.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

usb மூலம் உங்கள் கணணியை லாக் செய்ய

PenDriverGrande1

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதையே சாவியாக பயன்படுத்த முடியும்.


இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம். இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும்.
மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?


இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.


3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.


4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.


5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)


6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.


7. இறுதியாக கிரியேட் கீ — Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.


அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.


30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும். இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும். இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்.


இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.
ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.


ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.



முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…!

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்..!

celkon-launched-new-budget-mobile-for-rs-3999-in-india 
 
செல்கான் மொபைல் நிறுவனம் புதிய செல்கான் ஆண்ட்ராய்ட் மொபைலை வெளியிட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் ரூபாய் 3,999 க்கு இன்று முதல் கிடைக்கும் என அறிவித்துள்ளது செல்கான் நிறுவனம்.

Celkon Campus A15 என்ற பெயருடைய இந்த மொபைலானது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஆகும். இதில் அடங்கியுள்ள சிறப்பு வசதிகளைப் பார்ப்போம்.

3.5 அங்குல HVGA திரையுடன் உள்ள இப்போன் Android 4.2.2 இயங்குதளத்தில் இயங்குகிறது.

இப்போனை இயக்கும் சிறந்த செயலியாக 1GHz dual core processor அமைந்துள்ளது.

நிழல்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க 3.2 MP rear Camera அமைந்துள்ளது.
1400 mAh battery ஆனது போன் இயங்கப் போதுமான மின்சக்தியைக்கொடுகிறது.
Dual SIM வசதியுடன் கூடிய 2G Connectivity அமைந்துள்ளன.

மேலும் இதில் 256 MB RAM, உள்ளக நினைவகம் 512MB, மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தும் வசதி, வைஃபை (Wi-Fi), புளூடூத் (Blue tooth), மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் (Micro USB Port) ஆகியனவும் அமைந்துள்ளன.


இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் ரீடெய்லர் ஸ்டோர்களிலும் இந்த செல்கான் பட்ஜெட் ஸ்மார்ட் போன் கிடைக்கும்.

****************************

Celkon Campus A15 runs on Android 4.2.2 and is powered by 1GHz dual-core processor.

The phone also comes with 3.5-inch HVGA display, 3.2MP rear camera, 1400 mAh battery, dual-SIM support and 2G connectivity.
A15 also packs 256MB of RAM, 512MB of internal storage, microSD card slot, Wi-Fi, Bluetooth and MicroUSB port.

Although, most of the specifications of the phone are pretty decent, the presence of meager 256MB RAM to run Android 4.2 Jelly Bean is worrisome.

If only the company had provided 512MB of RAM, the phone would have been a pretty decent option for budget Android smartphone buyers.

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட!

1330711326_microsoft_excel_2010_109374233

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்ப…தில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்.
இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்.


மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது திறக்கும் பாப் அப் விண் டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிற தோ அங்கே இழுத்து விடவும். இப்பொ ழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினை க் கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும்

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் 41 மெகாபிக்சல் நோக்கியா மொபைல்!

10-1381383739-09-1381310659-procamera
 
நோக்கியா நிறுவனம் அண்மையாக 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியும். நோக்கியா லூமியா 1020 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது. நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா தான் விளங்குகிறது, டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது. 
 
 
இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம். 4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன் வின்டோஸ் 8 ஓஎஸ் 1.5 GHz டியுல் கோர் பிராசஸர் 41 மெகாபிக்சல் கேமரா 1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 2ஜிபி ராம்(RAM) 32ஜிபி மெமரி 7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் 3ஜி,4ஜி wi-fi 158 கிராம் 10.4mm 2000mAh பேட்டரி டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிற்க்கு படங்களை தெளிவாக பிடிக்கிறது, இதன் கேமராவின் சிறப்பு என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
 
 10-1381384330-25-1380109961-4copy

நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.
 
 
10-1381384251-25-1380109932-2copy 
 
 
நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.
 
 
10-1381383995-09-1381311077-nokialumia1020-5 
 
 
நோக்கியா லூமியா 1020 இருட்டில் எடுக்கப்பட்ட போட்டோவில் நீங்கள் பிரைட்னஸ்யை கூட்டினால் எவ்வளவு வெளிச்சமாக தெளிவாக தெரிகிறது என்பதை பாருங்கள்.

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய..

os 
நாம் பெரும்பாலும் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்வதேன்றால் டி.வி.டி களையோ அதிகம் நம்பி இருப்போம். மேலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம்.

ஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம். இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம். (இதன் மூலம் நாம் டிவிடி சிஸ்டம் டிஸ்க் மூலம், விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது போல, இதனைப் பயன்படுத்தியும் இன்ஸ்டால் செய்திட முடியும்.)

இதற்கான முதல் தேவை, விண்டோஸ் சிஸ்டத்தின் ஐ.எஸ்.ஓ. பைல். இதனைத் தேடிப் பிடித்து, காப்பி செய்து, கம்ப்யூட்டரின் ட்ரைவ் ஒன்றில் முதலில் பதிந்து வைத்திருக்க வேண்டும். தேவையான சாதனங்கள்: பூட் செய்திடக் கூடிய, யு.எஸ்.பி. ட்ரைவினத் தயார் செய்திட, குறைந்தது 4 ஜிபி இடம் உள்ள, பிளாஷ் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். தயார் செய்து எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே தரப்பட்டுள்ளது போல செயல்படவும்.

