.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

மொபைலின் சில அடிப்படை விஷயங்கள்..

10-mo 
 
இன்று நாம் அனைவரும் என்னதான் மொபைல் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் பல அடிப்படை பற்றி நிச்சயம் நமக்கு தெரிவதில்லை எனலாம் இதோ இங்கே கொஞ்சம் மொபைலில் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன இதோ இவற்றை பாருங்கள். இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.


 இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும்.


மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும். திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.


 போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top