
சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பெரியதாக இருந்தது. சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய நட்சத்திரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துளள்ளனர்.சூரியனை...