.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 17 January 2014

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்......?

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப.................


 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

பிரவுசர் To பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்..!



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.

1. ஏற்கனவே பேக் அப் செய்து வைத்தவற்றிலிருந்து மாற்றம் செய்திட, "Favorites” பட்டனில் முதலில் கிளிக் செய்திடவும். "Add to Favorites” என்பதன் அருகே உள்ள அம்புக் குறியில் அடுத்து கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் "Import and Export” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Import /Export Settings விண்டோ தேர்ந்தெடுக்கப்படும்.

2. அடுத்து "Import from a file” என்ற ரேடியோ.................

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....



சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம். அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்...................

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

நலிவிலிருந்து மீண்ட நம்பிக்கை குரல்...!

குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி தட்டி

எழுப்பி உங்கள் பெயரென்ன என்று வினவினார் மருத்துவர். “என் பெயரை ஒரு வார்த்தையில் சொல்லவா? ஒரு வரியில் சொல்லவா? அல்லது ஒன்பது வரிகளில் சொல்லவா” என்று கேட்டு மருத்துவர்களையே அசரவைத்த நம்பிக்கை மனிதர் திரு. செங்குட்டுவன்.

பல தடைகள் தாண்டி வெற்றி பெற்ற செங்குட்டுவன் அவர் குரலை இழந்தது எவ்வாறு?

பல வருடங்களாக தன்னை ஆசிரியர் பணியில் கரைத்துக்கொண்ட செங்குட்டுவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தொலைபேசியில் யாருடனாவது பேசும்போது, திடீரென்று ஒலிக்கும் பெண் குரல் யாருடையது என்று எதிர்முனையில் இருப்பவர்கள் வினவுவார் களாம். பிறகுதான் இவர் குரல் பெண்களின் குரல் போல் மென்மையடைந்து வருவதை உணர்ந்திருக்கிறார். சிறிதும்...........

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

பத்து நிமிடத்தில் வெற்றி...?

வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லது எப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றி பெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டை பார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.

பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.

சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் ....................

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top