.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 25 December 2013

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!




1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.

5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்”அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி"பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

6. பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

7. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.

8. ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

9. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

10. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

11.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

12. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

13. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?

24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

14. தலசீமியா என்பது தொற்றுநோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.

15. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

16. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.

17.ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

18. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும்..

19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

20. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.

21. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

22. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.

23. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில்,கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.

24. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.

25. யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய் உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப் பழக்கம் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

26. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.

27. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு,24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

28. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

மார்கரட் விட்மேன் - இவரைத் தெரியுமா?




$ ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ இதற்கு முன்பு ஆன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.

$ இவர் பணியில் சேரும்போது 4 மில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருமானம், 2008-ம் ஆண்டில் வெளியேறும் போது 8 பில்லியன் டாலராக உயர்ந்தது.

$ இ-பே தவிர, புராக்டர் அண்ட் கேம்பிள், பெய்ன் அண்ட் கம்பெனி, வால்ட் டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

$ இவருக்கு அரசியல் ஆசையும் இருக்கிறது. 2009-ம் ஆண்டில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.

$ ஹார்வேர்ட் பிஸினஸ் ரெவ்யூ, ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளின் சிறந்த சி.இ.ஓ. பட்டியலில் இடம் பெற்றவர்.

$ பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டமும், ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகப் பட்டமும் பெற்றவர்.

'வீரம்' படத்துக்கு 'யூ' சான்றிதழ் : சந்தோஷத்தில் படக்குழு




'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'வீரம்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வீரம்'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, சிவா இயக்கியிருக்கிறார். விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்ததால், படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிந்ததால், படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள்.

படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், எந்த ஒரு இடத்தையும் கட் செய்ய சொல்லாமல் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 'யூ' சான்றிதழ் கிடைத்ததால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு. அஜித்தும் இயக்குநர் சிவாவிற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.

முதலில் படத்தின் சென்சார் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. வரிவிலக்கிற்கு திரையிட்டு காட்டுவது மட்டும் தான் பாக்கி. அதையும் விரைவில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இன்னும் வெளியீட்டிற்கு 16 நாட்கள் இருப்பதால், படத்தின் டிரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு படத்தினை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

சென்சார் சான்றிதழ்படி படம் 2:41:15 மணி நேரம் ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்!




பென் ஸ்டில்லர் என்னும் ஹாலிவுட் நடிகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சீரியல் நடிகராய் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். 100க்கு மேல் நடித்து இப்போது இயக்கததிலும் வெற்றி பெற்றிருக்கும் “தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி” என்னும் திரைப்படம். ஃபோட்டோ கலைஞ்ர்கள் / இயற்கை விரும்பிகள் / எஃப் எக்ஸ் கலைஞர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய திரைப்படம்.

உலகத்தில் உள்ள அனைத்து முக்கிய அழகிய பிரமிப்பான விஷயங்களை அழகாக படம் பிடித்திருக்கின்றனர். போன வருடம் ஒரு பிர மீட்டில் 30 நிமிடம் காண்பித்த இந்த முநனோட்டமும் ஃப்லிம் மேக்கிங்கும் என்னை எப்ப இந்த படம் ரிலீஸ் ஆகும்னு காத்திருக்க வைத்திருந்தது. நேற்று சிறப்பு காட்சியில் என் ஒரு வருட வெயிட்டீங் வீணாய் போகவில்லை.

இந்த படத்துக்காக சுமார் 6 வருடங்கள் உழைத்திருக்கிறார். படத்தின் ஹீரோ – நம்ம ஊர் மாதிரி ஒரு பஞச் இல்லை / ஹீரோத்தனம் இல்லை / பில்டப்பு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கண்டிப்பாய் 35 வயதுக்கு மேல் உள்ள‌ ஆண்களுக்கும் / 30 வயது மேல் உள்ள‌ பெண்களுக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும். குடும்பத்தோடு தைரியமாய் பார்க்கலாம்.

படத்தின் கரு இரண்டு விஷயம். 48 வயது பிரமச்சாரி – வெந்ததை தின்னும் வெறும் வாழ்க்கை எப்படி மாறி போகிறது. ஒரு நாய் குரைப்புக்கே பயப்படும் இவன் எப்படி உலகின் மிக பயங்கரமான இடங்களுக்கு செல்கிறான். 40 வயதுக்கு மேல் வரும் ஒரு கண்ணியமான காதல். படத்தில் அத்தனை பேரும் வாழ்ந்துள்ளனர். சூப்பர் இயல்பான நடிப்பு.

ஒவ்வொரு காட்சியும் ஆயிரம் டாலர்களுக்கு சமம். தயவு செய்து டைட்டில் மிஸ் செய்யாதீர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும். நல்ல குவாலிட்தியான தியேட்டரில் படம் பார்க்கவும்.கண்டிப்பாய் மிஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்…!

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’




தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து

 இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.மேலும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார்.

இது குறித்து தனுஷ் தனது டுவீட்டர் இணைய தளத்தில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏன் 12 வரை காத்திருக்க இங்கே நீங்க போகலாம். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மேரி கிறிஸ்துமஸ் என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இன்னும் 2 பாடல்கள் சேர்க்க வேண்டி உள்ளது. ஆடியோ வெளியீடு பிப்ரவரி 14-ல் ஜ்னவரி 1 -ல் டீசர் வெளியிடப்படுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top