.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 15 May 2013

குருவும் சீடரும்! குட்டிக்கதைகள்-6


குருவும் சீடரும்!  குட்டிக்கதைகள்-6





     தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.


    எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். 


    ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார்.

       மிகக்கடுமையாய் ஏசினார் குரு.


   சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு
     அந்த இளைஞர் வருந்தவில்லை.


சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, 


அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.


”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம்.

 
     வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு.

 
அந்த குரு, துரோணர்.


அந்த சீடர் தருமர்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top