கணவனுடைய சுபாவங்கள், அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து மனைவிக்கு திட்டமான கருத்து இருக்க வேண்டும். உணவு வகைகளில் மட்டுமல்ல எந்த விஷயத்திலுமே கணவனுக்கு எது பிடிக்கும். அவனுடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான். என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது போதாது. அவனுக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷயங்களை வெறுக்கிறான், எதைச் செய்யும் போது அவனுடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயந்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.கணவன் தவறு செய்தால்...சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும். சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளையோ, கணவனோ தவறு செய்து விட்டால் அதை ஜீரணித்து அவர்களை திருத்த வேண்டும். அடுத்தவர்கள் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அலட்சியப்படுத்துங்கள். கத்தரிக்காயை ஜீரணியுங்கள் அதன் காம்பை அலட்சியப்படுத்துங்கள்.குற்றங்குறைகள் இருந்தால்...உண்மையாக...
Monday, 9 December 2013
இதுக்கு கொடுக்கலாம் மானியம்!

நான் சமீபத்தில், சி.எப்.எல்., பல்பு வாங்க, கடைக்குச் சென்றேன். 5 வாட்ஸ் பல்பு விலை கேட்டேன், ரூபாய் 110 என்று சொன்னார் கடைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. மேலும், 15 வாட்ஸ் பல்ப்பின் விலை ரூபாய் 175; 20 வாட்ஸ், ரூபய் 225; 30 வாட்ஸ், ரூபாய் 370; 40 வாட்ஸ், ரூபாய் 450 என்று, கடைக்காரர் கூறியதும் தலைசுற்றி விட்டது.மின்சாரத்தை மிச்சப்படுத்த சி.எப்.எல்., விளக்கை பயன்படுத்த அரசு சொல்கிறது. ஆனால், அதன் விலை, ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம் கொடுக்கிறது. இது ஏழை மக்களை சென்றடைய பல காலம் ஆகும். ஆகவே, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி, மலிவு விலையில், மக்களுக்கு கிடைக்குமாறு...
இவர்கள் தேவையா?

"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துப்பார்' என, ஒரு பழமொழி உண்டு. அதுவும், இன்று மண்டபம், சாப்பாடு மற்ற செலவுகள் என, லட்சக்கணக்கில் பணம் செலவாவதால், பெற்றோர் விழிபிதுங்கிப் போகின்றனர். இந்த நிலையில், சில பண முதலைகளோ... தங்களுடைய டாம்பீகத்தை காட்ட, கல்யாண விழாவில் கலந்து கொள்ள, சினிமா நட்சத்திரங்களை அழைக்கின்றனர்.இதற்கு, பல லட்ச ரூபாய் செலவு செய்கின்றனர்.பிரபல இந்தி நடிகர் ஒருவர், கல்யாணங்களில் கலந்து கொள்ள, ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார். இவர்கள், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்துவர் அல்லது முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, அளவளாவுவர். இப்படி, இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சேவை நிறுவனங்களுக்கும்,...
முல்லாவை அறிந்து கொள்ளுங்கள்!
இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208_ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284_ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர்பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம்...
எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்!

கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும் இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.தங்கம் மட்டுமே ஆப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண். இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார...