.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 6 September 2013

கேரள கோயில்களில் உள்ள தங்கம் பற்றி விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி!


திருவனந்தபுரம் : கேரள கோயில்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கேரள கோயில் கழகத்திற்கு ரிசர்வ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

 
ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள கடிதம் குறித்து குருவாயூர் தேவஸ்தான் போர்டு தலைமை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் இந்த வேண்டுகோள் குறித்த தகவல் கோயில் மேலாண்மை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளோம்; கோயில்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மேலாண்மை குழு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரி தெரிவித்துள்ளார். 
 


கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் 5 விதமான தேவஸம் போர்டுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் திருவாங்கூர் தேவஸம் போர்டு தான் பெரியது. கேரளாவின் பிரபலமான வழிபாட்டு ஸ்தலமான சபரிமலை, திருவாங்கூர் தேவஸம் போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தை உறுதி செய்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சலிம் கங்காதரன், புள்ளி விபர சேகரிப்பு அடிப்படையிலேயே இந்த தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும், கேரள கோயில்களில் உள்ள தங்கத்தை வாங்கும் திட்டம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

 திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட்டு அறிக்கை சம்ர்ப்பிக்க 2011ம் ஆண்ட ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 5 அறைகள் திறக்கப்பட்டு அவற்றின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த விலைமதிப்பற்ற நகைகளை மதிப்பீடு செய்தனர். இருப்பினும் பி அறை இதுவரை திறக்கப்படவில்லை. 5 அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. பத்மநாபசுவாமி கோயில் கருவூலத்தை போன்ற மற்ற கோயில்களில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை கண்க்கிடவே ரிசர்வ் வங்கி, இந்த தகவலை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை!


 


தன்னுடைய புதிய அறிமுகமான, லூமியா 925 மொபைல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில், நோக்கியா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 34,169 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இது அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கான முன் பதிவுகள் பெறப்பட்டன. இப்போது விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள்;

1. 4.5 அங்குல அகலத் திரை. சூப்பர் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்.


2. போன் மேலாக மெட்டல் கவர்.


3. டூயல் கோர் குவால்காம் ப்ராசசர் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம்.


4. விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.


5. ஆப்டிகல் இமேஜ் திறனுடன் கூடிய 8.7 எம்.பி. கேமரா. எல்.இ.டி. ப்ளாஷ். வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்.


6. 1.2 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா,


7. ஐ.எச்.எப். ஸ்பீக்கர், இரண்டு மைக், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ.


8. புளுடூத் மற்றும் வை-பி இணைப்பு.


9. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன்.


10. ராம் மெமரி 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி.


வெள்ளை, கிரே மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
மேலே அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான விலையில், சில இணைய தளங்கள் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலை மொபைல்கள்!


பட்ஜெட் விலையிட்டு, புதியதாய் வந்த மொபைல் போன்களைப் பார்க்கையில், இரண்டு மொபைல் போன்கள் கண்களில் தட்டுப்பட்டன. இவை விற்பனைக்கு வந்து சில மாதங்கள் ஆனாலும், தற்போது பரவலாக, விருப்பப்பட்டு வாங்கப்படுகின்றன. அவை,

1. நோக்கியா 109


அதிக பட்ச விலை ரூ.1,899 என விலையிடப்பட்டாலும், சில கடைகளில், விலை குறைவாகவும் கிடைக்கிறது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 110 x 46 x 14.8 மிமீ ஆகும். எடை 77 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போனில் ஆல்பா நியுமெரிக் எனப்படும் வழக்கமான கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரையில் 1.8 அங்குல டிஸ்பிளே கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ராம் மெமரி 16 எம்.பி, சிஸ்டம் மெமரி 64 எம்.பி. உள்ளது. கேமரா இல்லை. எம்.பி. 3 பிளேயர் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் கிடைக்கிறது.
800 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 7.8 மணி நேரம் வரை தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 790 மணி நேரம் தங்குகிறது.


2. ஸ்பைஸ் எம் 5030


அதிக பட்ச விலை ரூ. 1,149 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் பயன்பாடு, இரண்டு பேண்ட் அலைவரிசை செயல்பாடு, பார் டைப் வடிவமைப்பு, 1.8 அங்குல திரை டிஸ்பிளே, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ பதிவு, எஸ்.எம்.எஸ். வசதி, 1,600 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி என இதன் சிறப்புக் கூறுகள் உள்ளன. பட்ஜெட் விலையில் போன் தேடுபவர்களுக்கு, இரண்டு சிம் இயக்கம் கொண்ட இந்த போன் உகந்ததாக உள்ளது.

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.distancefromto.net
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 

அறிந்துகொள்வோம்!


விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top