45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ அல்லது உங்க அம்மாவிடமோ ஒரு திடீர் மாற்றத்தை காண்கிறீர்களா?..
“ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க..”
“முன்பு எல்லாம் சாதுவா இருப்பாங்க..இப்ப ரொம்ப கோவ படறாங்க…ஒரு சின்ன விஷயத்துக் க்கெல்லாம் கத்தறாங்க..பேசவே பிடிக்கல ரொம்ப சோம்பேறியாயிட்டா…எப்டி வேலை செய்வா இப்ப எப்ப பார்த்தாலும் மூதேவியாட்டம் படுத்துகிட்டே இருக்கா “
இப்படி ஒரு சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்களா?
கொஞ்சம் ரிலாக்ஸ் ..!அவங்க மெனோபாஸ் பீரியட்ல இருக்காங்க..!
அவங்க உடம்புல பல விதமான ஹார்மோன்கள் படுத்தும் பாடின் வெளிப்பாடுதான் இந்த மாதிரியான கோபங்களும் எரிச்சல்களும்..பல பெண்களுக்கே தெரியாமல் அவஸ்தையுடன் அவர்கள் கடக்கும் பருவம் தான் இந்த...
Wednesday, 6 November 2013
மங்கள்யான் தகவல்களை அபடேட்டாக அறிய பேஸ்புக் பேஜ் தொடங்கியது இஸ்ரோ!
மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’...
11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!
உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும்.
இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் நடத்திய...
தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?

தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?
கடந்த சில நாட்களாக பதிவுகளைத் தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை....
தகவல் தெரிந்தவர்கள் இங்கே கருத்துரைக்கலாம்!...................
...
மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!
சமீப காலமாகவே மகாத்மா காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன. அந்த வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்ட போது அது ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி தனது ஆடைகளுக்கான துணியை சொந்த ராட்டையில் தாமாகவே நூலாக திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்தி வந்தார்.வெள்ளையர் ஆட்சி காலத்தில் சிறைவாசத்தை அனுபவித்த போதெல்லாம் அவருக்கு துணையாக...