.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 30 October 2013

உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.

அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர் வாழ்கின்றனரா என்று சற்று யோசித்தால், ஆச்சரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.

இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்...

சிறுநீர் அடிமை

கேர்ரி என்பவருக்கு சிறுநீரின் சுவை மிகவும் பிடித்துவிட்டது. எனவே அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது சொந்த சிறுநீரில் சுமார் 900 கேலன்களை குடித்துள்ளார்.

கார் அடிமை

அனைவருக்குமே கார் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கார் பிடிக்கும். அந்த வகையில் நதானியேல் என்பவர், தனது சிவப்பு நிற 1998 மான்டே கார்லோ என்ற காருக்கு சேஸ் என்று பெயரிட்டு, தனது வாழ்க்கையின் அன்பு கிடைத்துவிட்டது என்று அதனுடன் வாழ்கிறார். மேலும் அவர் அந்த கார் வாங்கிய தினத்தை அதற்கான பிறந்தநாளாக கருதி, அதற்கு பரிசுகளை வாங்கி மகிழ்வார்.
 
பூனை அடிமை

43 வயது பெண்மணியான லிசா என்பவர், தனது செல்லப்பிராணியான பூனையின் மயிர் சுவைக்கு அடிமையாக உள்ளார். மேலும் இவர் தனது சொந்த பூனையின் மயிரை மட்டுமின்றி, எந்த ஒரு பூனையின் மயிரையும் சாப்பிடுவார்.

இரத்த அடிமை

உண்மையிலேயே இரத்தக்காட்டேரியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், இரத்தத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் உண்டு. அதிலும் 29 வயதான மிச்செல் என்னும் பெண், மனித இரத்தம் மற்றும் பன்றியின் இரத்தத்தை கடந்த 15 ஆண்டுகளாக குடித்து வருகிறார்.

அழுக்கு அடிமை


இதுவும் வித்தியாசமான ஒரு அடிமைத்தனம் தான். அதிலும் ஹெய்டி சேரிகளில் வாழும் மக்கள், தினமும் அழுக்குகளை தண்ணீரில் கலந்து குடித்து வருகிறார்.

இறுதிச்சடங்கு அடிமை

என் புரியவில்லையா? சிலருக்கு மரண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பழக்கம் இருக்கும். அதில் 42 வயதான லூயிஸ் ஸ்குவாரிஸி என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக, அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் அனைத்து இறுதிச்சடங்கிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாதிரியான விருப்பம் உள்ளவர்களும் இவ்வுலகில் உண்டு

ஐஸ் அடிமை

ஐஸ் கட்டிகளை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதிலும் ஐஸ் கட்டிகளை இடைவெளியே இல்லாமல் சிலர் மென்று சாப்பிடுவார்கள். இவ்வாறு இதற்கு அடிமையாவதற்கு காரணம், உடலில் இரும்புச்சத்து அளவுக்கு குறைவாக இருப்பது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காஸ்மெட்டிக் சர்ஜரி அடிமை

உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். அதே சமயம், சில மில்லியன் மக்கள் அந்த காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக, இதில் ஒரு பிரபலமான அடிமை என்று சொன்னால் ஜாய்ஸ்லின் வில்டென்ஸ்டீன் என்பவர், காஸ்மெட்டிக் சர்ஜரிக்காக ஒரு வருடத்திற்கு 4,000,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.

டாய்லெட் பேப்பர் அடிமை

சிலருக்கு டாய்லெட் பேப்பரின் வாசனை மற்றும் சுவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதிலும் இத்தகைய பழக்கமானது சிறு வயதில் இருந்து தான் ஆரம்பமாகும்.

டேனிங் அடிமை

பெரும்பாலான மக்கள் கடற்கரை ஓரங்களில் செய்யப்படும் டேனிங்கிற்கு அடிமையாக இருப்பார்கள். இந்த அடிமைக்கு டேனோரேக்ஸியா என்று பெயர்.

உடலில் துளையிடுதல்...


தற்போதுள்ள மக்கள் ஃபேஷன் என்ற பெயரில், உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய விதவிதமான டாட்டூக்கள் மற்றும் தொப்புள் வளையம், நாக்குகளில் வளையம் போன்றவற்றிற்கு அடிமையாக உள்ளனர்.

சமூக வலைதளங்கள்

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது மத்தியிலும் இருக்கும் ஒருவிதமான அடிமைத்தனம் தான் சமூக வலைதளங்களில் உலாவுதல். அதிலும் ஃபேஸ் புக், டுவிட்டர் போன்றவற்றில் இருப்பது மிகவும் பிரபலமானது.

முடியை பிடுங்குதல்...

உலகில் 11 மில்லியன் மக்கள், முடியின் நுனியில் உள்ள வெடிப்புக்களைப் பிடுங்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

டிடர்ஜெண்ட் அடிமை

எப்போதாவது டிடர்ஜெண்ட்டை சுவைத்துள்ளீர்களா? பொதுவாக டிடர்ஜெண்ட்டுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால், 19 வயதான டெம்பஸ்ட் என்பவர், டிடர்ஜெண்ட்டின் சுவைக்கு அடிமையாகியுள்ளார்.

கண்ணாடி டம்ளர்கள்

ஜோஷ் என்பவருக்கும் கண்ணாடி டம்ளர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உடனே ஒயின் குடிப்பதற்கு என்று நினைக்காதீர்கள். கண்ணாடி டம்ளர்களை சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 100 மேற்பட்ட கண்ணாடி டம்ளர்களையும், 250 பல்ப்புக்களையும் சாப்பிட்டிருப்பதாக சொல்கிறார்.

மலமிளக்கும் மாத்திரை (Laxative)

இந்த மாத்திரையானது 15 வயதான கிம்பர்லி என்னும் பெண்ணுக்கு சாக்லெட் போன்றது. அதிலும் ஒருநாளைக்கு 100 மாத்திரைகளை சாப்பிடுவார். இதனால் அவர் இரத்தப்போக்குடன் கூடிய அல்சர் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கற்கள்
44 வயதான தெரேசா என்னும் பெண், கற்களின் சுவையானது பிடித்துவிட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனால் அவரது பற்கள் உடைந்து போய், கடுமையான வயிற்று வலிக்கு ஆளானாலும், கற்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷை நகங்களுக்கு போடும் அடிமைத்தனம் இருக்கிறது என்று சொன்னால், நம்பலாம். ஆனால் 32 வயதான ஜேமிக்கு, நெயில் பாலிஷின் வாசனை மற்றும் சுவை பிடித்து விட்டது. இதனால் ஒரு நாளைக்கு 6 பாட்டில் நெயில் பாலிஷை குடித்து வருகிறார்.

2 comments:

Unknown said...

குட்லக் அஞ்சனா என்பவர் தன் வலைப்பூ-வுக்கு அடிமையாகி விட்டார். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு போஸ்ட் செய்து விடுகிறார்.

manimekalai said...

pencil , rice

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top