.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 21 September 2013

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு!

In kelvarak calcium, iron is high. Kelvarak than the calcium in milk is higher in calcium.


கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.  கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.


தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய்  பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும்.  கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.


இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.  கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்   இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்!


 Good for the Eyes: Sapota contains a high amount of Vitamin A. According to research, Vitamin A helps in improving vision even   during old age.




கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை  கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம்  எடுத்துக்கொள்ளலாம்..

இதய பாதுகாப்பு: இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில்  மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.  தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

ஆற்றலை வழங்கக்கூடியது:  நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு: வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை  ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை  வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு  வழங்குகிறது.

எலும்பை உறுதிப்படுத்தும்: எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை  சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்: சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g  அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பித்தம் நீக்க: சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும்  இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள்  கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.

யூ ட்யுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய புதிய அம்சங்கள்!


 


கூகிளின் சொந்தமான ஆன்லைனில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் யூ ட்யுப், தற்பொழுது பயனர்களுக்கு(users) மொபைல் அப்ளிக்கேஷனில் வீடியோக்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்து பார்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஒரு புதிய வலைப்பதிப்பில்(blog), யூ ட்யுப்பின் புதிய அம்சத்தை அடுத்து ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

பயனர்கள் யூ ட்யுப்பில் வீடியோக்களை டவுன்லோட் செய்த போது தங்களுடைய இன்டர்நெட் இணைப்பு பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆஃப்லைனில் வீடியோக்களை தொடர்ந்து டவுன்லோட் செய்து பார்க்கும் திறனை கொண்டுள்ளது. எனவே, யூ ட்யுப் டவுன்லோட் செய்து வீடியோக்களை சேமித்து வைக்க காப்புரிமை(copyright) மற்றும் அனுமதிக்கும் பிரச்சினைகள்(licensing issues) ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்த புதிய அம்சத்தில் சிறிது நேரம் வீடியோக்களை கேச்(cache) மெமரியில் சேமித்து வைக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதனால் இன்டர்நெட் இணைப்பு பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட தொடர்ந்து யூ ட்யுப் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதி இந்த புதிய மொபைல் அப்ளிக்கேஷனில் உள்ளது.

யூ ட்யுப்பில் ஏற்க்கனவே ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனில் வீடியோக்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இன்னும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது.

'இந்த புதிய அம்சம் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த நேரத்தில் வீடியோக்களை சேமித்து வைத்து பார்க்கவும் அனுமதிக்கின்றது. மேலும், தற்பொழுது யூ ட்யுப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வீடியோக்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோனி SmartWatch 2 இந்தியாவில் அறிமுகம்!



சோனி நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் சோனி SmartWatch 2 இந்திய கடைகளில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சோனி SmartWatch 2 கடிகாரத்தின் விலை ரூ.14.990 ஆகும். இந்த smartwatch, NFC வழியாக மற்ற சாதனங்களுடன் இணையும். 1.6MP கேமரா கொண்டுள்ளது.

சோனி SmartWatch 2, 220x176 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. பெரிய 1.6 இன்ஞ் திரை உள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளவும் மற்றும் உரை(text) செய்திகள், மின்னஞ்சல்கள், பேஸ்புக் அல்லது டிவிட்டர், காலெண்டர் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அறிவிப்புகளை அண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து பெறலாம்.

ஸ்மார்ட் கேமரா அப்ளிக்கேஷன்ஸ் பயன்படுத்தி தொலைவிலிருந்து SmartWatch மூலமாக புகைப்படம் எடுக்கலாம். தரமான மைக்ரோ-USB கேபிள் வழியாக சார்ஜ் செய்ய முடியும். சோனி SmartWatch 2 waterproof (IP57) கொண்டுள்ளது. SmartWatch 2 நான்கு வண்ணங்களை வரும்.

சோனி SmartWatch 2 சிறப்பம்சங்கள்:

1.6 இன்ஞ்,
220 × 176 காட்சி
அலுமினியம் உடல்
மைக்ரோ USB சார்ஜ்
பெரும்பாலான Android தொலைபேசிகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருக்கும்
NFC இணைப்பு
ப்ளூடூத் 3.0 கொண்டுள்ளது
பேட்டரி 3 முதல் 4 நாட்களுக்கு பயன்படுத்தப்படும்
கேமரா, Mic அல்லது ஸ்பீக்கர்கள் இல்லை


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 சிறப்பம்சங்கள்!



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்பொழுது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 என்று அழைக்கப்படும் புதிய டேப்லெட்டை வெளியிட்டுள்ளது. இந்த டேப்லெட் வாய்ஸ் காலிங் வசதி கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 விலை ரூ. 16,500 ஆகும்.


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 சிறப்பம்சங்கள்:


8 இன்ஞ் மல்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே
ரெசலூஸன் 1024*768 பிக்சல்ஸ்
1.2GHZ மீடியாடெக் கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi,
3ஜி
புளுடூத் 3.0
4800mAh பேட்டரி

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top