
கர்நாடகத்தின் பெங்களூரில் இருந்து ஆந்திரத்தின் நாந்தேத் நகருக்குச் சென்ற விரைவு ரயிலில் நேரிட்டதீ விபத்து 26 பேரைப் பலிவாங்கியிருக்கிறது. அதிகாலை3.30 மணி அளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிவது தெரியாமல் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தற்செயலாகக் கண்விழித்த ஒரு பெண் பயணி அலறியதை அடுத்து, பயணிகள் விழித்துள்ளனர். அந்தப் பெட்டியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கிறார். அதற்குள் மளமளவென்று தீ பரவியிருக்கிறது. தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்கு எல்லாம் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதால், ஏராளமானோர் தப்பியிருக்கின்றனர். இத்தகைய விபத்துகள்...