.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 30 November 2013

ரத்தம் வெளியேறும் நேரம்!

  ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரத்தில் உறைகிறது என்பதை கணக்கிடுவதே ரத்தம் உறையும் நேரம் ஆகும். இதற்கு ஒரு சோதனையை செய்கின்றனர். விரல் நுனியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு சிறிது அழுத்தி தேய்கின்றனர். இந்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் சுத்தமான ஊசியை கொண்டு விரல் நுனியில் குத்துகின்றனர். அப்போது ரத்தம் வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தை குறித்து கொள்கின்றனர்.பின்னர், "பிளாட்டிங்' பேப்பரை வைத்து ரத்தத்தை ஒத்தி எடுக்கின்றனர்.ரத்தம் வெளிவருவது...

ஆக்டர் அஜித் vs டாக்டர் அஜித்!

  '' 'நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப எமோஷனலா இருக்கு சிவா’னு நாசர் சார் சொன்னார். 'அஜித் சாரை வெச்சு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும்னு நினைச்சா, இவ்வளவு காமெடி இருக்கே’னு ஒளிப்பதிவாளர் வெற்றி ஆச்சர்யப்பட்டார். மேக்கிங்லயே 'வீரம்’ இவ்வளவு பாராட்டுக்களை வாங்கினது சந்தோஷமா இருக்கு!''  - அஜித்தின் அடுத்த படப் பரபரப்பைப் பற்ற வைக்கிறார் 'வீரம்’ இயக்குநர் சிவா. '' 'வீரம்’ படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டியை முதன்முதலா சந்திச்சப்போ, 'எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு இந்தப் படம் இருக்கணும். குழந்தைகள்ல இருந்து தாத்தா பாட்டிகள் வரை எல்லாரையும் தியேட்டருக்குக் கொண்டுவந்து...

நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும்  ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். - ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக  நிகழும். முதலில் தோல் தன் வேலையைத்  தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை  உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்ற...

பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!

சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எதிலிருந்து இந்த ஒளி தோன்றியது என்பதனை பொலிஸாரினாலும் கண்டறிய முடியவில்லை.இந்த ஒளியை பார்வையிட பிரதேசத்தைச் சேர்ந்த பலர்...

கமலும் பாலாவும் காட்டிய வழி இது! - சடச் சடக்கும் சீரியஸ் விவேக்!

  கையிலும் பையிலும் மரக்கன்றுகளோடு அலைந்து திரியும் ’சனக்களின் கலைஞன்’ விவேக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குத் திரும்பியிருக்கிறார். இயக்குனர் பாலாவின் உதவியாளர் ஆர்.கண்ணன் இயக்கும் ‘நான்தான் பாலா’ படத்தில் முதல்முறையாக, நகைச்சுவை உதறிவிட்டுச் சீரியஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.இந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொண்டார் விவேக்? அவர் வழிபடும் அப்துல் கலாமிடம் அவருக்குப் பிடிக்காதது என்ன? இன்னும் பல சூடான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் விவேக்... நகைச்சுவை நடிகராக மட்டும் உங்களைப் பார்க்க முடியவில்லை. சமூக ஆர்வலராக இயங்குவதற்கு அப்பால், ஒரு கவிஞராக, ஒரு கட்டுரையாளராக ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். எப்போது எழுதத்தொடங்கினீர்கள்?  உண்மையில்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top