.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 4 January 2014

100வது நாளில் ‘ராஜா ராணி’...!



100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது அட்லியின் ராஜா ராணி.

அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடிப்பில் வெளியான படம் ராஜா ராணி.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட விளம்பர யுக்திகளோடும், கதை சொல்லுதலோடும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இன்றுடன் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ராஜா ராணி’.

இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விடயமே.‘ராஜா ராணி’ அந்த சாதனையை புரிந்துள்ளது.

வீரம் படம் முரட்டுக்காளை ரீமேக்..?



‘வீரம்’ படம் முரட்டுக்காளை ரீமேக் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துள்ளன.

அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம்.

விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியது.


இந்நிலையில் நேற்று நடந்த வீரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இயக்குனர் சிவாவிடம் கேட்டபோது, இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் முரட்டுக்காளையின் ரீமேக் அல்ல.

அண்ணன், தம்பிகளின் கதை என்பதால் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது,மலையாளப் படமான வெள்ளியேட்டன் படத்தின் தழுவல் என்று கூறப்படுவதும் தவறான தகவல் என்றும் வீரம் படம் நேரடி தமிழ் படம் எனவும் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரை பாராட்டிய விஜய்...!




விக்ரமைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ படத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டாராம் விஜய்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.


கன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.


படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.


இந்நிலையில் ஜில்லா யூனிட்டோடு இணைந்து இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்துள்ளார் விஜய்.


இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும், மோகன்லாலின் நடிப்பிலும் அப்படியே சொக்கி போன விஜய், மோகன்லாலை வெகுவாக பாராட்டியுள்ளாராம்.


மேலும் மோகன்லாலின் ரசிகர்களுடன் இணைந்து இந்தப்படத்தினை பார்க்க முடியவில்லையே என்று வருத்தம் தெரிவித்துள்ளாராம்.

டீஸரில் சாதனை படைத்த 'ஜில்லா'...!



 

 ரசிகர்களை அள்ளிக்குவித்து சாதனை படைத்துள்ளது ஜில்லா டீஸர்.


நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜில்லா.


இப்படம் வருகிற 10ம் திகதி உலகம் முழுவதும் ரிலீசாகவிருக்கிறது.


படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கிகொண்டிருக்கின்றன.


அந்த வகையில் ரசிகர்களிடத்தில் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸரை க்ளிக் பண்ணியவர்களின் எண்ணிக்கையே சாட்சி என்று சொல்லலாம்.


டீஸர் வெளியான இரண்டு நாட்களில் மட்டும் 10,71,657 பேர் பார்த்திருக்கிறார்கள்.



Friday 3 January 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

 

 மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top