.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 15 September 2013

அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது!



இந்தியா தயாரித்த அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவு பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சீனாவை மிரட்டும் அளவிற்கு பலம் படைத்ததாகும். 


இது போன்ற அக்னி 5 சோதனை கடந்த 2 ஆண்டுகளில் இன்று 2வது முறையாகும். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற 5 நாடுகளில் மட்டுமே இது போன்ற அணு ஆயுதம் சுமந்து தாக்கு ஏவுகணையை கொண்டுள்ள நாட்டில், இந்தியாவும் 6 வது நாடாக இடம் பிடிக்கிறது. 




இதுவரை குறைந்த தூரம் மட்டுமே செல்லக்கூடிய அக்னி தற்போது 5 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது அக்னி-5. இந்தியாவும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் தன்வசம் வைத்திருக்கிறது என்பது பாதுகாப்பு துறையில் ஒரு கூடுதல் மைல்கல் . இது 50 டன் எடை கொண்டது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வெடிபொருட்களை தூக்கி செல்லும் திறன் படைத்தது, 17 மீட்டர் உயரம் கொண்டது. இன்றைய அக்னி-5 சோதனை உலக அளவில் இந்தியாவை நிமிரச்செய்துள்ளது என்பது மிகை அல்ல. 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top