.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 3 September 2013

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.


புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.






கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது.


இணையதள முகவரி: http://www.programr.com

இத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை  புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும்   பார்க்கலாம். 



கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

கேரட் மருத்துவ பயன்கள்!


 
 
 
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.
 
வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை. 
 
 100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

*சக்தி 41 கலோரிகள்

*கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்

*சர்க்கரை 5 கிராம்

*நார்சத்து 3 கிராம்

*கொழுப்புச் சத்து 0.2 கிராம்

*புரோட்டின் 1 கிராம்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 

கழுத்து கருமை நிறம் மறைய!


 news_03-04-2013_14ne-280x150


       சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.



வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்!


news_12-04-2013_80hair          


  கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.
 
* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.
 
* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.
 
* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
 

பற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்!

White-Teeth-off-to-left 


                அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டுவிட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.


                 மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்கி, பற்களின் இருக்குகளில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை தவிர்க்கவும், வாய் துர்நாற்றத்தையும் நீக்கவும், அத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

கடுகு எண்ணெய்

பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

சாம்பல்

அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

உப்பு

அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

வினிகர்

தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.

கிராம்பு எண்ணெய்

ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பங்குச்சி

பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

பிரியாணி இலை

பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top