
Http, Https என்ன வித்தியாசம்?
சாதாரணமாக நம்முடைய உலவியில் ஒரு வலைத்தளத்தைக் காண Uniform
Resource Locator என்று சொல்லக்கூடிய URL கொடுத்து நாம் விரும்பும் வலைத்தளத்திற்குச் செல்வோம். இந்த URL -ல் உள்ள முதன்மைப் பகுதி http. அல்லது https எனத் தொடங்கும். இவ்விரண்டும் ஒன்றேதானா? அல்லது வெவ்வேறா? இரண்டிற்குமுள்ள வித்தியாசம்தான் என்ன? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
முதலில் Http என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
http என்பது Hyper text transfer protocol என்பதன் சுருக்கமே http என்பது.
...