 மேலே சொன்னபடி தயார் செய்த யு.எஸ்.பி. ட்ரைவினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி ட்ரைவில் இணைக்கவும். பின்னர் Start மெனு செல்லவும். அங்கு cmd என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் தேடல் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து diskpart என டைப் செய்து என்டர் தட்டவும். diskpart என்பது, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ட்ரைவ் பார்ட்டிஷன் மற்றும் ட்ரைவ்களைக் கையாளும் ஒரு யுடிலிட்டி புரோகிராம்.

diskpart புரோகிராம் இயங்கத் தொடங்கும் போது, கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளி DISKPART என மாறியிருப்பதனைக் காணலாம். அடுத்து list volume என்ற கட்டளைச் சொல்லை டைப் செய்திடவும். இந்தக் கட்டளை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் வால்யூம்கள் அனைத்தையும் பட்டியலிடும்.
03-1380804058-3copy

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. இந்தக் கட்டளையின் விளைவாகக் காட்டப்படும் தகவல்களிலிருந்து, நமக்குத் தேவைப்படும் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் 8 ஜிபி ப்ளஷ் ட்ரைவ் பயன்படுத்தியதால், 7399 எம்பி என்ற டிஸ்க்கினைத் தேர்ந்தெடுக்கவும்.
 
03-1380804099-4copy 

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. இங்கு சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறுதலாக, பெர்சனல் கம்ப்யூட்டரின் ட்ரைவினைத் தேர்ந்தெடுத்தால், அந்த ட்ரைவில் உள்ள டேட்டா அழிவதுடன், விபரீதமான விளைவுகளும் ஏற்படலாம்.

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து select volume என்ற கட்டளையைத் தரவும். இந்தக் கட்டளையினை, ட்ரைவ் ஒன்றின் எண் பெயரோடு தர வேண்டும். கட்டளைக்கான முடிவுகளில், முதல் காலத்தில் காட்டப்படும் எண் இதுதான். சரியான எண்ணைத் தரவும். இப்போது நாம் சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து விட்டதால், Clean கட்டளையினைக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை, அந்த ட்ரைவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நீக்கிவிடும். நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன் ஸ்ட்ரக்சர் (Partition Structure) அமைக்க ஏதுவாக, ட்ரைவினை வடிவமைக்கும்.
 
03-1380804165-all-mobile-os-logoscopy 
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து நாம் முதன்மைப் பிரிவினை (Primary Partition) அமைக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து பூட் டிஸ்க்குகளிலும், முதன்மை பார்ட்டிஷன் இருக்க வேண்டும். create partition primary என்ற கட்டளையைத் தரவும்.
 
03-1380804181-installingxpthroughpendriveorthumbdrivecopy 
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து நாம் குறிப்பிட்ட டிஸ்க்கினை பார்மட் (Format) செய்தாக வேண்டும். விண்டோஸ் தற்போது NTFS என்ற வகை டிஸ்க் பார்ட்டிஷனை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. எனவே format fs=NTFS என்ற கட்டளையைக் கொடுக்கவும். பார்மட் செயல்பாடு முடிந்தவுடன், கமாண்ட் விண்டோவினை மூடவும். அடுத்து மிக முக்கியமான செயல்பாட்டிற்குச் செல்லப் போகிறோம். ஏற்கனவே எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐ.எஸ்.ஓ. பைலின் Boot போல்டருக்குச் செல்லவும். அடுத்து காலியாக உள்ள இடத்தில், shift+right கிளிக் செய்து, Open command window here என்று இருப்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.

03-1380804217-os24-1stscreencopy
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து கமாண்ட் விண்டோவில், bootsect.exe/nt60 என்ற கட்டளையைச் சரியான ட்ரைவ் எழுத்துடன் அமைக்கவும். அதாவது, யு.எஸ்.பி. ட்ரைவ் காட்டப்படும் ட்ரைவ் எழுத்து. என்னுடைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. ட்ரைவ் J: ஆகக் காட்டப்படுவதால், நான் அந்த எழுத்தினையே இணைத்தேன்.
 நீங்கள், உங்கள் கம்ப்யூட்டருக்கேற்ற எழுத்தினை இணைத்து அமைக்கவும். அடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரரில், எந்த ட்ரைவில் ஐ.எஸ்.ஓ. பைல் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பதியப்பட்டதோ, அந்த ட்ரைவில் உள்ள ரூட் (root) போல்டருக்குச் செல்லவும். இங்கு boot, efi, sources, support, upgrade என்பன போன்ற போல்டர்கள் இருக்கும். இங்கு தான் bootmgr, autorun.inf ஆகிய பைல்களும் இருக்கும். இந்த போல்டர் மற்றும் பைல்கள் அனைத்தையும் காப்பி செய்து, பூட் யு.எஸ்.பி. ட்ரைவில் பதியவும்.
 
03-1380804181-installingxpthroughpendriveorthumbdrivecopy 
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அவ்வளவுதான்! இப்போது உங்களிடம் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திடும் வகையிலான யு.எஸ்.பி. ட்ரைவ் தயாராகி உள்ளது. இதனை சிக்கல்கள் ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ள படி நிலைகளின் படி சரியாகச் செயல்பட்டு, இந்த பூட்டபிள் டிஸ்க்கினைத் தயார் செய்திட வேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top