.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 31 August 2013

Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம் !

இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி ஊடக இலவசமாக  வழங்கிவந்த Viber நிறுவனம், தற்போது தனது தயாரிப்பை Desktop கணனிகளிலும் பயன்படுத்தக்கூடியதான வடிவமைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் கையடக்கத்தொலைபேசியில் இருந்து  Desktop கணனிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடியதாகவும் ஒரே கணக்கினை டெக்ஸ்டாப், மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு சாதனத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியினை மற்றைய சாதனத்தில் படிக்கக்கூடியதாகவும், ஒரு சாதனத்தில் குறுஞ்செய்தி அழிக்கப்படும்போது மற்றைய சாதனத்திலிருந்தும் அழிந்துபோகக்கூடிய வகையிலும் இப்புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகம்!

உலகின் அனைத்து பாகங்களையும் ஒரே இடத்திலிருந்து பார்த்து அறிந்துகொள்ளும் Google நிறுவனத்தின் "Google Earth" சேவையில் முப்பரிமாண (3D) வடிவங்களைக் கட்டுப்படுத்தும் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
"Google Earth" சேவையை பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் Google Earth Pro 7.1 பதிப்பு மென்பொருளின் ஊடாக இவ்வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என Leap Motion நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
முப்பரிமாண வரைபடத்தினை துல்லியமாக காட்டும் வசதியும், அது தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் வசதியும் Google Earth Pro 7.1 பதிப்பில் காணப்படுவதுடன் குறித்த முப்பரிமாண வரைபடங்களை பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இதனை தற்போது 199 டாலர்கள் எனும் சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும்

சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!

சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 கோடி ரூபாய் செலவிலும் இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

31 - airport_

 

அடுத்த சில நாட்களில் சென்னை, லக்னோ விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிப்பதற்கு தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் என விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சில வாரங்களில், ஜோத்பூர், குவாஹட்டி, ஆமதாபாத், கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை நிர்வகித்து பராமரித்து மேம்படுத்துவதற்கு விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

தேர்வு செய்யப்படும் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கப்பட்டால் அவற்றுக்கு 30 ஆண்டு காலம் விமான நிலையத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் வருவாயில் பங்களிப்பு என்ற முறையில் குறிப்பிட்ட தொகையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பெறும் எனவும் ஆனால் அந்நிறுவனங்களில் ஆணையத்தின் பங்கு முதலீடு இருக்காது என்வும் தெரிய வருகிறது. 

தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அதே சமயம் டில்லி மற்றும் மும்பையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொண்டுள்ள தலா 26 சதவீத பங்கு முதலீடு நீடிக்கும்.

இதே போன்று ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொண்டுள்ள தலா, 13 சதவீத பங்கு முதலீட்டிலும் மாற்றம் இருக்காது என அந்த அதிகாரி மேலும் கூறினார்.


Govt open to offering 100 % stake to private parties at six airports

************************************************************* 

The Ministry of Civil Aviation will soon float request for qualification (RFQ) document for six airports, including the recently refurbished Chennai and Kolkata airports, and is open to offering 100 per cent stake to private players.

Highly placed sources in the Aviation Ministry said the RFQ for Kolkata and Chennai airports along with four others — Guwahati, Jodhpur, Ahmedabad and Kolkata — would also be issued in the next few weeks.

நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.

31 - Nelson Mandela-

 


ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.கடுமையான நுரையீரல் நோய் தொற்றின் காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ஆம் தேதி பிரட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருந்துவந்த அவருக்கு உயிர் காப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தனது 95வது பிறந்த நாளையும் ஆஸ்பத்திரியிலேயே கொண்டாடிய நெல்சன் மண்டேலா சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் இன்று வீடு திரும்பினார்.அவர் டிஸ்சார்ஜ் ஆகும் செய்தி கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nelson Mandela returns home from hospital

*******************************************


 Former South African President Nelson Mandela has returned to his home in Johannesburg after a long stay in hospital in Pretoria.The 95-year-old was admitted with a recurring lung infection on 8 June.Last week he was said to be critical but stable and “showing great resilience”, and there has been no official update on him since then.

The country’s first black president, Mr Mandela is revered by many as the father of the nation.
His prolonged hospital stay has caused concern both in South Africa and abroad.The infection is said to date back to a period of nearly three decades he spent in prison for anti-apartheid activity.The BBC’s Mike Wooldridge in Johannesburg says it will be a relief for his family and for the nation that Mr Mandela has improved sufficiently for the journey to be made and for him to be cared for at home.

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!

உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது.

கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாகமுடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப்பட்ட கதைகளில்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் தற்காலத்திலே அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு தன் ஆற்றலால் ராணியானவர்தான் டயானா.

31 - diana_tout
 

வேல்ஸ் இளவரசி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், (ஜூலை 1, 1961 – ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி இவர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. உலகப்பிரசித்தம் பெற்றது. காதல் கனிந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டனர். இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள்.
இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய அரசில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்குப் பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி “இவரது மரணம் டயானாவின் கார் ஓட்டுநர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராசிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது” எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.
15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கை யால் மீடியாக்களில் படாதபாடுபட்டார் டயானா.

விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலை செய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவணமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்ட வாறு எழுதியும் வைத்தார்.

”இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்…”
இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார்.

எயிட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றிருந்தார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்தப் படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நள்ளிரவு. உலகிலேயே அதிக விலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒன்றாகக் கூறப்பட்ட அந்தக் கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர் மற்றும் ஓட்டுநர் என்று நால்வரைச் சுமந்து சென்றது.

டயானாவின் நடத்தைகளைப் புகைப்படமெடுத்து பரபரப்பு செய்தி களை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிகைப் புகைப்படக் குழுவினர் டயானாவின் காரை அசுர வேகத்தில் பின்தொடர்ந்தனர்.

பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில வினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்க்காப்பாளர் மட்டும் உயிர் தப்பினார்.

டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்தப் புகைப்படக் குழுவி னரை நோக்கிப் பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல் துறையினருடன், உளவுத் துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில் ஓட்டுநர் அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும் அதனா லேயே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளான தாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிகைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின “அவள் அரச குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாலேயே பலி வாங்கப்பட்டார்.”
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6ம் நாள் நடை பெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னாள் கணவர் சார்லஸ், அவரது அரச குடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் தொடங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று (இன்று அந்த நாள்) தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் அழகாலும் சேவை மனப்பான்மையாலும் உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு அரண்மனை, கணவன் என்று முடங்காமல் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர்களுக்கும் மேலாகப் புகழ் பெற்றுவந்தார் டயானா.
இது மன்னர் குடும்பத்துக்கு சங்கடத்தைத் தந்தது நாடறியும். அதனால் குறைந்த காலத்திலேயே அவரது வாழ்வும் தொண்டும் முடக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய ஒரு இளவரசியின் வரலாறை இந்தப் பூமி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்காது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top