நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாகிறார். இதற்காக, உடற்பயிற்சி, நடனம் என உடம்பை மெருகேற்றி வருகிறார்.
பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா, துளசி சினிமாவுக்கு வந்துள்ளனர். இருவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து பழைய கனவுக் கன்னியான ஸ்ரீதேவி மகள் ஜான்வியும், சினிமாவில் அறிமுகமாகிறார்.
இரு வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஸ்ரீதேவியை அணுகி தங்கள் படங்களில் ஜான்வியை அறிமுகப்படுத்த கேட்டனர். ஆனால் சிறுமியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார். தற்போது ஜான்வி வளர்ந்து கதாநாயகிக்குரிய புது பொலிவோடு காட்சி தருகிறார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு ஜான்வியை ஸ்ரீதேவி அழைத்து வந்திருந்தார். கூட்டத்தினரை ஜான்வி அழகு வசீகரித்தது....
Saturday, 5 October 2013
'பென்சில்' படம் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாகிறார்!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரியா ஆனந்த் ஏற்கனவே நூற்றுயென்பது, எதிர்நீச்சல், வாமணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.
1 1
...
மூடருக்கு அறிவுரை கூறலாமா!! (நீதிக்கதை)

ஒரு காட்டில்...ஒரு நாள் ...நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.
ஒரு குரங்கு குளிர் தாங்காமலும்..மழையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டது.
மரத்தில் பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு அடக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
குரங்கைப் பார்த்து பறவை மனம் பொறுக்காமல் '
குரங்காரே..என்னைப்பாரும்...வெய்யில் மழையிலிருந்து என்னையும் என்
குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.அதனால் தான் இந்த
மழையிலும் சுகமாய் இருக்கிறேன்.நீரும் அப்படி செய்திருக்கலாமே என்றது...
குரங்கிற்கு கோபம் தலைக்கேறியது..'உன்னைவிட வலுவானவன் நான்..எனக்கு நீ புத்தி சொல்கிறாயோ....
இப்போது...
வெல்ஸ் பார்க் - பன்னீர்செல்வம் பார்க்காக பெயர் மாறியது எப்படி?
ஈரோடு நகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா எப்போதுமே பரபரப்பாக காணப்படும். பொதுவாக ஒரு இடத்தில் ஒரு தலைவரின் பெயரில் பூங்கா அல்லது சாலை பெயர் வைப்பதற்கு ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக இருக்கும். தற்போது பன்னீர்செல்வம் என அழைக்கப்படும் இடத்தில் ஒரு பூங்கா கூட கிடையாது. பன்னீர்செல்வம் சிலையும் கிடையாது. இந்த பெயர் உருவானதன் பின்னணியில் பெரிய வரலாறே உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதிக்கு வெல்ஸ் பார்க் என்று தான் பெயர். ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தவர் வெல்ஸ். அப்போது அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் இருக்கும். மரங்களின் மத்தியில் மாலை நேரத்தில் வெல்ஸ் செல்வது வழக்கம். இதனால் வெல்ஸ் பார்க் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
ஈரோடு நகரசபை தலைவராக...
நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம்!
“நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் (01.10.13) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.” என்று நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் விழா கடந்த 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் சிவாஜியின் பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாடவில்லை....