இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி ஊடக இலவசமாக வழங்கிவந்த Viber நிறுவனம், தற்போது தனது தயாரிப்பை Desktop கணனிகளிலும் பயன்படுத்தக்கூடியதான வடிவமைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் கையடக்கத்தொலைபேசியில் இருந்து Desktop கணனிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடியதாகவும் ஒரே கணக்கினை டெக்ஸ்டாப், மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு சாதனத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியினை மற்றைய சாதனத்தில் படிக்கக்கூடியதாகவும், ஒரு சாதனத்தில் குறுஞ்செய்தி அழிக்கப்படும்போது மற்றைய சாதனத்திலிருந்தும் அழிந்துபோகக்கூடிய வகையிலும் இப்புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்துகொள்ள
...
Saturday, 31 August 2013
கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகம்!
உலகின் அனைத்து பாகங்களையும் ஒரே இடத்திலிருந்து பார்த்து அறிந்துகொள்ளும் Google நிறுவனத்தின் "Google Earth" சேவையில் முப்பரிமாண (3D) வடிவங்களைக் கட்டுப்படுத்தும் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"Google Earth" சேவையை பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் Google Earth Pro 7.1 பதிப்பு மென்பொருளின் ஊடாக இவ்வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என Leap Motion நிறுவனம் தெரிவித்துள்ளது.
முப்பரிமாண வரைபடத்தினை துல்லியமாக காட்டும் வசதியும், அது தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் வசதியும் Google Earth Pro 7.1 பதிப்பில் காணப்படுவதுடன் குறித்த முப்பரிமாண வரைபடங்களை பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தற்போது 199 டாலர்கள் எனும் சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும்
...
சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!
சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 கோடி ரூபாய் செலவிலும் இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில நாட்களில் சென்னை,...
நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!
தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.கடுமையான நுரையீரல் நோய் தொற்றின் காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ஆம் தேதி பிரட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து...
டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!
உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது.
கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாகமுடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப்பட்ட கதைகளில்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் தற்காலத்திலே அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு தன் ஆற்றலால் ராணியானவர்தான் டயானா.
வேல்ஸ் இளவரசி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், (ஜூலை 1, 1961 – ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி இவர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. உலகப்பிரசித்தம் பெற்றது. காதல் கனிந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டனர். இவர்களது...