.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 20 September 2013

'ராமனும் - பேசும் கிளியும்'.(நீதிக்கதை)

    யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள் ..கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்,,'இந்தக் கிளி பேசும் கிளி 'என்றான்.   ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்...வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான்.ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை.. அதை அவன் எடுத்துக்கொண்டு ..தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.   அந்த வியாபாரியோ ..அந்தக் கிளியை வாங்கி ..பரிசோதிப்பது போல பாசங்கு செய்து ..இந்த கிளிக்கு காது கேட்காது ..அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு அதனால் பேச இயலவில்லை..என்று சொல்லி ..வேறு ஒரு கிளியைக் காட்டி...

Thursday, 19 September 2013

பயன்தரும் 10 - இணையதளங்கள்!

கம்பியூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.   அதனால், எளிய முறையில் குறிப்பு களைத் தரும் தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் தற்போது பார்க்கலாம். www.quotedb.com:    நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம். www.photonhead.com:    டிஜிட்டல் கெமரா வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால்,...

இணையத்தில் நாம் காணும் ஒரு பக்கத்தை pdf ஆக மாற்ற வேண்டுமா?

இன்று நாம் இணையத்தில் ஒரு தளத்தின் பக்கத்தை(page) எவ்வாறு  pdf ஆக மாற்றுவது என்பதை பற்றி பாப்போம் ...  நாம் சில நேரங்களில் ஒரு தளத்தை படித்துக்கொண்டிருக்கும்போது அந்த பக்கத்தில் தகவல்கள் நிறைய இருந்தால் நாம் உடனடியாக அதை பூக்மார்க் செய்துகொள்வோம் எத்தனை நாள் இப்படி பூக்மார்க் செய்வது ?அப்படி செய்துகொண்டே போனால் நம்முடைய பூக்மார்க் அதிகமாக மாறி நம்மால் குறிப்பிட்ட பக்கத்தை அல்லது ஒரு தளத்தை கண்டுபிடிக்க கஷ்டமாக போய்விடும் ...இக்குறையை தீர்க்க நாம் அந்த பக்கத்தையோ அல்லது ஒரு தளத்தையோ  pdf ஆக மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவே பிறகு தேவைப்படும்போதெல்லாம் அதை பார்த்துக்கொள்ளலாம் இணைய இணைப்பும் தேவை இல்லை...

வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?

முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம். சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும்.  அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும் கூட தானே செய்து கொள்ளக் கூடாது. இனி வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முகத்தினை நரம்புகள் தெரியாமல் மசாஜ் செய்யக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி விட்டு சில வகை பேக்குகளை மட்டுமே போடலாம்.  - உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் வாசலீன் அல்லது கிளிசரின் தடவவும், பால், ஓட்ஸ், பாதம் எண்ணெய்...

மாசு மருவற்ற சருமத்திற்கு தேன்!

கத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள்.  பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.  அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும். சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top