.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 9 November 2013

பசங்க, அம்மா பையனா இருந்தா என்ன பிரச்சனை?

இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் பார்ப்போமா!!!ஆண்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம்...

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர்....

முத்தான முப்பது விஷயங்கள்!

* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.* பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை...

காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஆனால், இந்த மாநாட்டில்...

24 கரட் தங்கத்தில் ஆப்பிள் தயாரிப்புக்கள்!

கைப்பேசி மற்றும் டேப்லட் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமொரு புது முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது 7.9 அங்குல அளவுடைய Retina தொடுதிரையினைக் கொண்ட 24 கரட் தங்கத்தினால் ஆன iPad Mini மற்றும் iPad Air சாதனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது. இச்சாதனங்களின் விலையானது ஏறத்தாழ 1500 யூரோக்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top