
என் வயது 35. கடந்த பத்து வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்படுகிறேன். எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் பயன் இல்லை. உள்ளங்காலில் எரிச்சலும், குடைச்சலும் வேறு இருக்கிறது. இதனால் நான் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். தூக்கமின்மையாலும் தவிக்கிறேன். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா? உள்ளங்கால் எரிச்சல் என்பது சூடு எனும் குணத்தைக் கொண்ட பித்த தோஷத்தின் சீற்றம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படக் கூடும். இந்தக் கலப்பினால் ரத்தம் கெட்டுவிடக் கூடும். அவரைக்காய், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்பான மதுபானம், மோர், தயிர், உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றின் சேர்க்கை, சாப்பாட்டிற்குப் பிறகு பகலில் படுத்து உறங்குவது, குடையும் காலில்...