.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 19 December 2013

எதிரிகளை வெல்லுங்கள்.!



1.நம்மை அறிந்தோ அறியாமலோ வாழ்வில் எதிரிகள் உருவாகி விடுகின்றார்கள்.நமது கருத்துக்கு முரன்பாடான கருத்துக்களை செயல்களை நம்மை நோக்கி செயல் படுத்துபவர்கள் நேரிடையான எதிரிகள்.நம்முடன் இருந்து கொண்டே குழி பறிப்பவர்கள் மறைமுகமான எதிரிகள்.

2.இந்த மறைமுகமான எதிரிகளை நாம் தவிர்க்கவே முடியாது அவர்கள் நமது அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் உறவினர்கள்,நண்பர்கள் ,என்ற போர்வையில் இருப்பார்கள் .நாம் ஒரு அடி முன்னேற எடுத்து வைக்கப் போகின்றோம் என்றால் அதை முளையிலேயே கிள்ளி எரிவதில் வல்லவர்கள்.
                                         
3.இவர்களை எப்படி நாம் எதிர் நோக்குவது இப்படிப்பட்ட எதிரிகள் இல்லாமல் வாழ்வை நாம்  அமைக்க முடியுமா?என்றால் இவர்கள் இல்லாமல் நமது வாழ்வு இருக்காது ,ஆகவே இவர்களை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் எதிர் கொள்ளலாம்.

4.அதே போல் நேரிடையான எதிரிகளை எதிர் கொள்ள நேரிடையான செயல்கள் மேற்கொள்ளலாம்,நாம் அவர்களை விட்டு விலகலாம்,நண்பர்களாக மாற்றலாம் இல்லையென்றால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்கலாம்.

5.இவர்களை எதிர் கொள்வதில் தான் நமது வாழ்க்கை வெற்றி ரகசியம் இருக்கின்றது .இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல்  நாம் பழிவாங்கல் என்னும் செயலில் இறங்கினால் அது நமக்குத்தான் கெடுதலைத் தரும்.

6.ஒவ்வொரு மனதிலும் உருவாக்கப்படும் வெளியிடப்படும் எண்ணங்கள் ,அது வெளியிடப்படும் மனங்களில் எல்லாம் பரவி ஒரு நாள் நம்மிடமே அது திரும்பி வரும் .
                                                 
அப்பொழுது தெரியாது இந்த எண்ணம் நம்மால் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு இன்று செயலாக நம் முன் பரிணமித்து நிற்கின்றது என்று.சில எண்ணங்கள் உடனேயே நம்மை நோக்கி திரும்பும் .

7.ஆகவே முதலில் நம்மை எதிர்க்கும் நேரடியான எதிரியோ மறைமுகமான எதிரியோ அழிந்து விட வேண்டும்,அவர்களுக்கு நாமும் தொல்லை தர வேண்டும் , என்று  நினைத்து செயல்கள் செய்ய ஆரம்பித்தோம் என்றால், அந்த தொல்லைகளும் ,அழிவும்  ஒரு நாள் நம்மை நோக்கி பூமராங் போல கட்டாயம் திரும்பி வரும்.

8.ஆகவே முதலில் நமது எதிரிகள் என்ன பாடத்தை நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை உணர்ந்து அந்த பாடத்தை நாம் கற்று தெளிவுர வேண்டும்.அவர்கள் கட்டை போடும்,தொல்லைகள் தரும்  விசயத்தில் நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9.ஒரு ஆழமான வழக்குச் சொல் ஒன்று உண்டு ஒரு எதிரியைப் பழி வாங்க வேண்டும் என்று உங்கள் மனதில் தோன்றி விட்டால்   "அவர்கள் கண் முன்  நன்றாக வாழ்ந்து காண்பித்து அவர்களைப் பழி வாங்கு"  என்று. எவ்வளவு ஆழமான நேர்மறையான தனி நபர் வளர்ச்சிக்கும்  சமூக வளர்ச்சிக்கும் உகந்த ஆக்கப்பூர்வமான வழக்குச் சொல் இது.

10.இந்த வழக்குச் சொல் உணர்த்துவது உங்களது வாழ்க்கையில் தடை போடுபவர்களைக் கண்டு,தொல்லைகள் தருபவர்களைக் கண்டு  கலங்காமல் ,அவர்கள் போடும் தடையையே உணவாகக் கொண்டு வாழ்ந்து காண்பி என்று.வாழ்ந்து காண்பிப்போமா?

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top