உயர்ந்த பெண்ணின் உன்னதமான கடமைகள்பெண்கள் சிருஷ்டியில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே சக்தியின் வடிவங்கள். உலக இயக்கம் பெண்களாலேயே நடைபெற்று நிலை பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம் பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளாய் இன்னும் பல வகைகளில் உறவு உடையவளாகி நலம் செய்கிறாள்.சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாகச் செய்கிறாள். குடும்பம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குடும்பத் தலைவியின் கையில்தான் இருக்கிறது. கணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை அமைத்துக் கொள்ளும் பெண் வாழ்க்கையில் வெற்றி அடைகிறாள். கணவனை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோ அல்லது வேதனையில் ஆழ்த்துவதோ மனைவியின் கையில்தான் இருக்கிறது. நல்ல மனைவி எண்ணத்தால் கூட கணவனை விட்டு விலகி இருக்கக் கூடாது. மனித வாழ்வின் மகத்துவம்...
Tuesday, 10 December 2013
போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?

நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட...
உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்தி கூடும். மேலும் வாஸ்து மற்றும் ஃபெங்...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…
* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை...
இயேசுவின் மொழிகள்!
மனிதனை மாசுபடுத்துபவைமனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.இம்மையில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த...