.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 September 2013

‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி...

மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!

இந்தோனேஷிய நாட்டில் நடந்த உலக அழகி 2013ம் ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது நிரம்பிய மேகன் யங் இறுதி சுற்றில் வென்று கிரீடம் சூட்டப்பட்டார். இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் 63வது வருட உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகன் யங் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவில் பிறந்த யங் தனது 10வது வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.   இநதோனேஷியாவில் நடந்த...

சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை.- அமைச்சர் விளக்கம்!

“இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”என்று தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர...

கிரெடிட் கார்ட மோசடியா?வங்கிகளே பொறுப்பு!: ரிசர்வ் வங்கி உத்தரவு!

வங்கி கிரடிட் கார்டுகளில் ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.அத்துடன் இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.   கிரெடிட் கார்ட் திட்டத்தில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருவதால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை ஜூலை மாதத்திற்குள் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. பணம் எடுக்கும் இயந்திரங்களில் மின்னணு சிப் மற்றும் கிரெடிட் கார்ட் உடையவர் பணம் எடுக்கும்போது அவரை...

உலக இதய நாள் – செப்டம்பர் 29!

இந்த உலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப் படுகிறது.இந்நிலையில்தான் செப்டம்பர் 29-ம தேதியான இன்று உலகம் முழுவதும், ‘இதய நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது.  உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான். உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top