ஏதோ புகைப்பட கண்காட்சியை பார்ப்பது போல இந்த தளம் அழகான புகைப்படங்களாக காட்சி அளிக்கிறது. எல்லாமே செல் போனில் வால் பேப்பராக டவுண் லோடு செய்வதற்கானவை. வரிசையாக படங்களை பார்த்து விட்டு தேவையான படத்தை கிளிக் செய்து ஸ்மார்ட் போன் திரைக்கு மாற்றிக்கொள்ளலாம்.
ஆப்பிலா, ஆன்ட்ராய்டா, வின்டோசா இவற்றில் எந்த மாதிரி என நம்மிடல் உள்ள போனுக்கு ஏற்ற வடிவில் தேர்வு செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். 640-Smiley-Face-lஅவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய் வசதியாக படங்களை இயற்கை காட்சிகள், இசை, சினிமா, விலங்குகள் என பலவிதமான தலைப்புகளின் கீழ் பார்க்கும் வசதியும் இருக்கிறது.
எல்லா படங்களுமே ரசிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. இந்த ரசனையை கருத்தாக தெரிவிக்கலாம். அப்படியே டிவிட்டர் ,பேஸ்புக் வழியே பகிர்ந்து கொள்ளலாம்.
இணையயதள முகவரி: http://www.mobileswall.com/
0 comments: