.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 17 September 2013

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை !



அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை




மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார். 



பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. 


Monday 16 September 2013

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!


மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் படத்தில் ‘கிளிமஞ்சாரோ’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.இதற்கிடையில் நடிகர் ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும் நடிக்கிறார். மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.



sep 16 - sinmayee

 



அதிலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் தகவலை பரப்பியுள்ள சின்மயியின் தாய் பத்மாசினி இதைஉறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோதுபோது, நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும், எனது மகள் சின்மயிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. விரைவில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் “என்று கூறியுள்ளார். 


Actor Rahul Ravindran to wed singer Chinmayi next year

****************************************


Southern actor Rahul Ravindran will marry singer-dubbing artist Chinmayi Sripada early next year. The parents of the couple have mutually agreed to the wedding. “Everybody is talking like we are going to get married tomorrow, but the wedding is likely to take place only early next year. Chinmayi and I have been seeing each other for a few months now and our parents have met and agreed for the wedding,” Rahul told IANS.

நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.

தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.

ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு
அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..

ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.

சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

பின் நாரை ..ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது....

உடன் ஓநாய்'உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு ...அதை பத்திரமாக வெளியே எடுக்க
அனுமதித்தேனே,,அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்' என்று கூறிவிட்டது.

நாரை ஏமந்தது...

கொடியவர்களுக்கு உதவி செய்தால் ..பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும்.

ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.
 

சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!








அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?

பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.

சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.

சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.

சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.


ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!



செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.


ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன்.


ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.


இந்தச் சிறப்புக் காலணிகளை அணிந்துகொண்டு ஒருவர் இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும்.


உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இது போன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top