திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது
சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் அஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக் கொண்டுருக்கிறது ஏறக்குறைய 35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப் பட்டது டன் எடை கொண்ட அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள்.
அதற்கான...
Monday, 7 October 2013
களஞ்சியம் இலவச அகராதி!
இணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ்,
ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க்
டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக்
கிடைக்கிறது. இதன் பெயர் ""களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள
முகவரி
www.ekalai.com/kalanjiyam/dowload/.
இந்த
தளத்திற்குச் சென்றவுடன் அகராதிக்கான கோப்பாக KalanjiamDictionarySetup என்ற கோப்பு
கிடைக்கிறது. இதன் அளவு ஏறத்தாழ 189 எம்.பி. ஆகும். இதனை டவுண்லோட் செய்து, பின்னர்
அதன் மீது டபுள் கிளிக் செய்திட, அகராதி நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது.
அகராதியைப் பயன்படுத்த, கண்ட்ரோல் + டில்டே(கீ போர்டில் எண் 1 கீக்கு முந்தைய கீ)
(Ctrl+~) கீகளை அழுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், அகராதிக் கட்டம் தாண்டி,
திரையில் கிளிக் செய்தால்,...
ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்!
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார். இந்த...
மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை!
மைசூரில் 403-ஆவது தசரா விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திர சேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி என்றால், மைசூர் தசரா விழாவை நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது. அத்தனை உலகப் புகழ் பெற்ற பெருங் கொண்டாட்டம் இது! மைசூரில் ஆண்டுதோறும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான ஆரம்பம்...
விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்: கர்நாடகாவில் அதிரடி!
மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு கணவனை இழந்த பெண்கள் இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலுக்குள் நுழைந்த பின் அன்னபூர்ணேஸ்வரி, ஹனுமான், நவக்கிரகங்கள், கிருஷ்ணர், சாரதா விக்ரகங்களுக்கு அவர்கள் பூஜை செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக பூஜை செய்யும் முறைகள் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
இதற்கு காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில், “மாறி வரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக்...