மடித்த காகிதத்தில்
"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.


சுமக்க விரும்பியதென்னவோ
புத்தகப் பையை.
தீப்பெட்டிச் சிறுமி.


ரேசன் கடையில்
அரிசி கிடைத்தது.
எறும்புகளுக்கு மட்டும்.


உலகெங்கும்
ஒரே மொழியில் பேசும்
மழை.


பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.


சாத்தான் வேதம் ஓதியது.
சிகரெட் பெட்டியில்
எச்சரிக்கை.


கொட்டும் மழை.
எரியும் மனது
விற்றுவிட்ட நிலம்.


வானத்துக்குள் பிரவேசித்த
இன்ப வெள்ளத்தில்...
ஊஞ்சல் சிறுமி



பூங்காவில் ஒரு
நேர்காணல்...
மலர்களோடு!


தரையைத் தொடும்வரை
ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே
ஆலம் விழுதுகள்!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top