யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் ..........