.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 30 December 2013

மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!



கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!


               பரம எதிரியின் வாயாலும் பாராட்டு பெற வேண்டும். அதுதான் நாம் மாறியதற்கான அடையாளம்.

துரோகியையும் அன்னை யாகக் காண்பதுதான் ஆத்ம ஞானமாகும்.

நமது ஆழ்மனதில் மறைந்துள்ள ஆன்மாவை வெளிக்கொண்டு வரவே நமக்கு துரோகம் செய்கிறார் கள். இதைப் புரிந்து கொள்வது பூரண ஞானம்.

எதிரி நம் வாழ்வைச் சிறப்பாக்கும் சிற்பி என்று உணர்ந்தால், அவர் நமக்கு எதிரியில்லை; ஆன்மிகத் தோழன்.

தன்னுடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்பவருக்கு யாராலும் தொந்தரவு வராது. லட்சியத்தோடு வாழ்பவர்கள் இறைவனை சுலபமாக நெருங்கிவிட முடியும். சராசரி மனிதனாக இருக்கும் வரைதான் பிரச்சினை வரும். சமூகப் பழக்கங்களை விட்டு விலகி இறைப்பண்புகளை ஏற்றுக் கொண்டால் இன்பம் மட்டுமே உண்டு.

இழந்தது எவ்வளவு பெரியதானாலும்- எவ்வளவு நாள் கடந்ததானாலும் பிரார்த்தனை அதனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் சுத்தம் இருந்தால்- நல்ல பழக்கங்கள் இருந்தால் தீய சக்திகள் வரவே முடியாது.

எவரின் மனம் அவருக்கு அடங்குகிறதோ அவர் தெய்வத்தைவிட உயர்ந்தவர்.

நாள்தோறும் தண்ணீர், மின்சாரம், நேரம் விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். அருள் விரயமாவதன் ரகசியம் இதுவே. பேசும்போது 100 வார்த்தைகளில் 90 வார்த்தைகளைத் தவிர்க்கலாம். அளவோடும் கனிவாகவும் பேசினால் முன்னேற்றத் திற்கு வேண்டிய சக்தியைச் சேமித்து உயரலாம்.

குறைந்த பட்ச கடனாக இருந்தாலும் மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் வரவேண்டிய பணம் வராது. எதிர்பார்த்த வாய்ப்புகளும் தடைப்படும்.

தேவையற்ற பொருட்களை வீட்டிலோ அலுவலகத்திலோ முடக்கி வைக்கக் கூடாது. இது வாழ்வின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். கடும் நோய்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் இதுவே காரணம். அடுத்தவர் கண்ணோட்டத் தையும் சரி என ஏற்கும் மனப்பான்மை வரவேண்டும். மனம் உயர இதுவே சிறந்த வழி.

குறித்த நேரத்தில் செயல்படும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். முறையாகத் திட்டமிட்டு, எந்தச் செயலையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுச் செய்யும் பழக்கம் வெற்றியை மட்டும் கொடுக்கும்.

பொறுத்துக்கொள்ள முடியாத இடத்தில் எல்லாம் பூரண மௌனத்தைக் கடைப்பிடித்து வெற்றி காண வேண்டும். வேண்டிய வரம் உடனே பெற இது சிறந்த முறை.

உங்கள் குரலைத் தாழ்த்தி, எதிரில் உள்ளவருக்கு மட்டும் கேட்கும் அளவுக்குப் பேசுவது உயர்ந்த குணம். தற்செயலாகக் காதில் விழுவதும், கண் முன்னால் நடப்பதும் தற்செயலானவை அல்ல. அது நம் வாழ்வில் நடக்கப் போகும் அறிகுறிகளாகும். நாம் விழிப்பாக இருந்தால் அவை நற்பலன்களாக முடியும்.

தினமும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குத் தியானம் உதவியாக இருக்கும். வளர்ச்சி வேண்டு மெனில் பேசும் பேச்சுக்களின் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்த வேண்டும். நமது நடவடிக்கைகள் யாவும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

தவறு என்று தெரிந்ததும் அதைச் செய்ய மறுப்பவருக்கு வருமானத் தட்டுப்பாடு வராது. அதிர்ஷ்டம் வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமானால் அதிர்ஷ்டம் அரை நிமிடம்கூட காத்திருக்காது.

யார்மீது கோபம் வந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்டுவிடுவது கருமத்தைக் கரைக்க உதவும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top