.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 6 September 2013

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2′…!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இஸ்லாமியர்களை அந்த படத்தில் தவறாக சித்தரித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்தே படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு விஸ்வரூபம் படம் வெளியானது.அந்த படம் வெளியான சில நாட்களிலேயே ‘விஸ்வரூபம் -2′ படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல் பரவியது. காரணம், விஸ்வரூபம் படத்திற்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட எதிர்ப்பும்… பின்னர் படம் வெளியானதும் கிடைத்த வரவேற்பும் விஸ்வரூபம்&2 படம் உருவாக காரணமாக அமைந்தது என்கிறார்கள்.

sep 6 = viswaroop 1

 

இந்த சூழலில், ‘விஸ்வரூபம் -2′ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்திருந்த பூஜாகுமார் முதல் படம்போல இதில் எந்த சர்ச்சையான காட்சிகளையும் குறிப்பிடமுடியாது. மிகவும் யதார்த்தமாக படம் வந்திருக்கிறது என பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசனும் தன் பங்குக்கு ‘விஸ்வரூபம்&2′ படம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும்விதமாக அமையும் என கூறியிருந்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு திடீரென இஸ்லாமியர் அமைப்பு ஒன்றின் அறிக்கை மூலம் மீண்டும் கமல் படம் சர்ச்சையில் சிக்குமா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்”கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2′ திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கை வெளியானதால் கமல் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இதையடுத்து ஜவஹர் அலியின் அறிக்கைக் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,”விஸ்வரூபம்&2 படம் அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையாக இருக்கிறது. அதில் எந்த இடத்திலும் இஸ்லாமியர்களின் மனது புண்படும்விதமான காட்சிகளோ, வசனங்களோ இல்லை. அதிலும் முந்தைய படத்தில் ஏற்பட்ட காயங்களை திரையுலக்மே இன்னும் மறக்காத நிலையில் மீண்டும் சர்ச்சை காட்சி அல்ல்து வசனங்களை யாராவத்கு வைப்பார்களா?இவ்வளவிற்கும் இந்த பார்ட் 2 படத்தில் அனைத்து மத மக்களும் சகோதரர்களே என குறிப்பிடும் விதமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. படத்தை பார்த்தால் அவர்களுக்கே புரியம். மற்றபடி சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை.. இல்லை.. இலலவே இல்லை” என்கிறார்.

சும்மா இருந்தாலே சினிமாவில் கிசுகிசுவும், பரபரப்பும், வதந்தியும் பரவுவதை தடுக்க முடியாது… போததற்கு இதுபோன்ற செய்திகள் வெளியானால் படம் குறித்த விஷயங்களும்… செய்திகளும் றெக்கை கட்டி பறப்பதை யாரும் தடுக்க முடியாது…


0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top