.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 31 December 2013

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்!!!




பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆன்லைன் மூலமாக பொருள்களை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இது மிக சௌகர்யமாக உள்ளதாகக் கருதுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

 மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெற்ற மொத்த வர்த்தகம் 850 கோடி டாலராகும்.

 இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கியக் காரணமாகும். ஆன்லைன் ஷாப்பிங் குறித்த ஆய்வறிக்கையை அசோசேம் வெளியிட்டது.

இதில் 2009-ம் ஆண்டு 250 கோடி டாலராக இருந்த ஆன்லைன் வர்த்தகம் 2011-ம் ஆண்டில் 630 கோடி டாலராக அதிகரித்தது. இது 2013-ம் ஆண்டில் 1,600 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகம் 5,600 கோடி டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகம் 6.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்னணு பொருள்கள் தவிர, ஆடைகள், அணிகலன்கள், வீட்டுக்கு குறிப்பாக சமையலறை சாமான்கள், பிற உபகரணங்கள், கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், அழகு சாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புக்கு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஆமதாபாத், கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் உள்ள 3,500 வர்த்தகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் ரஜினி; தைரியமளித்தவர் சூர்யா: அமீர்கான்




தமிழ் நடிகர்களில் எனக்குப் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அவரது மனித நேயமும் எளிமையும் என்னை மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்றிய நாட்களை நினைத்தால் பெருமையாக உள்ளது, என்று பிரபல பொலிவூட் நடிகர் அமீர்கான் கூறினார்.

கஜினி ரீமேக்கில் நடிக்கத் தயங்கிய என்னை, அந்த திரைப்படத்தில் தைரியமாக நடியுங்கள், பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னதே நடிகர் சூர்யாதான் என்றும் ஆமீர்கான் கூறினார்.

அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தூம் 3. நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது. ஹொலிவூட் திரைப்படங்களுக்கு நிகரான அக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார்.

தூம் 3 திரைப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. ஆமீர்கான் படம் தமிழில் டப் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதையொட்டி ஆமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், இயக்குநர் விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் நேற்று இரவு சென்னை கிராண்ட் சோழாவில் நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஆமீர்கானிடம், தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பதிலளித்தார் ஆமீர்கான். தொடர்ந்து அவர் பேசுகையில், 'நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். அவர் நடித்த உத்தர் தக்ஷன், கிராப்தார் ஆகிய படங்களை பார்த்ததில் இருந்து அவருடைய ரசிகனாகி விட்டேன்.

தமிழில் எனக்குப்பிடித்த நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலாக அவருடன் ஆதங்கி ஆதங் என்ற படத்தில் நான் சேர்ந்து நடித்தேன். அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் எனக்கு அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு பதற்றமாக இருந்தது. அவர் என்னை தைரியப்படுத்தி நடிக்க வைத்தார். அவருடைய எளிமையும், மனித நேயமும் என்னைக் கவர்ந்தவை. எனக்கு அவர் மீது மரியாதை அதிகரித்தது.

எனக்குத் தெரிந்து நேரம் தவறாமையிலும், தொழில் பக்தியிலும் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. ஆச்சர்யமான மனிதர். ஒரு கலைஞனால், மனிதால் எப்போதும் இத்தனை இனிய சுபாவத்தோடு இருக்க முடியுமா என்று ஆச்சர்யமாக உள்ளது. அவருடன் பணியாற்றிய நாட்களை இப்போது நினைத்தாலும் நம்ப முடியவில்லை, பெருமையாக உள்ளது' என்றார்.

தமிழ் படங்களை 'ரீமேக்' செய்வதாக இருந்தால் எந்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆமீர்கான், 'இந்தப் படம்தான் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்த நேரத்தில் எது மனதைக் கவர்கிறதோ அந்தப் படத்தை தேர்வு செய்யக் கூடும்.

உண்மையில் கஜினி ரீமேக்கில் நடிக்கும் முன் எனக்கு நிறைய தயங்கங்கள். இந்த மாதிரி கதைக்கு நான் பொருந்துவேனா, சூர்யா அளவு நடிக்க முடியுமா? என்ற சந்தேகங்கள் இருந்தன. வில்லன்களை துரத்தி அடித்து பழி வாங்குவது போல் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை. அதனால் சூர்யாவுடன் மொபைலில் பேசினேன். என்னால் உங்கள் அளவுக்கு நடிக்க முடியுமா? என்று அவரிடம் கேட்டேன்.

நிச்சயமாக உங்களால் நடிக்க முடியும் என்று அவர் தைரியம் சொன்னார். சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் அந்த படத்தில் நான் நடித்தேன். இதுபோல படங்கள் அமைந்தால் அவற்றில் நடிப்பது பற்றி யோசிப்பேன்,' என்றார்.

கே.பாலசந்தரின் உன்னால் முடியுமா தம்பி என்ற படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானதே? என்ற கேள்விக்கு, 'இல்லை.. அப்படி எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. 'தாரேஜமீன்பர்' படத்தை நான் இயக்கியதற்காக சென்னையில் எனக்கு ஒரு விருது வழங்கினார்கள். அந்த விருதை இயக்குநர் கே.பாலசந்தர் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது என் நடிப்பை மிகவும் புகழ்ந்து பாராட்டினார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.

சமீபத்தில் சர்வதேச படவிழாவிற்காக நான் சென்னை வந்த போது கே.பாலசந்தரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தூம்௩ படத்தை பற்றி கேட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்திதான்' என்றார்.

நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, 'எனக்கு தமிழ் தெரியாததால் தயக்கமாக இருக்கிறது. தமிழ்ப் படத்தில், தமிழே தெரியாத ஒரு கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்,' என்றார்.

தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு ...?




தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.

இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து நீடிக்கிறது என்றென்றும் புன்னகை



ஜீவா, திரிசா, வினய் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான என்றென்றும் புன்னகை இரண்டாவது வாரமான இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மற்றும் டாக்டர் ராமதாஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இப்படத்தை ஐ.அகமது இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நட்பினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும்பாலான திரைவிமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்
பெற்றிருந்தது. உணர்ச்சிப் பூர்வமான படமாகவும், தங்களது இளமைக்கால நட்பினை ஞாபகப் படுத்தும் விதமாகவும் இருப்பதாக ரசிகர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த வரவேற்பால் இப்படம் இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் நீடித்துவருவதுடன், அதிகத் திரையரங்குகளிலும்
நீடிக்கிறது. இப்படத்துடன் வெளியான வெங்கட் பிரபுவின் பிரியாணி திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

கோ படத்திற்குப் பிறகு பெரும்பாலும் தோல்விகளையே கண்டுகொண்டிருந்த நடிகர் ஜீவாவிற்கு இப்படம் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மனித உடலைப் பற்றி அறிவோம்!



மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்:-

  1. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. 
  2.  மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
  3. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
  4. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.
  5. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.
  6. மனித மூளையின் எடை 1.4 கிலோ.
  7. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்.
  8. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.
  9. உடலின் மெல்லிய சருமம் கண் இமை.
  10. மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.
  11. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
  12. மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
  13. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
  14. மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.
  15. ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர்.
  16. மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
  17. நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
  18. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
  19. நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
  20. நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
  21. நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
  22. நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
  23. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
  24. நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது. 
  25. உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.
  26. நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
  27. புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
  28. மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். 
  29. மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
  30. ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
  31. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
  32. நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
  33. 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.
  34. க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
  35. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top